அன்டன் பயர்ஸ் கிறிஸ்தோபர்
மறைவு
07.08.2022 -
1970களின்
இறுதிப்பகுதிகளில் ஆயுதப்போராட்டத் தின் வளர்ச்சிக்கு வித்திட்ட
இளைஞர்களில் பயர்ஸ் மாஸ்டர் அல்லது அன்டன் பயர்ஸ் என்ற இளைஞனின் பங்கு
அளப்பரியது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட் டங்களிலேயே செயற்பாடுகள் அதிகமாக இருந்தது.
பேராதனைப்
பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி யான பயர்ஸ் ஒரு
இரசாயன பாட ஆசிரியராக கிழக்
கில் உலாவந்தார். விடுதலைப்போராட்ட செயற்பாடுகளுக்காக ஆசிரியர் என்ற போர்வையில் பல
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது பணியை மிகவும்
சிறப்பாக நிறைவேற்றினார்.
திருகோணமலையில்
கிளிவெட்டி பிரதேசத்தை மைய மாகக் கொண்டு
பணியாற்றியதில் தான் மிகுந்த மன
நிறைவடைந்ததாக அண்மையில் தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட தொடர்பாளராக இருந்த காலத்தில் பல இளைஞர்களை போராட்டத்தின்பால்
உள்வாங்கியிருந்தார். மூத்த
தளபதிகளில் ஒருவரான சீலன் (லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் பார்த்தன் (ஜெயச்சந்திரன்) போன்றோர் விடுதலையின்பால் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள உந்து சக்தியாக இருந்தவர் பயர்ஸ் மாஸ்டரே.
மட்டக்களப்பிற்கு
வருகை தந்திருந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களான டானியல், சார்ள்ஸ், யோகபதி, யோகன் பாதர், காந்தன் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடனும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
மட்டக்களப்பில்
டானியலின் சகோதரர் குணாளனின் மேற்பார்வையில் இயங்கிவந்த Bond Institute இல் இரசாயன ஆசிரியராக
பணியாற்றிய காலத்திலும் கல்வியுடன் விடுதலை உணர்வையும் மாணவர்களிற்கு ஊட்டினார். இவரிடம் இரசாயனம் பயின்ற பல மாணவர்கள் தமிழீழ
விடுதலைப் போராட்டத்தில் பல வழிகளிலும் காத்திரமாக
பங்காற்றியிருந்தனர்.
இரகசியமான
வேலைத்திட்டங்கள் என்றாலும் வெளிப்படையாக சில வேலைகளைச் செய்த
காரணத்தினால் அரச அதிகாரிகளதும் அரச
படைகளதும் கண்காணிப்புக்குள்ளானார். நெருக்குதல்கள் அதிகரிக்க பலரின் வேண்டுதலிற்கிணங்க தற்காலிகமாக வெளிநாடு செல்ல தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார்.
இரகசியமாக
வெளிநாடு புறப்பட்டு இறுதியில் தென்னா பிரிக்கா சென்றடைந்தார். ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பயர்ஸ் மாஸ்டர் தென்னாபிரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிறஒடுக்குமுறைக்கு எதிராக போரா டிய ஆபிரிக்க
தேசிய
காங்கிரசில்
தன்னை இணைத் துக் கொண்டார். தென்னாபிரிக்க
அரசுத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு தேசியவாதியாக அவரது
அரசாங்கத்தில் முக்கிய கடமைகளை வகித்த பெருமையைப் பெற்றுக் கொண்டவர் பயர்ஸ் மாஸ்டர்.
ஆபிரிக்கத்
தேசியக் காங்கிரசில் செயற்பட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தனது உறவை தேசத்தின்குரல்
அன்டன் பாலசிங்கத்தினூடாக பேணிக்கொண்டார்.
சிங்களவர்கள்
தமிழர்களின் விடுதலை
உணர்வைப் புரிந்து கொண்டு தமிழர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என சிங்கள புரட்சிகர
அமைப்புக்களுடன் உறவை ஏற்படுத்தி அவர்களுக்கு
தெளிவுபடுத்தும் முயற்சியில் கடந்த சில மாதங்க ளாக
ஈடுபட்டிருந்தார்.
இறுதிவரை
ஒடுக்கப்பட்ட இனத்துக்காக குரல்கொடுத்த பயர்ஸ் மாஸ்டரின் குரல் திடீரென ஓய்ந்ததை எமது இதயங்கள் இக்கணம்வரை
ஏற்றுக்கொள்ளவில்லை.
Post a Comment