சிவராமை கொலை செய்த புளொட்டை இணைத்தது கூட்டமைப்பு செய்த தவறு: இரா.துரைரெத்தினம்!

இராணுவத்துடன் சேர்ந்து 2009 வரையும அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க உழைத்த ஊடகவியலாளர் சிவராமை படுகொலை செய்த புளொட் இயக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டமை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரும் தவறுஎன இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கங்களின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினத்தையிட்டு நினைவேந்தலும்ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீடும் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் .தேவ அதிரன் தலைமையில் இன்று (29) மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இலங்கை வரலாற்றிலே 1981 ம் ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கம் அக்கரைப்பற்று தொடக்கம் திருகோணமலை வரையிலான ஊடகவியலாளர்களை உள்ளடக்கி செயற்பட்ட சங்கமாகும்.

நடேசனுக்கு முற்பட்டகாலம் அதற்கு பிற்பட்டகாலம் நடேசனின் முற்பட்டகாலம் அச்சுறுத்தல் இருந்தாலும் அது ஒரு பொற்காலம் இருந்தபோதும் பல்வேறு கட்சிகளை இணைத்து ஒரு பலமான ஒரு அரசியல் தலமை உருவாக்க வேண்டும் என்பதற்காக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது அந்த செயற்பாட்டிலே வெற்றியும் கண்டது.

அவ்வாறு ஒரு பலமான அமைப்பாக மட்டக்களப்பு மண்ணில் இருந்தது ஆனால் துரதிஸ்டவசமாக அப்போது கருணா பிளவுபட்டநேரம் ஊடக சங்கங்கள் பிளவுபட்டுள்ளது.

எனவே இனிமேல் ஆவது அனைத்து ஊடக சங்கங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோன்.”

ஊடகவியலாளர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள்

ஊடகவியலாளர்களுக்கு இன்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதை காண்கின்றேன். இன்றை நிலையில் ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஊடகவியலாளர்களை தாக்குவது அரசியல்வாதிகளால் இடம்பெற்றுள்ளது. அதில் மட்டக்களப்பில் முதலாவதாக புளொட் இயக்கத்தால் நித்தியானந்தன் என்ற ஊடகவியலாளர் கழுத்து வெட்டப்பட்டு இறக்கும் நிலைக்கு சென்று உயிர்தப்பினார். 

அதன் பின்னர் அதே புளொட் இயக்கம் தான் ஊடகவியலாள் சிவராமை கடத்தி படுகொலை செய்வதற்கு இராணுவ புலனாய்வு பிரிவுக்கு துனைபோனதுடன் கைது செய்யப்பட்ட தடையங்கள் அழிக்கப்பட்டது.

இந்த நிலையில் மிகப் பொரிய கவலை என்னவென்றால் இராணுவத்துடன் 2009 வரையும், சேர்ந்து அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த அதே புளொட் இயக்கம் அரசியல் தலைமைகள் என்று உருவாக்கப்பட்டு இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் புளொட்டை இணைத்தது உண்மையிலே மிகவும் வேதனையான விடயம். இது ஒரு அரசியில் பார்வையில் கேவலமானது என நான் பார்க்கின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க ஊடகவியலாளர் சிவராம் எவ்வாறு உழைத்தார், அதை ஒரு மூல வேராக கருதினாரே அவரேயே சுட்டுக் கொண்ட புளொட் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து புனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.

இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது சம்மந்தன் ஜயாவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தவறு தவறுதான் இது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் செய்த மிகப் பெரிய தவறு. இது தொடர்பாக வெளிப்படையாக கட்டுரை எழுதினேன்.

இது மன்னிக்க முடியாத குற்றம் 2009 வரைக்கும் இராணுவத்துடன் சேர்ந்து படுகொலை புரிந்த ஓர் அமைப்பை அதே தமிழ் மக்களின் அரசியல் தலைமையுடன் இணைத்துக் கொள்வது அதைபோன்ற கேவலமான வேலை இருக்க முடியாது.

இது தொடர்பாக தமிழ் மக்கள் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புவதில்லை என்பது கேள்வியாக இருக்கின்றது அதேபோன்று லசந்த விக்கிரம சிங்க உட்பட பல சிங்கள ஊடகவியலாளர்கள் படுகொலை செய்த இந்த ஆட்சியாளர்களை 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்துள்ளது என வீரவாக்கியம் பேசியவரை எந்த மக்கள் வாக்களித்தார்களே அந்த மக்களால் வீட்டுக்கு போ என்று சொல்லுகின்றளவுக்கு வந்திருக்கின்றது.

அதேபோன்று ஊடகவியலாளர் நடேசனை மற்றும் தம்பையா உட்பட பலபேரை படுகொலை செய்தவர்களை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மட்டக்களப்பு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் எனவே 69 இலட்சம் மக்கள் எடுத்த முடிவை எப்போது மட்டக்களப்பு மக்கள் எடுப்பார்கள்எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.

சிவராமை படுகொலை செய்த புளொட்டை இணைத்தது கூட்டமைப்பு செய்த மிகப் பெரும் தவறு!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post