தேசியத்தின் பழமாக விளங்கிய அருச்சுனா அப்பா !

மன்னார் மாந்தையில் சிறிலங்கா படையினருடனான சமரில் 12.06.1986 அன்று வீரச்சாவடைந்த மாவீரர் லெப்டினன்ட் RPG அருச்சுனா (தமிழரசுவரன்) அவர்களின் தந்தையார்  காசிப்பிள்ளை சதாசிவம் (சிவதொண்டன்மறைவு பற்றிய செய்தியை கவலையுடன் அறியத்தருகின்றோம். இவரது மறைவு குறித்து யாழ்மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக விளங்கிய . ராஜன் வெளியிட்ட செய்தி பின்வருமாறு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிதவாத அரசியல் கட்சியாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் யாழ் அரச அதிபர் பிரதேசத்தின் எல்லைகளிற்குட்பட்ட கிராமங்களின் சிற்றூர் அவைகளின்  வட்டப் பொறுப்பாளராகவிருந்து எங்களால் சதாசிவம் மாஸ்டர் என்றும். சதாசிவம் ஐயா என்றும். Rpg. அருச்சுனா அப்பா என்றும் அழைக்கப்பட்ட வரின் இழப்பு தமிழ் தேசியத்தின் இழப்பாகவே நான் கருதுகிறேன். அவர் நான் பிறப்பதற்கு முன்னரே தமிழ் தேசியத்திற்காக உழைத்த ஒருவர் என்பதையும் நான் அறிவேன். அவர் தமிழ் தேசத்திற்காக இரண்டு பிள்ளைகளை கொடுத்தவர். நானும் விழுப்புண் பட்டவர். குடும்பமே தமிழ் தேசத்திற்காய் உழைக்கவேண்டுமென்று  .குடும்பமாகவே இறுதிவரை உழைத்துக்கொண்டிருந்தவர். அவரது மன உறுதிக்கு எடுத்து காட்டாக அவரின் மகனின் வீரமரணமடைந்த புகழ் உடலை வீட்டிற்கு கொண்டு போய் கொடுத்த போது .அவர் அடுத்த மகனை போராட்டத்திற்கு அனுப்புவதற்கு ஆயத்தமானவர். மன்னார் தளபதிகள் விக்ரர். ராதா அண்ணன்கள் பெரும்பாசத்திற்கும் உரித்தானவர் மாஸ்டர். தளபதி கிட்டு அண்ணா தீலிபன் அண்ணாவின் பாசத்திற்கும் நெருப்பில் நிற்கும் உரியவர். இவர்களுடன் சேர்ந்து உழைத்த ஒரு தந்தை மாஸ்டர் சதாசிவம். எல்லாவற்றிற்கும் மேலாக தேசியத்தலைவரினதும்.பெரும்பாசத்திற்குரியவர்.இப்படிபட்ட ஒருவருடன் யாழ் மாவட்ட விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் அமைப்பாளராக இருந்து பணியாற்றியது நான் பெற்ற பேறாகவே கருதுகிறேன். இந்த காலகட்ட மிதவாத அரசியல் சூழலில் அவரின் இழப்பு சோகம் தான். இவரின் இழப்பால் துயர் அடைந்து நிற்கும் குடும்பத்தாரரின் துயரில் நானும் பங்கேற்று அவரின் புகழ் உடம்பிற்கு  தொலைவிலிருந்து எனது இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post