நான்
கண்ட போராளிகள் களமும் வாழ்வும். - ஓவியர் புகழேந்தி.தவிர்க்க
முடியாத, தவிர்க்க கூடாத வரலாற்றுப் பதிவு.. ஈழப் போராட்ட வரலாறு
நன்கு அறிந்தவர்களுக்கும், தெரிந்து கொள்ள முனைபவர்களுக்கும் ஒரு பொக்கிஷம் இந்த
புத்தகம்..வீரம்,
கம்பீரம், துணிச்சல், தியாகம், விடுதலை தாகம் இவற்றை கடந்த வேறு கோணத்தில் போராளிகள்
பற்றிய பதிவு. போராளிகளின் வாழ்க்கை முறை, எளிமை, நட்புப் பாராட்டுதல், விருந்தோம்பல், இரக்கம், தாயுள்ளம் இவற்றை கூறும் விதம் அருமை.. தான் கண்ட, பழகிய
போராளிகளைப் பற்றி பதிவு செய்த ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் தமிழீழ
விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஒருவராகிறார்..
வலைத்தளங்களில்
தவறாக எழுதப்படும் வரலாறுகளையும், சில சுயநல அரசியல்வாதிகளால்
திரித்துக் கூறப்படும் வரலாறுகளையும் தவிர்த்து, அதை கடந்து அடுத்த
தலைமுறைக்கும், இளைஞர்களுக்கும் சரியான வரலாறு சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில்
இதுவரை புகழேந்தி ஐயா அவர்கள் எழுதிய
நூல்கள் அனைத்தும் பாதுகாக்க வேண்டிய ஆவணங்கள்..
தமிழீழம்
பற்றியும், போராளிகள் பற்றியும் ஈழ மண்ணில் தான்
நின்று கண்டவை களை பயணக் குறிப்பு
போல பதிவு செய்திருக்கும் விதம் புதுமை.. என் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள் ஐயா..
உங்கள்
புத்தகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய வரலாறு..
- அகரன்
Facebook)
Post a Comment