நல்லூரான் வீதியிலே
நாவரண்டு உதடு வெடிக்க
உயிர் மெல்ல மெல்ல
உருக உருக
உனை எரித்து
மெழுகுவர்த்தி ஆனாயே
அகிம்சையின் அடையாளமே
திலீபன் அண்ணாவே!!!!!
ஈராறு நாள் பன்னிருகை
வேலவனின் முன்றலிலே
அன்று நீயிருந்த
தவம் கண்ட
மக்களும் மாணவரும்
பேராறாய் பெருக்கெடுத்தோடிய
கண்ணீரை துடைக்க
மறந்து
ஒப்பில்லா வீரனாகிய
உமது உறுதி கண்டு
வெம்பினர் விசும்பினர்
பின் வீரமுற்றனர்
தீயினால் சுட்ட வெண் சங்கினைப் போல
மென்மேலும் தெளிவு
பெற்றனர்!!!!!
ஆனால்
காந்தியை போற்றிய
அந்த
இந்திய தேசம்
அன்று நீ
ஏந்திய ஒப்பந்தத்தை
மெத்தனப் போக்குடன்
அறவறச்
செய்யவில்லை!!!!!
ஆனால்
நீ கொண்ட கொள்கையில்
இருந்து மாறவில்லை
எம் மக்களுக்கு உன் உயிரையே ஆயுதமாக்கினாய்
உன் மரணத்தை நீயே
ஏற்றுக் கொண்டு
தாயக விடிவுக்காய்
வித்தாகிப் போனாய்!!!!!
உயிர் பிரியும்
வேளையிலும்
உன் நெஞ்சினில்
எழுந்த முணுமுணுப்பு
வென்றே ஆகும்
நம்புகின்றோம்!!!!!
உங்களது ஈழப்பசி
மிகவும் வலியது
தமிழீழ தாகமும்
என்றும் தீராது!!!!!
-நிலாதமிழ்.
Post a Comment