கொக்கட்டிக்சோலை பகுதியில் 1987 ஜனவரி 27ம் திகதி அன்று நடந்த படுகொலை!
நினைவுப்
பகிர்வும்
வரலாற்றுப்
பதிவும்
கிழக்கு
மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகிய
கிராமங்களில் ஒன்று மகிழடித்தீவு. அன்பு, உபசரிப்பு, நேர்மை, கல்வியறிவு, விடுதலை உணர்வு இப்படிப் பல விடயங்களைக் தாங்கிய
மக்கள் கூட்டம் வாழும் ஒரு பொன்னான கிராமம்.
மகிழ் ச்சியாக வாழும் அந்த மக்களுக்கு அவ்வப்போது
சோகங்களும் வந்து சேரும். அந்த சோகங்களும் விடுதலைப்
போராட்ட காலத்திலேயே அதிகம் அவர்களை ஆட்கொண்டது.
1987 ஜனவரி
27ம் திகதி அதிகாலை. விடுதலைப்போரில் நாம் சந்தித்த மற்றொரு
கரிநாள். வழமைபோல அன்றும் அன்றைய விடியலுக்காக மற்றயவர்கள்போல அந்த மக்களும் காத்திருந்தனர்.
விடுதலைப்போராளிகளும் தமது அன்றாட செயற்பாடுகளுக்காக
படுக்கையில் அமர்ந்திருந்து சிந்தித்தவர்களும் எழுந்து தமது சுடுகலன்களை தயார்நிலைக்கு
கொண்டுவந்தவர்களுமாக உற்சாகமாக அன்றைய நாளை சந்திக்க தயாராகிக்
கொண்டிருந்தார்கள்.
அன்றைய
கடைசி காவல் கடமை. 05.00 மணியிலிருந்து கடைசிக் காவல் கடமை எனதாயிருந்தது. 05.00 மணி வரை
காவல் கடமையிலிருந்த பொட் டம்மான் சற்றும்
ஓய்வெடுக்காமல் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். கடந்த சில வாரங்களாக அம்பாறை
மாவட்டத்தில் தமது அணி சந்தித்த
அனுபவங்களை சுவாரஸ்யமாக விபரித்துக் கொண்டிருந்தார். சில வாரங்களாக சில
விசேட நடவடிக்கைகளிற்காக பொட்டம்மான் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று
வெற்றிகரமான தாக்குதல்களைச் செய்து பல பகுதிகளில் போராளிகள்
சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தார்.
ஒரு
வருடத்திற்குப் பின் சந்தித்துக்கொண்ட நாம்
அன்றுதான் சற்று அதிகம் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது உரையாடலில் திடீரென
எம்மையறியாமலே நாம் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டு அமைதியாகி விட் டோம். இருவரது
கண்களும் சற்று வியப்புடன் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. சற்று நிதானித்துக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினோம்.
.......... எழுந்து வீட்டின்(எமது முகாமின்) வெளியே
சென்று அவதானித்தோம். அதிகாலை 05.45 - 06.00 மணி இருக்கும். தூரத்தே
உலங்குவானூர்திகளின் இரைச்சல்.... நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி வருவதாக உணர்ந்தோம். நிலைமை
வித்தியாசமாக இருக்கு, எதுக்கும் குமரப்பாவை அலேர்ட் பண்ணும்படி பொட்டம்மான் கூறினார். உடனடியாக ஒரு போராளியை அனுப்பி
குமரப்பா, நியூட்டன் போன்றோரையும் ஒரே இடத்தில் ஒன்று
சேரும்படி தகவல் அனுப்பினோம்.
அதேவேளை
சூட்டியின் முகாமிலிருந்து வோக்கி டோக்கியில் மூன்று உலங்குவானூர்திகள் கொக்கட்டிச்சோலை நோக்கி வருவதாக தகவல் தெரிவித்தது. உடனடியாக சகல முகாம்களையும் உஷார்ப்படுத்தினோம்.
மூன்று
உலங்குவானூர்திகளும் மணற்பிட்டிச் சந்திப் பகுதியில் வட்டமிடுவதை உறுதிப்படுத்திக் கொண்டு எமது போராளிகளை ஒன்றிணைக்கும்
முயற்சியில் முனைப்புக்காட்டினோம். மூன்று உலங்குவானூர்திகளிலும் வந்த ஸ்ரீலங்காவின் விசேட
அதிரடிப்படையினர் மணற்பிட்டிச் சந்தியில் இறக்கப்பட்டனர். ஒரு உலங்குவானூர்தி முகாமிற்கு
திரும்பிச் செல்ல மற்றைய இரண்டு உலங்குவானூர்திகளும் கீழே இறக்கப்பட்ட சிங்களப்
படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் படையினருக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மகிழடித்தீவில் நிலைகொண்டிருந்த நாம் ஒரு பிக்கப்
வாகனத்தில் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரத் தொடங்கினோம். எமது அணியில் குமரப்பா,
பொட்டம்மான், கமல், திலிப், சிங்காரம், பாபு, வடிவு உட்பட பதினொருபேர். நியூட்டன் உட்பட சில போராளிகளை தொலைத்தொடர்பு
சாதனங்களை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு காத்தான்குடி பகுதிக்கு நகரும்படி குமரப்பா அறிவுறுத்தியிருந்தார்.
மகிழடித்தீவில்
இருந்து கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டிச் சந்தியை
நோக்கி செல்வதே எமது இலக்காக இருந்தது.
கொக்கட்டிச்சோலை குடியிருப்புப் பகுதியூடாக வெளியேறி
மணற்பிட்டியை நோக்கி நகர முடியவில்லை. உலங்குவானூர்திகள்
எமது நகர்வைக் கண்டு கொண்டு எம்மைநோக்கி வந்து எம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன. உடனடியாக பிக்கப் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி நிலையெடுத்துக் கொண்டோம்.
இரண்டு உலங்குவானூர்திகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை
எதிர்கொள்ளும் அதேவேளை மணற்பிட்டியில் இறக்கப்பட்ட இராணுவத்தினரின் முன்னகர்வுகளையும் தடுத்து தாக்குதல் நடாத்தவேண்டிய நிலையிருந்தது. எமது அணி சிறியதாக
இருந்தாலும் சுடும்வலு கனமாகவே இருந்தது. ஆனாலும் சகலரிற்கும் பொட்டம்மான் வெடிபொருட்களை மட்டுப்படுத்தி பாவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். ஏனெனில் மேலதிக வெடிபொருள் விநியோகம் உடனடியாக எமக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் சந்தேகமாக இருந்தன.
வவுணதீவிற்கூடாக
முன்னேற முயன்ற அதிரடிப்படையினரை தாம் கண்ணிவெடி கொண்டு
தாக்கி நிறுத்திவிட்டதாக சூட்டியின் முகாமில் இருந்து தகவல் வந்தது. ஏனைய படையினர் தமது
முகாம்களிற்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து தகவல். போராளி சபேசனின் நேர்த்தியான கண்ணிவெடித்தாக்குதலில் 17 ஸ்ரீலங்கா அதிரடிப் படைவீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஸ்ரீலங்கா இராணுவம் தமக்கு மிகவும் பாதுகாப்பானது எனக்கருதி தென்னாபிரிக்காவில் இருந்து பவல் கவச வாகனங்களை
சிறப்பாக இறக்குமதி செய்திருந்தது. அதில் ஒன்றே சபேசனின் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. இதில் கொல்லப்பட்ட அதிரடிப்படையினர் கொழும்பில் பிரசித்தி பெற்ற றோயல் கல்லூரி, மற்றும் ஆனந்தா கல்லூரியில் கல்விகற்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அதிரடிப்படைக்கு சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உள்ளவர்களையே இணைத்துக்கொள்வது என்பது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிதும்
அதிர டிப்படைகளிற்கு பொறுப்பாகவிருந்த அவரது மகன் ரவி ஜெயவர்த்தனாவினதும்
திட்டமாக இருந்தது.
சூட்டியின்
அணி தவிர்த்து றீகன் தலைமையில் ஒரு அணி வெல்லாவெளிப்பகுதியூடாக
அதிரடிப்படை நகராமல் இருக்க நிறுத்தப்பட்டதுடன்
பிரசாத்- தயாளன் தலைமையில் ஒரு அணி கொக்கட்டிச்சோலைக்கு
மேற்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்தது. றீகனின் அணியும் பிரசாத்-தயாளன் தலைமையிலான அணியும் இராணுவத்தை எதிர்கொள்ள போதியளவு படைபலம் இல்லாத காரணத்தால் போதிய எதிர்த்தாக்குதலை தொடுக்காமல் பின்வாங்கின. இதனால் ஸ்ரீலங்காப்படைகள் விரைவாக கொக்கட்டிச்சோலைப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தற்போது மும்முனையில் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம். எம்மிடம் இருந்த ஆயுதங்களோ மிகச் சொற்பம். 1 M-16, 1 T 56-2, 1
AKMS, 1 GPMG(பொதுநோக்கு
இயந்திரத் துப்பாக்கி), 4 கைத்துப்பாக்கிகள். இவற்றை வைத்துக் கொண்டு சுமார் இரண்டு மணிநேரம் 150 இற்கு மேற்பட்ட ஸ்ரீலங்கா அதிரடிப்படை மற்றும் இராணுவத்தை எதிர்த்து பதினொரு போராளிகள் தாக்குதலை நடாத்தினோம். எம்மிடமிருந்ததோ சிறியரக ஆயுதங்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீலங்காப் படைகள் தமது நகர்வை வேகப்படுத்திய
அதேவேளை சிறியரக மோட்டார் குண்டுகள் கொண்டும் தாக்கத் தொடங்கின. எனினும் அவை எமது மனபலத்தை
தாக்கவில்லை.
நிலைமையை
உணர்ந்த குமரப்பா மீண்டும் போராளிகளிடம் கூடியளவு துப்பாக்கி ரவைகளை மிச்சப்படுத்துமாறும் தேவைக்கு மாத்திரம் ஒற்றைச் சூடாக (Singleshots) மேற்கொள்ளும்படியும் கேட்கிறார். இதே வேளை போராளி
சிங்காரம் சிரித்துக்கொண்டு துள்ளிக்குதித்து றீகன்
தனது அணியுடன் எமக்கு உதவிக்கு அருகில் வந்து விட்டதாகக் கூறுகிறார். பொட்டம்மானிற்கு சற்று சந்தேகம். எங்கடா றீகன் குறூப், எனக்கேட்க சிங்காரமும் சுமார் நானூறு மீற்றர் தொலைவில் உள்ள இடத்தைக்காட்டி றீகனின்
வாகனமும் அங்கு நிற்பதாகக் கூறினார். பொட் டம்மான் பார்த்துவிட்டு,
”டேய் அது றீகன்ட வாகனம்
இல்லடா STF இட பவல் கவசவாகனம் ” என்றும்
அவர்கள் வேகமாக முன்னேறுவதாகவும் உரக்க சத்தமிட்டார்.
இராணுவம்
எம்மை நெருங்கி அதேவேளை நாம் பின் வாங்கா
விட்டால் சகலரும் சுற்றிவளைப்பிற்குள் சிக்கி அழிய வேண்டிவரும். நெருக்கடியான
எதிரியின் தாக்குதல்களிற்கு மத்தியிலும் நாம் ஒன்று கூடி
பின் வாங்குவது என்று முடிவெடுத்தோம். உலங்குவானூர்தியின் தாக்குதலில் போராளி வடிவிற்கு கால்விரலில் சிறு காயம் ஏற்பட்டிருந்தது.
இது தவிர எமது தரப்பி
ற்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
தற்போது
எமக்கும் இராணுவத்திற்குமான இடைவெளி நூறு மீற்றரைவிடவும் குறைவு.
எமது பின்வாங்கலை வேகமாக்கிக் கொண்டோம். போராளி பாபுவிற்கு அந்த பிரதேசம் முழுமையாகத்
தெரிந்தபடியால் சகலரையும் அழைத்துக்கொண்டு கொக்கட்டிச்சோலையின் வட- கிழக்கு பகுதியால்
பின் வாங்கிக் கொண்டிருக்க நானும் பொட்டம்மானும் கடைசி இருவராக எம்மை நோக்கி வரும் இராணுவத்தின் மீது ஒவ்வொரு சூடுகளாக
மேற்கொண்டு பின் வாங்கிக் கொண்டிருந்தோம்.
இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் எமக்கு முன்னும் பின்னுமாக மரம், செடி, கொடிகள் எல்லாம் சிதறுகின்றன. அதிஷ்டவசமாக எந்தவித ரவைகளும் எம்மைத் தாக்கவில்லை.
கொக்கட்டிச்சோலை
குடியிருப்பைத் தாண்டி அடுத்த கிராமத்திற்கு
செல்வதானால் வயல்வெளி. வயல்வெளியைத் தாண்டிச் செல்லும்போது உலங்குவானூர்திகள் எம்மைத் தொடர்ந்து வந்தன. ஆனால் எந்தவித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. சற்று நேரத்தில் அருகில் இருந்த கன்னா மரங்களிற்குள் நுழைந்துவிட்டோம். எமது உயரத்தைவிட சற்று
உயரமான மரங்கள். ஆனால் இடுப்பளவு தண்ணீர். உலங்குவானூர்திகள் தாழப்பறந்து எம்மைத்தேடிக் கொண்டே இருந்தன. பலமுறை மேலாக சுற்றிவிட்டு எதையும் காணாமல் எமக்கு மிக தூரம் சென்று
விட்டன. நாம் நிற்கும் இடம்
பெரியமரங்கள் உள்ள காடு இல்லாவிட்டாலும்
பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டோம். ஆனாலும் மனதில் கேள்விகள் நிறைந்த குழப்பமான நிலை தொடர்ந்தது.
ஏனையபோராளிகள் அல்லது
மற்றைய அணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில் வோக்கி டோக்கியைத் தேடினோம். அப்போது தான் திலிப் சொன்னார்
வோக்கி டோக்கியின் பற்றரி வரும் போது விழுந்துவிட்டதாக. கொக்கட்டிச் சோலை
குடிமனைப் பகுதியூடாக வரும்வழியில் வேலி பாயவேண்டிய சூழ்நிலையில்
பாயும்போது வோக்கி அடிபட்டு பற்றரி கீழே விழுந்துவிட்டது. இராணுவத்தின்
அதிகூடிய துப்பாக்கிச்சூடுகளால் திரும்பி சென்று பற்றரி எடுக்க முடியாத காரணத்தால் பின் வாங்கவேண்டியாயிற்று.
” டேய்
கமல்
எங்கடா?.....”
பொட்டம்மானின்
குரலைக் கேட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தேடினோம். கமல் இல்லை. கமலைக்
காணவில்லை. நாம் சண்டைப்பகுதியில் இருந்து
பின்வாங்கு முன்னரே கமல் எம்மைவிட்டுப் பிரிந்து
விட்டதாக உணர்ந்தோம். கொக்கட்டிச்சோலை
குடிமனைப் பகுதிகளைக் கடக்கும்போதே கமல் எம்முடன் வரவில்லை
என்பதை சிங்காரம் உறுதிப்படுத்திக் கொண்டார். எம்மிடம்
கவலை குடிகொண்டாலும் கமலும் இன்னுமொரு போராளியும் முற்றுகையை வேறொரு பகுதியில் உடைத்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறி இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.
இடுப்பளவு
தண்ணீரில் மிகவும் துன்பத்திற்கு மத்தியில் எமது இருப்பை அந்த
கன்னா மரங்களுக்கிடையே தொடரவேண்டிய நிலை. எமது இருப்பை சற்று
வசதியாக்கிக் கொண்டோம். பொட்டம்மான் தன்னிடமிருந்த சுவிஸ் கத்தியினால் மரங்களை அறுத்து, வெட்டி இருக்கைகளும் அமைத்துக் கொடுத்தார்.
காலையில்
இருந்து ஓட்டமும் சண்டையும் ஓட்டமும்தான். 08.30 மணியளவில் சண்டையை நிறுத்தி பின்வாங்க ஆரம்பித்தோம். தற்போது மதியம் 12.00 மணிக்கு மேலாகிறது. பசியின் வாட்டம் சகலரிடமும் தெரிந்தது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டோம். கூடியளவு சைகை மூலமே பேசிக்
கொண்டோம். சுற்றாடலை அவதானிப்பதில் கண்களையும் காதுகளையும் பயன்படுத்திக் கொண்டோம். சில நிமிடங்களிற்குப் பின்னர்
அமைதியை குலைத்துக் கொண்டு மனித நடமாட்ட சப்தம்
எம்மை நெருங்கி வந்து கொண்டிருந்தது. எம்மை சுதாகரித்துக் கொண்டு எதற்கும் தயார்நிலையில் துப்பாக்கிகளை அமைதியாக சுடுநிலைக்கு தயார்ப்படுத்திக் கொண்டோம்.
கன்னா
மரங்களுக்கூடாக எமது பார்வையை கூர்மையாக்கினோம்.
வருவது ஒரு போராளி (கங்கைஅமரன்-பின்னாளில் கடற்புலிகளின் தளபதி) என்பதை தெரிந்து கொண்டு ஓய்வு நிலைக்கு வந்தோம். காலையில் சண்டைப்பகுதிக்குள் கங்கை அமரன் இருக்கவில்லையாயினும் போராளிகளின் நிலையை அறிய ஆவலுடன் மூன்று
மணிநேரமாக தேடி அலைந்திருக்கிறார். காலை முதல்
நடந்த சம்பவங்களை மிகவும் மெதுவான குரலில் பேசிப் பகிர்ந்து கொண்டோம். சக போராளிகளின் பசி
யின் நிலைமையை புரிந்து கொண்ட கங்கைஅமரன் தனியாக முதலைக்குடா, முனைக்காடு பகுதிக்கு சென்று தெரிந்த ஒருவரின் கடையில் லெமன்பவ் பிஸ்கெட்டைப் பெற்றுக்கொண்டு சில போத்தல்களில் தண்ணீரும்
கொண்டுவந்திருந்தார். சகலருக்கும் ஆளுக்கு சிறிதளவு பங்கிட்டு உண்டு அருந்திவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டோம் அந்த இடுப்பளவு தண்ணீரில்.
நேரம்
மாலையாகிக்கொண்டிருந்தது.
தூரத்தே கேட்ட துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்வுக்கு வந்திருந்தன. இந்த
முற்றுகைக்கு ஸ்ரீலங்கா இராணுவமும் அதிரடிப்படையும் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என எமக்குள் கணக்குப்
போட்டுக் கொண்டோம். அதிரடிப்படை மாத்திரம் நடவடிக்கைக்கு வந்திருந்தால் இருள் வருவதற்குள் பிரதேசங்களில் இருந்து பின்வாங்கி முகாம்களிற்கு திரும்பி சென்று விடுவார்கள் என்பது எமது கணிப்பு. அதுதான்
நடைமுறையாகவும் இருந்தது. இராணுவம் வந்தால் சில
நாட்கள் நிலை கொள்ளலாம் அல்லது
நிரந்தரமாக முகாம் அமைத்து தங்கலாம் எனவும் கணித்து எமது நகர்வை மேற்கொள்வதற்கு
திட்டமிட்டோம்.
ஸ்ரீலங்காப்படைகளின்
நகர்வுகளோ நிலைகொள்ளலோ எதுவும் எமக்கு புரியவில்லை. ஊகிக்கவும் முடியவில்லை. ஆனாலும் மீண்டும் மகிழடித்தீவு செல்வதென துணிச்சலாக முடிவெடுத்தோம். நன்றாக
இருள் சூழந்தவுடன் நகர்வை ஆரம்பிப்பதெனவும் கொக்கட்டிச்சோலையின் ஓரமாக நகர்ந்து அரசடித்தீவின் கிழக்குப்புறமாக சென்று பண்டாரியாவெளியூடாக நிலைமையை சூழலை அவதானித்துவிட்டு மகிழடித்தீவை சென்றடைவதென முடிவு. சொற்ப வெடி பொருட்களுடன் ஆயுதங்களுடன்
அமைதியாகவும் அவதானத்துடனும் மாலை 6.30 மணியிற்கு
சற்று மேலாக நகர்வை
ஆரம்பித்தோம். பொதுமக்கள் எவரையும் சந்தித்துக் கொள்ளாதவாறு திட்டமிட்ட பாதையூடாகவே நகர்ந்து பண்டாரியாவெளியில் நின்று நிலைமையை அவதானித்தோம். எந்தவித இராணுவ சலசலப்புக்களோ வாகன ஓட்டங்களோ எமது
கண்களுக்குப் புலப்படவில்லை, செவிகளிற்கும் கேட்கவில்லை. நிலைமை சீராக இருப்பதாக முடிவெடுத்து மகிழடித்தீவு நோக்கி எமது அணி நடையைத்
தொடர்ந்தது.
இரவு
சுமார் 8.30 மணியளவில் மகிழடித்தீவினுள் நாம் நுழையும்போது மகிழ்வான
மக்களைக் கொண்ட அந்தக் கிராமத்தினுள் நாம் கேட்டது மரண
ஓலங்கள் மட்டும்தான். எதற்கும் துணிந்து உற்சாகத்துடன் விருந்தோம்பும் கிராமம் சோகத்தில் துவண்டு போயிருந்தது. எங்கே எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல்
ஆக்கப்பட்டார்கள் என்ற சரியான விபரங்கள்
யாருக்கும் தெரியவில்லை. எம்மால்தான் இந்த நிலை என்ற
குற்ற உணர்வுடன் வீடுகளிற்கு சென்று துக்கம் விசாரித்து எமது ஆறுதலைக் கூறிக்கொண்டோம்.
யாரும் எம் மீது கோபப்படவுமில்லை
எம்மை வெறுக்கவும் இல்லை. தமது உறவுகளைப் பறிகொடுத்தவர்
கள்கூட எம்மைக் கண்டவுடன் அப்பனே, பிள்ளைகளே உங்களுக்கு ஒண்டும் ஆகல்லையோ...
நல்லகாலம்... கவனம்... போன்ற எம்மைத் தேற்றும் வார்த்தை களைத்தான் சொல்லிக்கொண்டார்கள். எமது முகாம் இருந்த
வீடு அதிரடிப்படையால் முற்றுமாக எரிக்கப்பட்டிருந்தது.
ஓரிடத்திற்கு
சென்று நிலைமையை ஆராயலாம் என நினைத்து மாவீரர்
வீரவேங்கை ரவி (வாமதேவன்) அவர்களின்
வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டோம். ரவியின் வீடும் போராட்டத்திற்கென தனது கதவுகளை எப்போதும்
திறந்தே வைத்திருக்கும். விடுதலை உணர்வும் விருந்தோம்பலும் ரவியின் பெற்றோரிடம் அதிகமாகவே காணப்பட்டதால் போராளிகளும் ரவியின் பெற்றோரை தமது பெற்றோர்களாக நினைத்துக்
கொண்டனர். ரவியின் வீட்டு வாசலிற்கு சென்றதும் உடனடியாக எம்மை உள்ளே அழைத்து அமரும்படி கூறிவிட்டு தமக்குத் தெரிந்த நிலைமைகளை ஓரளவு விளக்கிக்கூறினர்.
எம்மை
உயிருடன் கண்டது அவர்களுக்கு நிம்மதிப் பெரு மூச்சைக் கொடுத்ததை
உணரக்கூடியதாக இருந்தது. அமர்ந்து சற்று நேரத்துக்குள்ளாக கிராமத்தின் அந்த சோகங்களுக்கு மத்தியிலும்
ரவியின் பெற்றோரும் சகோதரிகளும் சோற்றுடன் டின்மீன் குழம்பும் பருப்புக்கறியும் சமைத்து இரவு உணவைத் தயார்ப்படுத்திவி
ட்டனர். முழுமையான இழப்பு விபரம் தெரியாமல் கனத்த இதயங்களுடன் அன்றைய போசனத்தை முடித்துக் கொண்டு இரவுத் தங்கலுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்தோம்.
அதற்குள்ளாக
பொட்டம்மானும் திலிப்பும் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். அந்த மகிழடித்தீவு கிராமத்தில்
நாம் செல்லாத, பழகாத, எம்மை வரவேற்காத வீடுகளே இல்லை எனச் சொல்லலாம். வழியில்
கண்டவர்கள் எல்லோருடனும் சுக துக்கங்களை விசாரித்துக்கொண்ட
பொட்டம்மானும் திலிப்பும் மகிழடித்தீவில் உள்ள தேவாலயம் வரை
சென்று நிலமைகளை அவதானித்தனர். நிலமையை பூரணமாக புரிந்து கொள்ள முடியாமல் சந்தேகத்துடன் நாம் இருந்த இடத்திற்கே
திரும்பி வந்தனர். பொட் டம்மான் சற்று
கலவரமாகக் காணப்பட்டார். நிலமையை விசாரித்தோம். நிலமை திருப்தியாக இல்லை, செல்லும்போது பாடசாலைக்கும் தேவாலயத்திற்கும் இடையில் இரண்டு டோர்ச் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது எங்களைக் கண்டதும் வெளிச்சம் அணைந்துவிட்டது பின்னர் யாரையும் காணவில்லை எனக் கூறினார் பொட்டம்மான்.
இந்த இரவில் அவர்களை எங்கே போய் தேடுவது அல்லது
யாரிடம் விசா ரிப்பது என்று
ஒன்றும் புரியாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டோம். எம்முடன் இருந்த இரண்டு போராளிகளை வீதிக்கு செல்லாமல் வீதியின் ஓரமாக மறைவாக நின்று நிலமைகளை அவதானிக்கும்படி குமரப்பா கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு போராளிகளும்
எமது வேண்டுகோளுக்கிணங்க அதிக தூரம் செல்லாமல்
30-40 மீற்றர் தூரத்திலேயே நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.
நிலமை திருப்தியாக
இல்லாத காரணத்தால் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அன்று இரவு இரண்டு குழுக்களாக
பிரிந்து தங்குவதென முடிவெடுத்து, அவதானிக்கவென அனுப்பப்பட்ட இருபோராளிகளையும் மீண்டும் எம்முடன் இணைத்துக் கொண்டோம். திட்டமிட்டபடி இரு குழுக்களாகப் பிரிந்து
இரண்டு இடங்களில்
தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தங்கி விட்டு காலை 5.00 மணியளவில் எழுந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை. எவராலும் இரவு போதிய தூக்கம்
கொள்ள முடியவில்லை. உடல்வலி, மனவலி எல்லாம் தாராளமாகவே இருந்தது. எம்முடன் தங்கிய போராளி பாபு அதிகம் தூங்காமல்
அதிகநேரம் காவல் கடமையிலேயே ஈடுபட்டு மற்றவர்களை கட்டாயப்படுத்தி தூங்கவைத்தார்.
அமைதியாக
காலை புலர்ந்து கொண்டிருந்தது. வழமையான விடியலாக எம்மால் உணரமுடியவில்லை. எல்லாமே நிசப்தமாகவே இருந்தது. பாபு இன்னொரு போராளியையும்
அழைத்துக் கொண்டு ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டுவருவதாகக் கூறி புறப்பட்டுவிட்டார். சென்றவர்கள் 5 நிமிடத்திலேயே
திரும்பிவந்து பாடசாலையில் அதிரடிப்படையின் முகாம் அமைத்து தங்கியுள்ளதாக படபடப்புடன் கூறினார்கள்.... நிலமை சிக்கலாகிவிட்டது. அதிரடிப்படையை நேருக்குநேர் சந்தித்தால் தாக்குதல் செய்யவேண்டிவரும். தாக்குதல் தொடங்கினால் தொ டர்ந்து தாக்குப்பிடிக்க
போதியளவு வெடிபொருட்கள் இல்லை. GPMG இற்கு 12 ரவைகளும் T-56 இற்கு 40 ரவைகளும் M-16 இற்கு சுமார் 100 ரவைகளும் (பொட் டம்மான் ஏற்கனவே
தனது வழமையான பாவனைக்கான 120 ரவைகளைவிட மேலதிகமாக சுமார் 100 ரவைகள் வைத்திருந்தார்) AKMS இற்கு 25-30 ரவைகளும் மாத்திரமே இருந்தன. ஆகவே நாம் தாக்குதலைத்
தொடங்குவதோ அல்லது அதிரடிப்படை வந்தால் எதிர்த்தாக்குதல் நடாத்துவதோ புத்திசாலித்தனமான காரியம் இல்லை என முடிவெடுத்து அமைதியாக
மகிழடித்தீவை விட்டு வெளியேறினோம்.
நாம்
யாரும் இராணுவச் சீருடையில் இல்லை. இராணுவச்சீருடை அணியவேண்டும் என்ற நிலைப்பாடும் இருக்கவில்லை.
சாதாரண நீளக்காற்சட்டைகள், சாரம்கள், சேட்டுக்கள், டீசேட்டுக்கள்தான் அணிந்திருந்தோம். அந்த இடத்தில் அந்த
நேரத்தில் காற்சட்டையுடன் செல்வது சூழலிற்கு பொருந்தாது என்பதால் எல்லோரும் சாரணுடன் செல்வது எனப் பேசிக்கொண்டோம். அப்பகுதியில்
உள்ள சில மக்கள் காலைக்கடன்களை
கழிப்பதற்கு நீணடதூரம் செல்வது வழக்கம். அவர்களைப்போலவே நாமும் சாரத்தை முழுமையாக உடுத்தி உயர்த்தி தோள் அளவிற்கு போர்த்தி
ஆயுதங்களை உடலுடன் ஒட்டி மறைத்துக்கொண்டு கூட்டமாகச் செல்லாமல் ஒருவர் இருவராக சீரற்ற நேர இடவெளியில் மகிழடித்தீவை
அடுத்திருந்த வயல்வெளியைக் கடந்து பண்டாரியாவெளியூடாக படையாண்டவெளியை அடைந்து அங்கிருந்து நிலமைகளை அவதானித்தோம்.
கனரக
வாகனங்களில் இரைச்சல் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் எமது கண்ணிற்கு எட்டிய
தூரத்தில் எதையும் அவதானிக்க முடியவில்லை. பாதுகாப்பில் பூரண திருப்தி இல்லாத
காரணத்தினால் அங்கிருந்து நகர்ந்து அருகிலுள்ள அடர்த்தியான கன்னா மரங்களிற்குள் சிலமணிநேரம் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என முடி வெடுத்தோம்.
மெதுவாக கன்னா மரங்களிற்குள் புகுந்து கொண்டோம்.
எமது
எந்த அணிகளுடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. கூறப்போனால் ஒரு இராணுவ முற்றுகைக்குள்
அகப்பட்டுக் கொண்ட நிலை. எமது நோக்கம் அருகிலுள்ள
எமது பயிற்சி முகாம் ஒன்றை சென்றடைவது தான். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும்
நடந்து கொண் டோம். அவ்விடத்தில்
எதேச்சையாக இன்னொரு போராளியையும் சந்தித்துக் கொண்டோம். ரெஜி என்ற அந்தப்போராளி
அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட சில தாக்குதல்களில் கலந்துவிட்டு
அவரது பகுதியான புலிபாய்ந்தகல்லிற்கு செல்லும் வழியில் இங்கு எம்மை சந்தித்துக்கொண்டார். அவரைக்கண்டதும் நாம் சற்று பலம்
பெற்றுவிட்டதாக ஒரு உணர்வு. காரணம்
அவர் ஒரு உந்துகணை செலுத்தி
(RPG) யுடன் வந்திருந்ததுதான். அந்தக் கடுமையான இராணுவ முற்றுகைக் குள்ளும் அந்தப் பெரிய ஆயு தத்தை தனியொருவனாக
பாதுகாத்துக் கொண்டு வந்தது பாராட்டக்கூடியதாக இருந்தது. ஒரு உந்துகணை(ROCKET) மாத்திரமே
மிகுதியாக இருந்தது. உந்துகணை செலுத்தவதில் குமரப்பா, திலிப் ஆகியோரும் அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர்.
அன்றிரவே எமது பயிற்சி முகாம்
நோக்கி நகர்வதென முடிவெடுத்தோம். பயிற்சி முகாம் நோக்கி நகரும்போது அரசடித் தீவுப்பகுதியூடாகவே செல்வது இலகுவாக இருக்கும். குடிமனைப் பகுதியூடாக செல்லாமல் அரசடித்தீவு - அம்பிளாந்துறை வீதியைக் கடந்து அதனூடாக எமது இலக்கை அடைவதென
முடிவு. நகர்வு முழுவதும் இரவு நேரத்திலேயே இருக்கவேண்டிய
நிலை. காரணம் இராணுவ நடமா ட்டங்களே.
அரசடித்தீவுப்பகுதியை
அண்மிக்கும் போது ”ஐயோ என்ட காலில
பாம்பு கொத்திப்போட்டு ” என்று அலறித்துள்ளிய திலிப்பின் குரலைக்கேட்டதும் எமக்கு சற்று நகைச்சுவையாகவும் இருந்தது. எமது நகர்வை நிறுத்தி
திலிப்பின் காலில் துணியால் ஒரு கட்டுப் போட்டுவிட்டு
சற்று ஓய்வெடுத்தோம். ஆனாலும் திலிப்பை பாம்புக்கடி வைத்தியரிடம் உடனடியாக அழைத்துக் கொண்டு செல்லவேண்டும். அரசடித்தீவில் அப்படியான ஒருவர் இருப்பதாக பாபு கூற எமது
நகர்வின் பாதையை அரசடித்தீவு நோக்கியதாக மாற்றிக் கொண்டோம். உரிய இடத்திற்கு சென்று
சம்பவத்தை அவரிடம் விளக்கிக்கூற அவர் பார்த்துவி ட்டு
பயப்படத்தேவையில்லை கடித்தது தண்ணிப்பாம்புதான் என்றதும் எமக்கு நிம்மதி. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம் என எமக்கு நம்பிக்கையளித்தார்.
அந்த வீட்டுக்காரர் தயாரித்துக்கொடுத்த தேனீரை அருந்திவிட்டு அவர்களுக்கு நன்றி கூறி எமது பயணத்தைத்
தொடந்தோம்.
மிகவும்
சோர்வாக நாம் இருந்தா லும்
சுமார் ஒருமணி நேரத்தில் எமது முகாமைச் சென்றடைந்தோம்.
கொக்கட்டிச்சோலையில் எம்மைவிட்டுப்பிரிந்து சென்ற கமலையும் அங்கு சந்தித்துக் கொண்டோம். மணற்பிட்டிச்சந்தியில் இருந்து நகர்ந்த அதிரடிப்படையுடனான சண்டையின் பின் பின்வாங்கும்போது தான்
நேரடியாக பயிற்சிமுகாம் நோக்கி வந் ததாக கமல்
கூறிக்கொண்டார். என்ன குமரப்பா உங்களோட
சேர்த்து 44 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை வானொலியில் கூறிக்கொண்டி ருக்கிறது என
கமல் தொடர்ந்தார். அவன் கத்தட்டும்... முதல்ல
அண்ணைக்கு செய்தி அனுப்ப ஒரு வழியப்பாரு, இஞ்ச
யாருக்கும் எதுவும் நடக்கல்ல எண்டு உடன செய்தியக்குடு என்ற
குமரப்பா கொஞ்சம் நிம்மதியாக காலை நீட்டி இருப்பம்
எனக்கூறி தரையில் அமர்ந்து கொண்டார்.
விடுதலைப்புலிகள்
எவரும் கொல்லப்படவில்லை என்ற காரணத்தினால் தான்
மகிழடித்தீவில் அமைந்துள்ள இறால் பண்ணையில் பாதுகாப்புத் தேடி தங்கியிருந்த அப்பாவி
மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சுரேஷின் தந்தை வைத்தியர் கந்தையா அவர்களும் சுரேஷின் இளைய சகோதரர் ஒருவரும்
அன்றையதினம் அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தவிர கொக்கட்டிச்சோலை,
மகிழடித்தீவில் இருந்த சிலரும் ஸ்ரீலங்கா அதிரடிப்படையால் சுட் டுக் கொல்லப்பட்டனர்.
இதுவே 1987 கொக்கட்டிச்சோலைப் படுகொலையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
-உதிரா
Post a Comment