மீள் பதிவு
32 வது
ஆண்டு நினைவு 01.12.2022
- மட்டு
நேசன்
1990 டிசெம்பர்
01 - ஈழத்தமிழர் வரலாற்றில் கறை படிந்த நாள்.
தமிழரின் உரிமைப் போரில் தம்முயிரை ஈகம் செய்யப் புறப்பட்ட தமிழ் இளைஞர்களில் ஒரு குழுவினர் அரசின் எடுபிடிகளாகி அந்தத் தைரியத்தில் சொந்த இனத்திலேயே கூட்டுப்பாலியல் வன்முறையையும் படுகொலையையும் அரங்கேற்றிய நாள். இந்த ஈனச் செயலுக்குப்
பலியானவர் விஜி என்றழைக்கப்படும் நல்லதம்பி
அனுஷ்யா.
இவர்
எந்த இயக்கத்தையும் சேர்ந்தவர் அல்ல. மட்டக்களப்பு வின்சென் மகளிர் கல்லூரியின் உயர்தர (வர்த்தகப் பிரிவு) மாணவி. பரதத்திலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். கல்லடியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தே
இவர் தனது கற்றல் நடவடிக்கைகளைத்
தொடர்ந்து வந்தார். விடுமுறைகளின் போது தனது சொந்த
ஊரான ஆரையம்பதிக்கு வருவதுண்டு. ஓர் அக்கா, ஒரு
தங்கை,இரு தம்பி களுடன்
சேர்ந்திருப்பது இந்த விடுமுறைக்காலங்களில் தான். இவர்
செய்த ஓரே தவறு அழகாகப்
பிறந்து தொலைத்தது தான். அதுதான் படையினரதும் அவர்களது எடுபிடிகளாகத் திரிந்த ரெலோ இயக்கத்தினரதும் கண்ணை
உறுத்தியது. 1987இலிருந்து படையினர் அடிக்கடி இவரது வீட்டிற்குச் சோதனை, விசாரணை என்ற பெயரில் வருவதுண்டு. இவரது மாமன் 2ம் லெப் கோபி (நாகமணி ஆனந்தராசா
)28.06.1987 மூதூரில் நடைபெற்ற முற்றுகை ஒன்றின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
அதனைச்
சாட்டியே படையினரும் எடுபிடிகளும் வருவர். இவர்களின் தொல்லைகளில் இருந்து தப்ப விஜி ஆரையம்பதியில்
இருக்கும் நாட்களில் இரவில் தனது நண்பி ஒருவரின்
வீட்டிலேயே தங்குவதுண்டு. அவ்வாறு ஒரு நாள் தங்கியிருக்கையிலேயே
ரெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரைத் தேடி இவரது வீட்டிற்குச் சென்றனர். காங்கேயன் ஓடையைச் சேர்ந்த முஸ்லீம் உறுப்பினரான அன்வர், ஆரையம்பதியைச் சேர்ந்த ராபர்ட், வெள்ளையன், ராம் ,செட்டிபாளையம்
கருணாநிதி (ஜனாவின் தம்பி )ஆகியோரே
இந்த ரெலோவினர். அங்கு இவர் இல்லை என்றறிந்ததும்
இவர் குறிப்பிட்ட நண்பியின் வீட்டில் தான் இரவில் தங்குவதுண்டு
என்ற தகவலை ஒரு பெண்ணே ரெலோவினருக்கு
வழங்கினார். ரெலோவினர் என்ன செய்வார்கள்? அவர்களது
சுபாவம் என்ன என்பது தெரிந்தும்
அவர்களுக்கு ஒரு குமர்ப் பெண்ணை
அதுவும் இரவில் கைது செய்வதற்கு உதவியவரைப்
பெண்குலத்தின் சாபக்கேடு என்று சொல்லலாம். ஏனெனில் இதே நபர்களால் ஏற்கனவே
பிரதீஸ் என்ற மாவீரரின் தாய்
திருமதி பூரணலட்சுமி சின்னத்துரை, வங்கி ஊழியரான தம்பிராசா குருகுலசிங்கம் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
ஆகவே நடக்கவிருக்கும் விபரீதத்தைத் தெரிந்து கொண்டே இப்பெண்மணி இப்பாதகச் செயலுக்குத் துணை போயுள்ளார். (விஜியின்
சம்பவத்திற்குப் பின் குருகுலசிங்கத்தின் தந்தையும் வர்;த்தகருமான தம்பிராசா, சகோதரியான கர்ப்பிணிப் பெண் மலர் ஆகியோரையும்
ரெலோவினர் கொன்றனர்)
அடுத்த
நாள் காலை ரெலோவின் மட்டக்களப்புப்
பணிமனைக்கு விஜியின் குடும்பத்தினர் ஓடினர். அந்தப் பணிமனையில் இருந்து கொண்டு தமது கட்சியினரை வழிநடத்திக் கொண்டிருந்தவர் ஜனா என்கின்ற கோவிந்தன் கருணாகரம். இவர் அப்போது பாராளுமன்ற உறுப்பினரும் கூட. பணிமனையில் மிக அலட்சியமான பதில் கிடைத்தது. - ‘நாங்கள் கைது செய்ய வில்லை’
கைது
செய்தவர்களில் மூவர் ஆரையம்பதி வாசிகள். அடுத்தவர் அயலூரான காங்கேயன் ஓடையைச் சேர்ந்தவர். அடுத்தவர் செட்டிபாளயத்தைச் சேர்ந்த கருணாநிதி
(ஜனாவின் தம்பி )இவர்கள் யார் என்பது ஊருக்கே
தெரியும். இந்நிலையில் பணிமனையில் கிடைத்த பதில் பெற்றோரை அதிர வைத்தது. பின்னர் சடலமொன்று ஆற்றில் மிதப்பதாகச் செய்தி ஒன்று கிடைத்தது. ஆற்றங்கரைக்கு விரைந்த விஜியின் மாமன் அழகு துரை அச்சடலம் தனது மருமகளினுடையதே என இனங்காட்டினார். கூட்டுப்
பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின்னரே இவர் கொலை செய்யப்பட்டதாக
வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனை உறுதிப்;படுத்தியது. எனினும் அனுஷியா (விஜி) ஒரு பயங்கரவாதி எனக்
கூறும் ஆவணத்தில் கையொப்பமிடுமாறு படைத்தரப்பு அச்சுறுத்தியது. இனி
இழப்பதற்கு என்ன இருக்கின்றது? கையொப்பமிட
மறுத்துவிட்டனர் குடும்பத்தினர்.
ஒரு
குமர்ப் பெண்ணுக்கு இப்பாதகத்தைப் புரிந்தவர்களுக்கு அவர்களது வீட்டில் அம்மா, சகோதரி, மருமகள், பெறாமகள் சோறு போட்டனர் தான்.
இந்தச் சம்பவத்தை அவர்களால் ஜீரணிக்க முடிந்தது. ஆனால் புலிகளால் முடியவில்லை. இவர்களுக்குச் சாவுத் தண்டனை வழங்கத் தீர்மானித்தனர். எனினும் இந்த ஐவரில் ராமும் ,கருணாநிதியும் தப்பி விட்டனர். சிலவருடங்களுக்கு முன்னர் கருணாநிதி
லண்டனில் சாவடைந்தார்,ராமை உத்தமன் எனக் கருதிய பெண்
ஒருவர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஏனைய மூவரும் சாவுத் தண்டனைக்கு உள்ளாகிவிட்டனர். இந்த மூவரையும் பெயரையும்
தமது மாவீரர் பட்டியலில் இணைத்துள்ளார் ஜனா. மாவீரர்களைக் கொச்சைப்படுத்த
இதை விட வேறு என்ன
வேண்டும்? இவர்களுக்கும் சுடர் ஏற்றப் போகின்றார் அவர். இத்தனைக்கும் பிறகு மாகாண சபைத் தேர்தலில் 16.536
வாக்குகள் அளித்து மாகாண
சபை உறுப்பிராக்கினர் மட்டக்களப்பு மக்கள். கடந்த பொதுத்தேர்தலில் 28094 பேர்
இவருக்கு வாக்களித்தனர். யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் கருமாரி செய்ய யோகர் சுவாமிகள் இருந்தார். மட்டக்களப்பாருக்கு ....? அந்த பாக்கியம் கூட
மட்டக்களப்பு மக்களுக்குக் கிடைக்கவில்லை.
ஆச்சரியம் என்னவெனில் ஜனாவுக்கு தனது தங்கையை
கட்டிக் கொடுக்க மட்டக்களப்பு அரசாங்க அதிபர் தயாராக இருந்தார் என்பது தான். ஆனால் ஏதோ வடிவத்தில் ஒரு
முஸ்லீம் மூலம் ஜனாவுக்குப் பாடம் படிப்பித்து விட்டார் கடவுள். என்ன தான் பணத்தை,
லண்டனில் கடையை வீசி எறிந்தாலும் விஜிக்குச்
செய்த பாவம் சும்மா விடுமா?
இங்கிலாந்தில்
லிவர்ப்பூல் முத்துமாரியம்மன் கோவிலில் இவர் மெய்மறந்து வழிபாடு
செய்கையில் இவரது ஊரவர்களே அருகில் வந்து ‘கொலைகாரன் என்ன மாதிரிக் கும்பிடுறான்
பார்’
எனச் சொல்லி இவரது வழிபாட்டைக் குழப்பினர் என்ற செய்தியும் அண்மையில்
அம்பலமானது. இங்கிலாந்திலுள்ளவர்களுக்கே
மறுமுகம் தெரிகையில் மட்டக்களப்பு மக்கள் தான் அப்பாவிகளாக உள்ளனர்.
ஏனெனில் இவரையும் யேசுநாதரின் மறுவடிவம் எனக் காட்ட மட்டுமண்ணில்
பிறந்த ஒருவர், மட்டுமண்ணில் பெண்எடுத்த ஒருவர் என இருபத்திரிகையாளர்கள் தலைகீழாக நிற்கிறார்கள்.
இருவருமே அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள். இவர்களில் ‘ஒருவர் பிரபாகரனுக்குத் தேசியத் தலைவர் என்ற அந்தஸ்தை யார்
கொடுத்தது? தாமாகவே
அந்த பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். மக்களல்லவா இந்தப் பட்டத்தைக் கொடுத்திருக்க வேண்டியவர்கள’; எனக்
கூறிய பிரமுகர். இழப்பின் வலி தெரியாதவர். தெய்வத்தைப்
பிசாசு என்றும் பிசாசைத் தெய்வம் என்றும் கூறுபவர். ‘பணத்தை மட்டும் சேர்த்துக் கொள் உலகம் முழுவதும்
சேர்ந்து கொண்டு உன்னை ஒரு பண்பாளன் என்று
கூறத் தயங்காது’ என்ற பெர்னாட்ஷாவின்
கூற்றுத்தான் ஜனாவின்
விடயத்தில் நினைவுக்கு வருகின்றது.
சரி
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பாவது விஜியி;ன் மரணத்துக்கு நீதி
கிடைக்குமா? 1971இல் இடம்பெற்ற பங்காளதேஷின்
விடுதலைப் போராட்டத்தின் போது பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து மக்களுக்குத்
துரோகம் செய்த பிரபல அரசியல் வாதிகள் சவாஹீத்தீன் குவாதர் சவ்திரி மற்றும் அல் அஹ்சான் முகமது
முஜாசித் ஆகிய இருவருக்கும் கடந்த
22ஆம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்படிப் பார்த்தால் இன்னும் காலங்கடந்து விடவில்லை. தமிழரசுக் கட்சியின் செயலர் துரைராஜா சிங்கம் ஒரு வழக்கறிஞர் தான்.
தன்னை பீ.எம்.டபிள்யூ
கார் என்று கூறும் சுமந்திரனும் ஒரு வழக்கறிஞர் தான்.
‘சமூகநலன் சார் விடயங்களை எமக்கு
யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை“ என முழக்கமிடும் ரெலோ
பிரமுகர் ஸ்ரீகாந்தாவும் ஒரு வழக்கறிஞர் தான்.
ஏன் சம்பந்தன் ஐயாவும் ஒரு வழக்கறிஞர் தான்.
இந்த வழக்கறிஞர்களால் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பில் விடுவிக்க
ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கமுடியவில்லை. இறுதிப்போரில் நடைபெற்ற விடயங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை உள்ளக விசாரணையே போதும் என நியாயப்படுத்தவே நேரம்
போதவில்லைதான். என்றாலும் இந்த வழக்கறிஞர் அணி
ஜனா மற்றும் ராமுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்குமா? அல்லது வழக்கம் போல் தமிழருக்கு நாமம்
போடுமா?
விஜியின்
விடயத்தில் அனைவரும் மௌனமாக இருந்ததால் தான் 2006 ஜனவரி 26இல் தமிழர் புனர்வாழ்வு
கழகத்தில் பணியாற்றிய வட்டக்கச்சியைச் சேர்ந்த தனுஷ்கோடி பிரேமினி என்பவர் கருணா - பிள்ளையான் குழு உறுப்பினர்களால் கூட்டுப்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின் கோடரியால் வெட்டிக்
கொல்லப்பட்டார். பிரதீபன் என்றழைக்கப்படும் சிந்துஜன், சித்தா என்றழைக்கப்படும் பிரதீப், ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன், சஞ்சி என்றழைக்கப்படும் சாந்தன், ஜீவா என்றழைக்கப்படும் திலகன்
ஆகியோரே இப்பாதகத்தைப் புரிந்தவர்கள். தொடர்ந்து புங்குடுதீவில் வித்தியா சிவலோகநாதன் என இப்பாதகங்கள் தொடர்கின்றன.
பெண்கள் அமைப்புக்கள், மனித உரிமை இயக்கங்கள்
காலம் தாழ்த்தியேனும் விஜி, பிறேமினி விடயத்தில் நடவடிக்கை எடுக்கக் கோருமா?
Post a Comment