புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டு விழா யாழ்.இந்துக்கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்காலத்தில் பிரபலமாக இருந்த சிறிதேவி வில்லிசைக்குழுவினரின்நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாம்பசிவ.சோமாஸ்கந்தசர்மா தான் கதை சொல்லி.
நாட்டின் ஜனாதிபதியானபிறேமதாசவினால்புலிகளின்கட்டுப்பாட்டுபகுதிகள்
மீதுவிதிக்கப்பட்டிருந்த
பொருளாதார தடை பற்றியும் இந்நிகழ்வில்
குறிப்பிடப்பட்டது
ஒவ்வொரு
தடையாகச் சொல்லி வந்த சர்மா சவர்க்காரத்திற்கும்
தடை என்றார். அப்போது பிற்பாட்டுப்படுபவர் அப்ப
ஊத்தைஉடுப்புகளை என்ன செய்யிறது ? எனக் கேட்டார். தான் நகைச்சுவையாக சொல்லுவதாக எண்ணிக்கொண்டு எல்லாத்தையும் மூட்டையா கட்டி தன்னட்டை அனுப்பட்டாம் என்கிறார் பிறேமதாச என்றார் சர்மா. கணப்பொழுதுக்குள்மேடைக்கு வந்த அப்போதைய புலிகளின் குரல் பொறுப்பாளர் பரதன் இத்துடன் வில்லிசை நிகழ்ச்சி முடிவடைந்தது என்று அறிவித்தார். சூழ்நிலையின்விபரீதத்தைப் புரிந்துகொண்டு விடுதலைப் புலிவீரனொருவன் தனது ஆளுமையை வெளிப்படுத்திய தருணம் அது.
சற்றுத்தாமதித்திருந்தாலும்
சர்மா சொன்னதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து
யாராவது ஓரிருவர் சிரித்திருந்தாலும்
விடுதலைப்புலிகள் சாதி ரீதியான திமிர்
உள்ளவர்கள் என்பதற்கு இது ஒர் உதாரணம்
எனப் பக்கம் பக்கமாகக் கட்டுரைஎழுதியிருப்பார்கள்.
பிரேமதாசவும் அவரது தலைமைக்கு கீழ் போரிடும் ஆக்கிரமிப்பு படையினருமே எதிரிகள் என்றாலும் அவர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்துவதை புலிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று வெளிப்படுத்திய பரதன் தற்பொழுதுஉலகில் இல்லை.
ஆனால்
வரலாற்றில் அவரது பெயரும் ஆளுமையும் என்றும் அழிக்க முடியாதவை.இந்தவிடயம், புலிகளின் நேர்மையான அரசியலின் எடுத்துக்காட்டாக பலராலும் குறிப்பிடப்படுகிறது.
***
இறுதி
யுத்தத்தின் பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் அப்பகுதியை
சிரமதானம் செய்வதன் மூலம்
திலீபனின் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஏனைய
கட்சிகளும் இதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தன. திலீபன் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவன் தானே, இது நல்ல விடயமே
என மக்களும் எண்ண ஆரம்பித்தனர். ஆனால் முரண்பாடு தொடங்கியது. திலீபனுக்கு இந்த இடத்தில் நினைவுத்தூபியை
நிறுவிய சி.வி.கேசிவஞானம் அவர்கள்
மலர் வணக்கம் செய்து விட்டு வருகையில் ஊடகவியாளர்கள் ஓலிவாங்கியை
அவர் முன் நீட்டி ஏதோ
கேட்க முனைந்தனர். அப்போது தமிழ்த்தேசிய முன்னனியில் இணைந்திருந்த
பொன். மாஸ்ரர் இங்கு ஏதும் பேசமுடியாது என உத்தரவிட்டார். இந்திய
இராணுவத்தின் காலத்தில் திலீபனின் ஓராண்டு நினைவை முன்னிட்டு தான் அமைத்த தூபி
இருந்த இடத்தில் தன்னால் எதனைச் செய்ய முடியும் எதனைச் செய்ய முடியாது என உத்தரவு இட
இவர் யாரென எண்ணினார். அவருக்கு
பொன்.மாஸ்டரைத் தெரியாது. மாத்தையா, பண்டிதர்,திலீபன்,மதி போன்ற குறிப்பிட்ட
போராளிகளை மட்டுமே தெரியும். எனவே கோபத்தின்உச்சிக்கே போன அவர்
இந்த இடத்தில் முதலில் தூபி அமைத்தது நான்
தானே என்றதும், அப்போது அரசியலில் புதிதாக இணைந்திருந்த பொன் மாஸ்ரருக்கு என்ன
செய்வது எனப் புரியவில்லை.
அப்போது
ஜனநாயகப்போராளிகள் கட்சிகளும் தமிழ் தேசிய முன்னணியினரும் முரண்பட்டனர்.அரசியலுக்காக திலீபனை உரிமை கொண்டாடுகிறார்களே என முன்னாள் போராளிகள்
மனம் வருந்தினர்.
இந்நிலையில்
அப்போது யாழ் நகர முதல்வராக
இருந்த ஆர்னோல்ட் தமது ஆளுகைக்கு உட்பட்ட
பகுதிக்குள் திலீபனின் தூபி இருப்பதால் தாமே
இந்நிகழ்வை நடாத்த
இருப்பதாக அறிவித்தார். அவரும் ஓருகட்சியைச் சார்ந்தவர் தானே என முன்னாள்
போராளிகள் எண்ணினர்.
உள்ளூராட்சி
சபைகள் நினைவேந்தல்களை நடத்தினால்
கட்சி சாயம் பூசப்படும். எனவே கட்சி சாராத
போராளிகள் இதனை நடத்துவதே சரியானது
என எண்ணினர்.
ஏற்கனவேபுலிகளை
ஏற்காத யோகேஸ்வரி என்ற ஈ.பி.டி.பி உறுப்பினர்
மேயராக இருந்திருக்கிறார்.
அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால்
என்ன செய்வது என எண்ணினர்.
இந்நிலையில்
சில விடயங்களை மூத்தவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒரு நகரம் என்ற வகையில் மேயரே
முதல் பிரஜை. எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வந்த சமயம் அப்போது
மாநகரசபை மேயராக விளங்கிய தமிழராகிய உருத்திராவே அவருக்கு முதன்முதல் கைலாகு கொடுத்து வரவேற்றவர், அதன் பின்னரே நாட்டை
ஆண்டு கொண்டிருந்தோர் கைலாகு கொடுத்தனர். இந்த விடயங்களைஅறிந்ததும் எப்படியோ முரண்பட்ட இரு அணியினரின் ஓத்துழைப்புடன்நிகழ்வுகளை நடத்தி முடித்தாயிற்று 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் தொடர்பான விடயம்
இது.
***
கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு இந்த வருடமும்தொடரக் கூடாது என விடுதலையை நேசித்த பலரும் விரும்பினர். இவ்வாறானவர்களில் தீவக நினைவேந்தல் குழுவினர் முக்கியமானவர்கள் இவர்கள் பலதரப்பினரையும் சந்திக்க முயன்றனர்.
அரசியல்
ஆய்வாளர் நிலாந்தன்,மாவீரரின்தந்தையான வசீர்காக்கா
என்று அழைக்கப்படும் மனோகர்ஆகியோரைச் சந்தித்த போது முன்னணியினரை இணைப்பதற்கு
சட்டத்தரணி குருபரன் அவர்களின் உதவியை நாடலாம் எனசுட்டிக்காட்டப்பட்டது.
திலீபனின்நினைவுத்தூபி
மாநாகரசபையின் ஆளுகைக்குட்பட்டபகுதிக்குள் அமைந் திருப்பதால் அடுத்து
யாழ்நகரமுதல்வர்தரப்பைச்சந்தித்தனர்.
அவர்களிடம் தங்களது நோக்கத்தைவலியுறுத்தினர். அதற்கு பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த இராணுவம் அனுமதிக்குமா? மாநகரசபை என்ற வகையில் நாங்கள்
ஆட்சியில் இருப்பதால் இம்முறை நிகழ்வை நாமே செய்கிறோம் எனப்பதிலளித்தார்
நகர முதல்வர். அச்சமயத்தில் புதுக்கட்டமைப்புக்கானஅழைப்பை
முதல்வர் விடுத்திருக்கவேண்டும். முதலில் தூபியை அமைத்த சி.வி.கேசிவஞானம்
அவர்களுடன் முரண்பட்ட தமது முன்னாள் சகாக்கள்
எப்படி நடந்து கொள்வர் என்பதை அவர்ஊகித்திருக்க வேண்டும்.
தீவகக்குழுவினர்நினைவு
தூபியைதுப்பரவு செய்தல்
வர்ணம் பூசுதல் முதலானபணிகளை ஆரம்பித்திருந்த வேளை முதல்வர் தரப்பும்
அதில் பங்களித்தது இந்நிலையில் முன்னணி கட்சியினர் தமது நிகழ்ச்சி நிரலைவெளியிட்டனர்.
அப்போது
தான் முதல்வர் தரப்பு விழித்துக் கொண்டது. மீண்டும் ஆரம்பகட்டத்திலிருந்து தமது முயற்சியை மேற்கொள்ளவேண்டிய
நிலைக்கு தீவகக்குழுவினர்தள்ளப்பட்டனர்.முதல்வர் அச்சமயம் வெளிநாட்டுக்குச்சென்றிருந்தார்.
எனவே அத்தரப்பின் முக்கிய புள்ளியானபார்த்தீபனை மு.மனோகர் சந்தித்தார். என்ன முடிவு எடுத்தாலும்
தாங்கள் சம்மதிப்பதாக பார்த்தீபன் உறுதியுரைத்தார்.
அந்த நம்பிக்கையில் முன்னணியின் ஏற்பாட்டுக்குழுப் பொறுப்பாளர் பொன்மாஸ்ரரைச் சந்தித்தார். அரசியல் கலக்காமல் இந்நிகழ்வுகளை நடத்த வேண்டும். இந்நிகழ்வை பொதுவாக நடத்துவதில் உங்களுக்கு உள்ள சங்கடங்கள் என்ன? என பொன்மாஸ்டரிடம் கேட்டார். எதுவுமில்லை
என்ற பதில் கிடைத்ததும் ,அவர் திருப்தியாகச்சென்றார்.
எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தது. இச்சமயம் வந்திறங்கினார் சட்டத்தரணி சுகாஸ். அவர் ஒலிவாங்கியை எடுத்து மறு தரப்பை விளாசத் தொடங்கினார். பொறுமையாக இருக்க முயற்சித்த போதும் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தவர்கள், என்று கூறி தாக்கத்தொடங்கியதும், மனோகர் அவர்கள் பொன் மாஸ்டரின்கையைப்பிடித்துக்கொண்டு போய் திலீபனைப் பற்றி மட்டும் பேசுங்கள். மற்றவர்களை தாக்கும் களமாக இதனை மாற்ற வேண்டாம்.என வலியுறுத்தினார். தமிழ்
இனத்தின் கடைசித்தேசியத்
தலைவர் கஜேந்திரகுமார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை
தெரிவித்தவர் என்ற வகையில் ஆரம்பத்திலேயே
பொன் மாஸ்டர்,சுகாஷிற்கு சில அறிவுறுத்தல்களைவழங்கியிருக்க வேண்டும் அதைச் செய்ய அவர் தவறிவிட்டார். இந்நிலையில்
போராளி பரதனின் பாணியில் பொன் மாஸ்டர் ஒலிவாங்கியைவாங்கியிருக்க
வேண்டும். அல்லது பறித்திருக்க வேண்டும். ஒரு முன்னாள் போராளி
என்ற வகையில் அவர் அதனை செய்யாதது
மட்டுமல்ல, சுகாஷின்செயற்பாட்டை நியாயப்படுத்தவும்
முயன்றார்.
திலீபனின் நினைவிடத்தில்
இப்படி ஒரு அசிங்கமா என
தேசப்பற்றாளர்கள் பலரும் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது. ஆனாலும்
முதன்மை சுடரினைபண்டிதரின் அம்மா ஏற்றவேண்டுமெனமனோகர்கூறியதை, பொன் மாஸ்டர் ஆட்சேபிக்கவில்லை.
என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட
வேண்டும்.
(ஆரம்ப
நிகழ்வில் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார் என்ற வகையில், இறுதி
நாள் நிகழ்வில்முன்னணியினர் குறிப்பிடும் மாவீரரின் தாயோ, தந்தையோ பொதுச்சுடரை ஏற்ற அழைப்பது சரியாக
இருக்கும்).
உறவுகள்
வருகை தரவில்லை. சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரியர்கணேசலிங்கம், பசுமை இயக்க அமைப்பாளர் ஐங்கரநேசன் உட்பட பலரும் எந்த அரசியல் தரப்பினரும்
ஏற்பாட்டுகு ழுவில் இடம்
பெறக் கூடாது என வலியுறுத்தினர். ஆனால்
சிவாஜிலிங்கம், மணிவண்ணன் ஆகியோர் பார்த்திபன் இக்குழுவில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர்.
அடுத்தசந்திப்பில் பொது அமைப்புகளின்பிரதிநிதிகளைசேர்த்துக்கொள்ளவிருப்பதால்
அதுவரை பார்த்தீபனின்பிரதிநிதித்துவத்தை
தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தொடர்பு
கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் அந்த முயற்சிகள் யாவும்
நிராகரிக்கப்பட்டன. இதன் பின்னர் இந்த
பொதுக் கட்டமைப்பு தன்னால்த்தான்உருவாக்கப்பட்டது
எனவும் தான் அதனைகண்காணித்துக்கொண்டிருப்பதாகவும் ஊடகசந்திப்பொன்றில்
மணிவண்ணன்குறிப்பிட்டிருந்தார்
.
இந்த
நடவடிக்கை பொதுக்கட்டமைப்பினரை ஆழ்ந்த மன வேதனைக்குள்ளாக்கியது. எனவே தாம்
சுயாதீனமான அமைப்பு என்றும்எந்தக்கட்சியையோ,அணியோசாராதவர்கள்
எனவும் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாய நிலை பொதுக்கட்டமைப்பினருக்கு ஏற்பட்டது. எனினும்
மாநகரசபையிடம் அவர்களது பங்களிப்பாக சில உதவிகளை பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
திலீபனின்பெயரால்
நடைபெறும் நல்ல விடயங்கள் அனைத்தும்
வரவேற்கத்தக்கனவே.
கண்ணீர்
விட்டே வளர்த்தோம்.
-துமிலன்
Post a Comment