இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா !

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்ட போராளி தாஸ் ( சுந்தரமூர்த்தி) இந்தியா வில் 28/01/2023  சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.

தாஸ் அண்ணா தன்னை ஆரம்பத்தில் ஈரோஸ் அமைப்புடன் இணைத்துக்கொண்டு தமிழின் விடுதலைக்காக போராடியவர்.இந்திய அமைதிப்படை காலத்தின் மிதவாத அரசியலில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதியாகவும் பணியாற்றியவர்.பின்னர் ஈரோஸ் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்த போது . தாஸ் அண்ணாவும் இணைந்து கொண்டார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்  தமிழீழ ஆய்வு நிறுவனமாகவிருந்து. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமாக பெயர் மாற்றம் கொண்டடிருந்த நிறுவனத்தின் திட்டமிடல் பகுதியின் பணிப்பாளராக இருந்தவர்.திட்டங்கள் தீட்டுவதிலும்.அதனை திட்டவரைப்பாக்குவதிலும். கண்காணிப்பு. மீளாய்வு செய்வதிலும் துறைசார்ந்த நிபுணத்துவமுடையவராக இருந்தவர்TECH என்ற நிறுவனத்தின் பணிப்பாளராகவும் இருந்தவர். இந்த நிறுவனத்தின்  வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.இந்த காலகட்டத்தில் தேசியத் தலைவரின் பணிப்பின்படி சுவிஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளிற்கும் சென்று tech  நிறுவனத்தின் வளர்ச்சிக்கும். மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் உழைத்தவர்.தாஸ் அண்ணா சிறந்த எழுத்தாளர். தமிழீழ வளங்கள் தொடர்பாக. தேடலுள்ளவராகவும். நேரடி   கள அனுபவமுள்ளவராகவும் இருந்தவர்.தனது படிப்பறிவு பட்டறிவு  மற்வர்களிற்கும் கொடுக்கும் நோக்குடன் நேற்று இன்று நாளை என்று ஒரு கட்டுரை தொடரை  "இலகக்கு" என்ற பத்திரிகையில் எழுதி வருகிறார்.சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் சொந்த மண்ணின் மேம்பாட்டிற்காகவே இறுதிவரை உழைத்தவர்.இறுதியாக தேசியத்தலைவரால் உருவாக்கபட்ட " நவம் அறிவு கூட" 278 குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடிற்கான திட்டமுகாமையாளராக. இருந்து தன் பணியை திறம்படசெய்து நவம் அறிவு கூட குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்.அவர் எழுதும் ஒவ்வொரு திட்டறிக்கையும் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post