இன்று_சோழநாட்டின்_காதலர்தினம்!

இன்று ஆடிப்பெருக்கு...

 #இன்று_சோழநாட்டின்_காதலர்தினம்

 சோழநாட்டின் முதன்மைக்கொண்டாட்டங்களில் ஒன்று. "அத்தான் வருவார் புதிய தாலிக்கயிற்றை மாற்றிக்கோர்த்து என் கழுத்தில் கட்டுவார்" என்று அவள் காத்திருப்பாள்.வருடா வருடம் தாலிக்கயிற்றை மாற்றிக்கோர்க்கும் ஒருநாளை வைத்தான் சோழன்.

அந்தநாளே ஆடிப்பெருக்கு....

 பெருக்கெடுத்து காவிரி ஓடும் அந்த கரை மீது யாழ்மீட்டி தன் தவிப்புகளை கவிகளாகப்பாடியபடி அவள் காத்திருப்பாள்...

வறுத்த அரிசி,பயறு,சர்க்கரை,பயறு இட்டு பலகாரம் செய்துவந்திருப்பாள். புரதப்பலகாரம் கொஞ்சம் ஊட்டியதுமே குருதியில் புரவிகள் ஓடும் இன்பப்பலகாரம்.

பெருவுடையார் சாட்சியாக சோழக்கொடியின் சாட்சியாக தாய்மண்மீதும் தமிழ்மீதும் சாட்சியாக மூன்று முடிச்சுகள் போட்டு சிலமுத்தங்கள் பரிமாறி மல்லிகை சூட்டி நதிக்கரை ஓசையை நயந்தபடி நிலவொளியில் உடல்கலந்து நட்சத்திரங்களை கண்களால்த்தொடுத்து காதலின் முகம்வரைந்து பிரபஞ்சத்தில் காதலை மட்டும் காணும்  அற்புதத்திருநாள்.ஆம் இன்று காதலில் திளைத்திருக்கும் காதல் நிறைந்திருக்கும் சோழவளநாட்டின் காதலர் திருநாள்.

அத்தானின் மார்புக்கு அழகுசேர்க்கும் போர்த்தளும்புகளில் குறும்புகள் செய்ய அவள் காத்திருப்பாள்.

யுத்தச்சத்தங்கள் மட்டும் கேட்டுச்சலித்த அவனை முத்தச்சத்தத்தில் முனகவைப்பாள்.முத்தம் 💋முத்தமென்றால் என்ன? உதடுகள் வழியாக உள்ளங்கள் பரிமாற்றப்படுவதுதானே...

பதினொருபவுணில் கொடியை கட்டுங்கள் தவறல்ல மஞ்சள் நூலில் தாலியை கட்டுங்கள்.ஆடிப்பெருக்கன்று நூல்மாற்றும் சடங்கில் மீண்டும் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

உண்மையான சோழக்கொடியின் விசுவாசமான ஆண்மகன்களே.... தாய்க்குலமே....

இப்படித்தான் எங்கள் முன்னோர் "இல்லறத்தில்" முழுமை கண்டார்கள்.

UMAkaran rasaiya  (facebook)

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post