மரணம் என்பது முற்றுப் புள்ளியா? அல்லது கேள்விக் குறியா?
நிலாமதி போன்றவர்களது இழப்பு, கேள்விக்குறியாகவே உள்ளது.
58 வயதில், அவரது வாழ்க்கைக்கு ‘புற்று’ ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது பெரும் சோகம்.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவந்த போது, அவரிடம் நான் கண்ட அந்தத் துடிப்பும் கலகலப்பும், துளியளவும்
குறையாமல் சமீபத்தில் இணையத்தளத்தில் நிலாமதி வழங்கியிருந்த செவ்வியிலும் வெளிப்பட்டது கண்டு அதிசயித்தேன். அவரது வாழ்வில் எத்தனையோ சவால்கள், சோகங்களையும் தாண்டி, எந்த நிலையிலும் சோர்ந்து விடாமல், இன்னும் சாதிக்கவேண்டும், சாதிப்பேன்
என்ற வெறி அவரது கண்களில் மின்னியதை அந்தப் பதிவில் கண்டேன். ஆனால்….
‘எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாது’ என்ற கவியரசரின் வரிகளுக்கு ஒப்ப, நிலாமதியின்
வாழ்க்கையும் முடிந்துவிட்டது. அவரது இழப்பால் துயருறும் அன்னை ஏஞ்சல் கருணைரத்தினம், தந்தை கிறிஸ்தோபர் கருணைரத்தினம், அவரது வாரிசு ‘நிலாதர்’ மற்றும் உடன் பிறப்புகள் மஹிந்தகுமார், சுஜீவா ஆகியோருக்கு, எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நிலாமதியின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள்.
(நினைவுகளின் நிழற்படம் -1989ம் ஆண்டு அன்புச் சகோதரர் எஸ்.கே.ராஜெனின் ஏற்பாட்டில் முதலாவது ஐரோப்பிய கலைப் பயணத்தின் போது, Parisல் ராஜெனது இல்லத்தின் முன்னால் எமது கலைக் குடும்பம்)
Post a Comment