ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி 1971!

1971ம் ஆண்டு ஜேவிபி அமைப்பு இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது.

பல கிராமங்களை சில மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

ஏனெனில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தது.

அப்போது இலங்கை இந்திய ராணுவத்தால் 6000 ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 1971ல் மன்னம்பெரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது.

கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கொன்றனர்.

ஜேவிபி மீண்டும் 1989ல் ஆயுதப் போராட்டம் முன்னெடுத்தது. அப்போது இதே சிங்கள ராணுவம் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது.

வேடிக்கை என்னவெனில் அப்போது இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி .நா சென்றவர் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சாவே.

அதே மகிந்த ராஜபக்சாவே பின்னர் முள்ளிவாயக்காலில் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தார்.

Tholar balan (facebook)

 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post