மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட இவன்ஜலின் சர்வதேச அழகு ராணி போட்டியில் கலந்து கொள்கின்றார்!

இலங்கையின் மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட இவன்ஜலின் பிரான்சியா லட்சுமணர்  சர்வதேச அழகு ராணி போட்டியில் கலந்து கொள்கின்றார்.

ஜப்பானில் நடைபெற இருக்கும் ஜப்பான் டோக்கியோவில் சர்வதேச அழகு ராணி போட்டியில் கலந்து கொள்ள இலங்கையின் மட்டக்களப்பினை பூர்வீகமாகக் கொண்ட இவன்ஜலின் பிரான்சியா லட்சுமணர் ( Miss. Evanjelin Elchmanar)ஜப்பான் பயணமானார்.

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி டோக்கியோவில் சர்வதேச அழகு ராணி போட்டி இடம்பெறவுள்ளது.

சர்வதேச அழகு ராணி போட்டிக்காக ஜப்பான் பறந்தார் மட்டக்களப்பு இவன்ஜலின் | Batticaloa Evangeline International Beauty Pageant

ஐக்கிய இராச்சியத்தின் அழகு ராணி

இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தற்போதைய ஐக்கிய இராச்சிய உலக அழகியும் இலட்சுமணர் சாந்தி தம்பதியரின் புதல்வியுமான இவன்ஜலின் ( Miss. Evanjelin Elchmanar), அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியை பூர்வீகமாக கொண்டவர்.

ஐக்கிய இராச்சியத்தில் உலக அழகு ராணியாக 2021 இல் தெரிவாகிய இவன்ஜலின், அதற்கு முன்பு பெரிய பிரித்தானியாவில் உலக இளம் அழகியாக 2017 இல் தெரிவானவர்.

இந்நிலையில் ஜப்பானில் நடைபெற இருக்கும் அறுபதாவது உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவதற்கு கடந்த திங்களன்று (28) லண்டனில் இருந்து அவர்( Miss. Evanjelin Elchmanar) ஜப்பான் பயணமானார் .

அதேசமயம் பிரித்தானியாவில் பல தர்மஸ்தாபனங்களை நடத்தி வரும் இவர், அதனூடாக மட்டக்களப்பு பகுதிகளிலே வீடற்ற வர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்.

அதோடு, காலி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளையும் இவன்ஜலின் ( Miss. Evanjelin Elchmanar) வழங்கி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




















தகவல் Varnakulasingham Kamaladhas(facebook)

 






0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post