தமிழறிஞர் வித்துவான் பண்டிதர் நாவலர் வி.சீ.கந்தையா !

மண்டூர்தந்ததமிழறிஞர் வித்துவான் பண்டிதர் நாவலர் வி.சீ.கந்தையா பீ.ஓ.எல் அவர்களின் ஜனனதினம் 29.07.ஆகும்.மகாவித்துவான் அவர்கள் 1920.07.29ந்திகதி மட்டக்களப்பு மண்டூரில் புலவர் வினாசித்தம்பி சின்னாத்தையார் தம்பதிகளுக்கு மூத்தமகனாகப்பிறந்தார். தனது இளமைக்கல்வியை மண்டூர் ஸ்ரீ இராக்கிருஷ்ணவித்தியாலயத்தில் வ.பத்தக்குட்டி ஆசிரியரிடமும் புலவர்மணி பெரியதம்பிபிள்ளையிடமும் விபுலானந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி ஆசிரியரிடமும்கற்றார். பின்னர் மட்.சிவானந்தவித்தியாலயத்தில் சுவாமி விபுலானந்தரிடம் ஆங்கிலம் சங்கஇலக்கியம் பழந்தமிழ் இலக்கியங்களை துறைபோகக்கற்றுத்தெளிந்தார்.

பின்னர் யாழ்ப்பாணத்து ஆரியதிராவிடப்பாஷாபிவிருத்திச்சங்கப்பண்டிதர் பட்டமும் மதுரைத்தமிழ்ச்சங்கப்பணடிதர் பட்டமும் இலங்கைப்பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் அண்ணாமலைப்பல்கலைக்கழக  பி ஓ எல் பட்டமும் பெற்றார்.பின்னர்1940 முதல் மட். சிவானந்தவித்தியாலயத்தில் தமிழ்பேராசிரியராகத்திறம்படசேவையாற்றிப்பல தமிழ்ஆர்வலர்களை உருவாக்கினார். ஸ்ரீ இராமக்கிருஷ்ணபரமகம்சரினதும் சுவாமி விவேகானந்தரினதும் போதனைகளையும் ஆத்மீக நடைமுறைகளையும் பின்பற்றி வாழ்ந்தார். 

இலங்கையிலும் இந்தியா மலேசியா நாடுகளிலும் சமயச்சொற்பொழிவுகளையும் தமிழ் ஆராச்சிக்கட்டுரைகளையும் வெளிப்படுத்தி பாராட்டுக்களையும் பெற்றார்  இவரின் அளப்பெரிய சேவைகளை கௌரவித்து இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதிப்பட்டத்தை வழங்கியது. ஆசிரியராக அதிபராகப்பணிபுரிந்த மகாவித்துவான் அவர்கள் மட்டக்களப்புத்தமிழகம்  மட்டக்களப்பு சைவக்கோயில்கள்வரலாறு கண்ணகி வழக்குரை மட்டக்களப்பு நாட்டுக்கூத்து பாஞ்சாலிசபதம் விபுலானந்த ஆய்வுவிளக்கம் மண்டூர் முருகன் கீர்த்தனைகள் போன்ற இருபது நூல்களையும் பல தமிழ் ஆராச்சிக்கட்டுரைகளையும் யாத்த பெருமகனாவார்.

பின்னர் மட்டக்களப்பு மேல்மாடித்தெருவில் வாழ்ந்த தமிழறிஞர் பண்டிதை கங்கேஸ்வரி நாகலிங்கத்தை 1946ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.இதன்பயனாக தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கும் பொறியியலாளர் கலாநிதி சிவகுமார் . பேராசிரியர் பௌதீகவியல் மணிவண்ணன் பொறியியலாளர் கலாநிதி அருள்மொழி மற்றும் மட்டக்களப்பில் வசிக்கும் பொறியியலாளர் இளங்கோஆகிய நன்மக்களைப்பெற்று சமூகத்துக்கு வழங்கினார்.

வித்துவான்போன்றே மனைவியும் பல தமிழ்பணிகளையும் சமயப்பணிகளையும் செய்ததுடன் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியகலாசாலையின் தமிழ்ப்பேராசிரியராக ஓய்வுபெறும்வரை உன்னதசேவையாற்றினார். பிள்ளைகளும் இப்பகுதியில்உள்ள ஏழைக்குடும்பப்பிள்ளைகளின் பிள்ளைகளின்கல்விமேம்பாட்டுக்கு உதவிவருவதுடன் சமயநிறுவனங்களுக்கும் மேன்மையானஉதவிகளைச்செய்து வருவது பாராட்டுக்குரியது.

மகாவித்துவானின் கல்விச்சேவை சமூகச்சேவை கலைத்துறைசார்ந்தசேவை சமயவிருத்திச்சேவையெனயென பல்துறைசார்ந்தது. பிறப்பு சம்பவமாகஇருந்தாலும் அன்னாரின் இறப்பும் வரலாறாகவே அமைந்துள்ளது.

எமது இளம்தலைமுறைகளும் இவ்வாறான அறிஞர்களின் வாழ்வையும் வரலாறுகளையும் அறிந்து கொள்ளுமுகமாக தெரிந்த அறிந்த விடயங்களைப்பதிவிட்டுள்ளேன்.எனக்கு

உறவுமுறையில் மகாவித்துவானவர்கள் தாய்வழி மாமனார் ஆகும். நன்றி வாசகர்களுக்கு.

Muthaiah Vimalanathan (facebook)


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post