ஸ்ரீ சபாரட்ணத்துக்கு அஞ்சலி செலுத்த ரெலொவினர் உள்ளனர்.
பத்நாபாவை
அஞ்சலி செலுத்த இன்றும் தோழர்கள் உள்ளனர்.
உமா
மகேஸ்ஸ்வரனை அஞ்சலிக்க கழக தோழர் உள்ளனர்.
ஈரோஸ்
இயக்கத்திலும் வருடாவருடம் அஞ்சலி நிகழ்வை நடத்துகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட
நபர்களை அஞ்சலிக்கும் போதும் யுத்தத்தால் உயிர் நீத்த அனைத்து போராளிகளையும் பொதுமக்களையும் உணர்வு பொங்க அஞ்சலி செய்வார்கள்.
நான்
மௌனமாக அஞ்சலிக்கும் போது என் பால்ய
கால சினேகிதங்களை மனதில் நினைத்து அஞ்சலி செய்வேன்.
இங்குள்ள
முறன் என்னவெனில் விடுதலை புலிகள் தமது உறுப்பினர்கள் தலைவர்களை
அஞ்சலிப்பதற்கு பெரும் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.
முன்னாள்
போராளிகளை ஒரு வகை தீண்டத்தாகதவர்களாக
பொதுவெளியில் கருத்துகளை விதைக்கிறார்கள்.
அவன்
ஆமியிட ஆள் ( றேக்கி) என வாய்கூசாமல் சொல்கிறார்கள்.
அவர்களின் நிலமை என்ன? ஒன்றே
ஒன்றுதான் அவர்கள் அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நிர்பந்தம் காரணமாக நடை பிணமாக.
அலைகிறார்கள். அவர்களை தூற்றுபவர்கள் யார்?
யுத்தம்
இடம்பெறும் போது ஷெல் சத்தம்
அலர்ச்சி என
கொழும்பு சென்று பட்டப்படிப்பை முடித்து இன்று முழுமையாக தேசியத்துக்கு காவடி தூக்கும் கயவர்களே கண் முன் வருகிறார்கள்.
நான்
கேட்பது ஒன்றே...? அவர்களை ஆமி ஆள் என்று
சொல்ல நீங்கள் யார்?
போராளிகளா?
ஏதாவது எதிர்காலத்தில் திட்டம் உள்ளதா? அதற்கு
நீங்கள் கட்டி வளர்க்கும் வயிறு விடுமா?
உங்கள்
சாக்கடை அரசியலுக்குள் இறந்த ஆத்மாக்களை இழுக்காதீர்கள். இறந்த போராளிகளை நினைவு கூர அவர்களுக்கு காலம்
கனியும். அப்போது அந்த ஆத்மாக்கள் உண்மையில்
சாந்தியடையும். தற்போது.....?
உங்க
காமடிக்கு அளவே இல்லையா என
பரிகசிக்கும். விருப்பு வெறுப்புக்கு அப்பால் உங்கள் கருத்தை
பதிவிடவும்.
நன்றி வேல்
ஸ்ரீரங்கன். (facebook)
Post a Comment