நம்முடைய ஈழத்து அரை அம்பிகள் தமிழகத்து முழுஅம்பிகளை விட ஒரு படி மேலே சென்று உக்ரேன் பிரச்சனையில் அமெரிக்காவை கதாநாயனாக்கி ரசியாவை வில்லனாகச் சித்தரிக்க படாத பாடு படுகிறார்கள்.
அடே
முட்டாள் அம்பிகளா! வில்லனே அமெரிக்கா தான்ரா!
அமெரிக்க
கோதுமையையும் எரிவாயுவையும் விட ரசிய கோதுமையும்
எரிவாயுவும் மலிவானவை.அமெரிக்க கோதுமையும் எரிவாயுவையும் வாங்க
வைக்க வேண்டும் என்ற நிர்பந்ததை உருவாக்க
வேண்டும் என்றால் ரசியாவை போர் செய்ய வைத்துப்
பொருளாதார தடை விதிக்க
வேண்டும்.இந்தப் பொருளாதார தடையால் பாதிக்கப்படப் போவது ரசியாவோ ரசிய மக்களோ அல்ல.அம்பிகளான நீங்கள் உட்டபட உலக மக்கள் தான்.எரிவாயவும் கோதுமையும் விலையேற அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கான விலைகளும் ஏற்றப்படும்.ரசியாவால் தான் இந்த விலையேற்றம்
நடந்ததாக நீங்கள் நம்ப வைக்கப்படுவீர்கள்.அதாவது சதாம்
ஹு சைன் அணுவாயுதம் வைத்திருக்கிறார்
என்று கூறி அவரையும் அழித்து
ஈராக்கையும் நாசப்படுத்தியை நீங்கள் நம்பியைதைப் போல...
அடுத்து
உக்ரேனிய அரசுத்தலைவர் ஒன்றும் மாகா உத்தமர் கிடையாது.அவர் ஒரு அப்படமான
இனவாதி நியோ நாசி என்று
கூறச் சொல்லலாம்.ரசிய மொழி பேசும்
டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஈழத்தில் கோத்தபாய செய்ததைப் போல ஈவிரக்க மின்றி
ஒடுக்கியவர்.18 ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தவர்.
இந்த
மக்களுக்கு உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்பதை ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளின் மத்தியஸ்துவத் தோடு செய்யப்பட்ட உடபடிக்கைளை
துாக்கி வீசியவர்.
நம்முடைய
கோத்தபாய அண்ணாச்சி சீனாவை கொண்டு வந்து நெடுந்தீவு பிரதேசத்தில் காலுான்ற வைக்க முயற்சி செய்ததைப் போல் உக்ரேன்அரசுத்தலைவர் விலாதிமீர் செலோன்கி
உலக பொலிசுக்காரரரை இந்தப் பிரதேசத்தில் காலான்ற வைத்து ரசியாவை அச்சுறுத்தி டன்பாஸ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முற்றாக நசுக்க திட்டமிட்டவர்.அம்பிகளா ரசியா ஒன்றும் இப்போது கெம்யுனிச நாடில்லலை. அது 10 பெரு முதலாளித்துவ குடும்பங்களால் மறைமுகமாக
ஆளுமை செய்யப்படுகிற ஒரு முதலாளித்துவ நாடு.
ஆனால்
இந்தியாவைப் போல நம்பவைத்து கழுத்தறுக்கும்
நாடில்லை.
கடந்த
3 நாள் போரில் 193 பொதுமக்கள கொல்லப்பட்டிருப்பதாக உக்ரேன் அரசு அதிகார பூர்வமாக
அறிவித்திருக்கிறது.
உங்கள்
பெரியண்ணனமார் லிபியா சிரியா ஈராக் ஈழம் முதலான நாடுகளில்
நடத்திய ஒரு நாள் போரில்
எத்தனை
பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.எத்தனை குழந்தைகள் அதில் அடங்கியருந்தார்கள் என்பதை ஒரு கணம் மீட்டுப்
பார்த்தீர்கள் என்றால் போர் வெறியர்கள் யார்
என்பது உங்களுக்குப் புரியும்.
கொரோனா
நெருக்கடிக்குள் பொருளாதார இழப்பை நீங்கள் சந்தித்திருக்கும் நேரத்தில் உங்கள் வருமானத்தைக் கூட்டாமல் பொருட்களின் விலையைக் கூட்டினால் வேலை நிறுத்தம் போராட்டம் ஆர்பாட்டம்
என்று துள்ளிக் குதிப்பீர்கள். போரைத் திணித்து விலையைக் கூட்டினால் நிங்கள் நீதி நியாயம் பேசி
மனித உரிமைகள் என்றெல்லாம் பேசி அதில் முடங்கிப்போய்விடுவீர்கள்.இது தான்டா அம்பிகளே
நீங்கள் நம்புகிற முதலாளித்துவ ஜனநாயகம்.
Siva Sinnapodi
Post a Comment