காமராஜரின் வழியை எந்த
வயதில்
ஏற்கப்போகிறார்கள்?
-சுடரவன்
உலகில்
நேர்மையான மனிதர்கள் என 50 பேரைப் பட்டியலிட்டது அமெரிக்கா. அதில் இடம்பெற்றவரில் ஓருவரே இந்தியர். அதிலும் முதலிடத்தைப் பெற்றவராக குறிப்பிடப்பட்டவர் காமராஜர். அகில
இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்தவர் இவர். கிங்மேக்கர் என்று குறிப்பிடப்பட்டவர் இவர். தமிழக முதலமைச்சராகவும் விளங்கியவர். இவர் சட்டசபைக்கான தேர்தலில் விருதுநகர்த் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சீனிவாசன் என்ற மாணவனிடம் தோற்றுப் போனார். தி.மு.க தலைவராக
விளங்கிய அண்ணாத்துரையே இவரது தோல்வி குறித்த செய்தி கிடைத்ததும் அதிர்ந்து போனார்
பின்னர் நாகர்கோயில் தொகுதிக்கான பாராளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார் இக்காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அவர் காமராஜரைச் சந்திக்க விரும்பினார். இத்தகவல் காமராஜரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகப் பதில் சொன்னார் அவர்
"இந்த நிக்சன் தானே நம்ம அண்ணாத்துரை அமெரிக்கா போனப்போ சந்திக்கக் கேட்டதுக்கு முடியாதுன்னு சொன்னவன். அவனை எப்படியப்பா நான் சந்திப்பது?"
***
தமது
காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு தமிழகத்தில் முடிவு கட்டியது சீ.என். அண்ணாத்துரையே
என்ற போதும் காமராஜர் மனதில் தமது முதலமைச்சராகவே தெரிந்தார்.
அவரை மதிக்காத எவரையும் தானும் மதிக்கத் தேவையில்லை என்பது அவரது முடிவு. அதனால் தான் அவர் மக்கள்
மனதில் வாழ்கிறார்.
முதன் முறையாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் (ஓக்டோபர் 2013) முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனின் பெயரை முன்மொழிந்தது
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதனை ஏற்றுக் கொண்டு
78.48 வீதமான மக்கள் (353,595 பேர்) வாக்களித்தனர் இதில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் ஓருலட்சத்து முப்பத்திரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து விருப்பு வாக்குகளை சி. வி. விக்னேஸ்வரனுக்கு
வழங்கியிருந்தனர்.
நல்லாட்சி
அரசு காலத்தில் பிரதமருக்கு விருப்பமில்லாத ஏதோ ஓன்றை செய்தோ
பேசியோ விட்டார் முதலமைச்சர். அவர் தனக்கு வாக்களித்த
மக்களின் நலனைக் கொண்டே இதனைச் சொல்லியிருக்கலாம்;செய்திருக்கலாம். இதன் பின்னர் ஏதோ ஓரு நிகழ்விற்கு பிரதமர் வரவேண்டியிருந்தது. நான் யாழ்ப்பாணம் போகும் போது முதலமைச்சருடன் பேசமாட்டேன் என்று திமிருடன் சொன்னார் ரணில். அதுமட்டுமல்ல
"அவர் ஓரு பொய்யர்"
(He is a lier) என்றும் சொன்னார் இந்தச் சொல்
கூட்டமைப்பை தேர்ந்தெடுத்த மக்களை குறிப்பாக முதலமைச்சருக்கு விருப்பு வாக்குகளை அளித்த மக்களை அவமதிப்பதாகும். வடக்கு மக்களே உங்களின் அபிப்பிராயம் எதுவாக இருந்தாலும் அதை நான் மதிக்கப் போவதில்லை என்பதே அதன் பொருள். இது அவரது மாமனார் ஜே.ஆர் இவருக்கு கற்பித்த பாடத்தின் விளைவு 1983 டெய்லி டெலிகிராப்புக்கு ஜே.ஆர் சொன்ன விடயம் " யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை" என்பதாகும்.
எங்கள் மத்தியில் உலாவும் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் ஆய்வாளர்கள் எவரும் காமராஜரைப் போல விடுதலைப் போராளிகளாக இருந்ததும் இல்லை. அப்படிச் சிந்தித்ததும் இல்லை. இதனால் அவர்களுக்கு இந்த விடயம் உறைத்திருக்க வாய்ப்பில்லை. ரணிலின் திமிரைச்சாடியதாக பெரிதாகத் தெரியவில்லை. இப்போதும் ரணிலைத் தூக்கிப்பிடிக்க முயலுவதாகத் தெரிகிறது. வெற்றி பெற வாய்ப்புள்ள ஜனாதிபதி வேட்பாளருடன் தமிழ்த்தரப்பு பேச வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். சஜித்துக்கு அதரவளிப்பது வீண் என்று சாதிக்க முயல்கின்றனர். இனவாத சிந்தனை இப்போது இல்லை தானே என மனோகனேசனுக்கு தொலைபேசி மூலம் ரணில் சொன்னதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஜே.ஆர் அரசு
அமைந்த போது மிக மோசமாக
சுதந்திரக்கட்சி தோற்றதாலும், வடக்குகிழக்குத் தமிழர்கள் ஓரே மனதுடன் வாக்களித்ததாலும்
எதிர்க்கட்சித் தலைவராக அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவானார். இதனைத் தொடர்ந்து ஜே.ஆரைச் சந்தித்த
பெளத்தமதபீடங்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதி, பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர் பதவிகளில் பெளத்த சிங்களவர் மட்டுமே இருக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும் என வலியுறுத்தின.இதனைக்
கருத்திற் கொண்டே விகிதாசார தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. ........ மகிந்தவுடன்
முட்டை அப்பம் சாப்பிட்டுவிட்டுச் சென்ற மைத்திரி "நான் தான் ஜனாதிபதி
வேட்பாளர்" என்றார். இவரை ஜனாதிபதியாக்க சுமந்திரன்,
சம்பந்தன் தலைகீழாக நின்றனர். அவர் ஜனாதிபதியான பின்
இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து அரசமைத்ததால் எதிர்க்கட்சித்தலைவரான ஓரு தமிழர். மாமானாரின்
அறிவுறுத்தல் மனதைக்குடைந்தாலும் இது தற்காலிக ஏற்பாடு
தானே என பொறுமை காத்தார்
ரணில். மைத்திரி - ரணில் தேனிலவு முடிந்து சிறிது காலத்தில் கசப்புணர்வு மீண்டும் தலைதூக்கியது. தன்னால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஐனாதிபதி மகிந்தவை அழைத்து பிரதமர் நியமனம் வழங்கினர் மைத்திரி. சட்டத்துக்கு மாறான நியமனம் இது என இரவுபகல்
பாராது சட்டப்புத்தகங்களைப் புரட்டி சுட்டிக்காட்டினர் சுமந்திரன். நீதிமன்றம் இவரது வாதத்தை ஏற்றுக் கொண்டது. மகிந்த ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. முதல் பரிசை எதிர்பார்த்துத் தான் லொத்தர் ரிக்கட்
வாங்குவதுண்டு. அது கிடைக்காவிடில் ஆறுதல்
பரிசைக் கொடுத்தால் வாங்காமல விடப் போகிறார்கள்? பெளத்த சிங்களவரான மகிந்தரை வெறும் கையோடு அனுப்ப ரணில் விரும்பவில்லை. சம்பந்தன் ஜயாவின் எதிர் கட்சித்தலைவர் பதவியைப் பறித்து மகிந்தவிடம் கொடுத்தாயிற்று. மாமா ஜே.ஆர்
சொன்னதை மறக்கவில்லை ரணில். பெளத்தத்திற்கு ஆற்றிய சேவைக்காக
சபாநாயகர்
ஜே சூரியவை கெளரவித்தனர் பெளத்த பீடங்கள். தொண்டையில் மீன் முள்ளு சிக்கிய பிராமணனின் நிலை சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும். இந்தக் குள்ளத்தனங்களை விளங்கிக் கொள்ளாத மாதிரி அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் ஆய்வாளர்களும் நடிக்கலாம் வெல்லக் கூடிய தரப்புடன் கூட்டு சேர்வதாயின் கோத்தபாயவுக்கே வாக்களித்திருக்கலாமே தமிழர். அரசியல்கைதிகளின் விடுதலையோ, அர்த்தமுள்ள அரசியல் தீர்வோ கிடைக்காமல் நல்லாட்சி அரசு - 1 படம் முடிவடைந்து விட்டது பாகம் 2 க்கு பூசை போடுகின்றனர் சிலர்.
ரணிலின்
சாமர்த்தியம் குறித்து சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவியைப் பறித்த கருஜெயசூர்யவின் மாப்பிள்ளையும் (மருமகன்) யாழ் நூலக எரிப்பின்
இயக்குனரான காமினிதிச நாயக்காவின் வாரிசுமான நவீன் "புலிகளிலிருந்து கருணாவை பிரித்த சாமர்த்தியசாலி" என்று புகழ்ந்தார். அதனால் எக்காலத்திலும் மக்களால் நேரடியாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியாதவர் என்ற நிலைக்கு ரணிலை சிறுபான்மை மக்கள் கொண்டு சென்றனர்.
தனக்குத்
தலைவராக இருந்தவரின் குடும்பத்தினரிடமே தனது மாமன் வழி
வந்த நரிப் புத்தியைக் காட்டியவர் ரணில். 1994 லில் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட விரும்பினார் ஹேமா பிரேமதாச. அவர் போட்டியிட்டால் கொழும்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுவிடுவார் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. ஹேமாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது போல காட்டப்பட்டிருக்க வேண்டும் போல இருக்கிறது. நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் தினத்தன்று தனது ஆதரவாளர்களுடன் கொழும்புக் கச்சேரிக்குச் சென்றார் ஹேமா. வேட்பாளர் நியமனப்பத்திரத்தில் கையொப்பமிடக் காத்திருந்தார். ஆனால் அவரது பெயர் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது தாமதமாகத் தான் புரிந்தது அவருக்கு. கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்த தடவை உங்களுக்கு கொழும்பில் சந்தர்ப்பம் வழங்க முடியாது என்றோ வேறு ஓரு மாவட்டத்தில் போட்டியிட்டு கட்சியைப் பலப்படுத்துங்கள் என்றோ ரணில் சொல்லியிருக்கலாம் அல்லது மூன்றாவது நபர் ஓருவர் மூலம் தொலைபேசி வழியாக உங்களது பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின் கச்சேரிக்குச்
செல்லுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாம். நாட்டின் முதற்பெண் மணியாக இருந்தவரை அவமானப்படுத்தி விட்டேன் என்ற குதூகல திருப்தியுடன்
அன்று தூக்கத்திற்குச் சென்றார் ரணில். இவரையே அங்கீகரிக்கிறார் டக்ளசும்.
மதுரைச்சிறையில்
இருந்து வெறுங்கையுடன் வந்த டக்ளசுக்கு ஆயுதமும்
கொடுத்து தீவுப்பகுதியின் முடிசூட்டப்படாத சிற்றரசராக நியமித்தார் பிரேமதாச. அவர் பங்குபற்றும் கூட்டங்களில்
இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்து காட்சியளித்தவர் டக்ளஸ். பிரேமதாச வழங்கிய உணவுப் பொருட்களையும் பால்மா போன்றவற்றையும் கொடுத்தே தீவுப்பகுதியில் அரசியல் பணியை ஆரம்பித்தார். சுயமாக ரணில் நேரடியாகப் போட்டியிட்ட இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவருக்கு
எதிராகச் செயற்பட்ட டக்ளஸ் தற்போது ராஜபக்ச குடும்பத்தினர் நடத்தும் பொம்மலாட்டத்தில் ஆட்டுவிக்கப்படும் பாத்திரமான ரணிலுக்கு தற்போது ஆதரவளிக்கிறார். மொட்டுக்கட்சியை ஆரம்பித்த ஜி எல் பிரிசே
ரணிலை ஏற்கவில்லை.
நிமலராஜனின்
படுகொலையை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் ஊடகவியலாளர்கள் இன்று டக்ளஸ்டன் கைகோர்க்க தயார் என சைகை காட்டுகின்றனர்.
பிரியாணிக்காக சேர்ந்த கூட்டமே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் என்று கூறுகிறார் டக்ளஸ். ஏற்பாட்டாளர்கள் எப்படியோ அதில் கோபத்துடன் கலந்து கொண்ட மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் இவர் இலங்கை அரசியலில்
பெளத்த பீடங்களின் அனுமதியுடனோ அசீர்வாதத்துடனோ நடத்தப்படாத வெற்றிகரமான முதல் போராட்டம் இது. உலகமே வியக்கும்
இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் டக்ளஸ்டன் கூட்டுச் சேருவோரை என்னவென்று சொல்வது?
இதேவேளை
எவருக்கும் தமிழ்தரப்பு வாக்களிக்கக் கூடாது என்று கூறும் ஆய்வாளர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எம்பிக்களுக்கும் எமது மக்களுக்கும் அரசியல்
அறிவு பூச்சியம் இல்லை. வாக்களிப்பை புறக்கணிக்க வேண்டும் என கூறுவதன் மூலம்
பிரபாகரனாகத் தம்மை கற்பனை செய்கின்றனர் என்பது புரியாத விடயமல்ல. தேர்தலில் போட்டியிட்ட இவர்களை மக்கள் நிராகரித்ததால் பழிவாங்கும்
நோக்கம் இருக்கிறது போல உள்ளது ...... தேர்தலில்
யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட ஜீஜீ பொன்னம்பலத்தை துரையப்பா
தோற்கடித்தார். வாக்குகளைத் திருப்பித்திருப்பி எண்ணியும் முடிவு மாறவில்லை " நன்றி கெட்ட தமிழ் சாதி" என்று திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ஜீஜீ. வெற்றி பெற்றவரை கைகுலுக்கி வாழ்த்தும் அரசியல் நாகரீகம் கூட அந்த ராணி
வழக்கறிஞருக்கு இருக்கவில்லை தேர்தலில் தோற்ற ஊடகவியலாளர்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களும் மக்கள் நலனை முன்னிறுத்தும் பண்பு
இருக்குமென எதிர்பார்க்க முடியாது. இன்று சஜித் போட்டியிலிருந்து டளக்சுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார் முழு இனவாதியான தினேஸ்குனவர்த்தன
பிரேகரிக்க ரணில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
விதியே
தமிழ் சாதியை என்ன செய்யப்போகிறாய்? காமராஜர்
போன்ற நேர்மையான, சூடுசுரணை உள்ள அரசியல்வாதிகள் எப்போது
தமிழர்களுக்கு கிடைக்கப் போகின்றனர்?
Post a Comment