வந்தாறுமூலையில் ஐ.பி.சி ஊடகவியலாளர் சேர்ந்த லட்சுமனன் தேவ பிரதீபன் தாக்கப்பட்டார்?

இன்று  மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சேர்ந்த லட்சுமனன் தேவ பிரதீபனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சென்று சந்தித்தார்.

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழைக்கழகத்தில் பணிபுரியும் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பஸ்தரிப்பு நிலையம் ஒன்று அகற்றப்பட்டது தொடர்பில் அந்த பஸ்தரப்பு நிலையத்தினை அமைத்தவர்களின் உறவினர்கள் குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தியுள்ளனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான லட்சுமனன் தேவ பிரதீபன் மீது அங்கிருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post