ஏர்
நிலமே”…..
“வலிமையான
மனிதர்களில் எளிமையான புரட்சியாளர் இவர்கள்"…
எனும்
தொனிப்பொருளில்
“ஏர்
நிலம்”அமைப்பினால் தைபூச நன் நாளை முன்னிட்டு
ஏற்பாடு செய்த முதிய வயதையுடைய விவசாயிகள்,கைம்பணி செய்பவர்களை கௌரவிப்பதுடனான பொங்கல் விழா-2023
நிகழ்வானது
11.02.2023 அன்று தாயகத்தின் மாங்குளம் மாவடி சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது…..
தள்ளாடும்
வயதிலும் தளராத நம்பிக்கையுடன் தொழில் செய்யும்
10 கடின உழைப்பாளர்கள் அதாவது
விவசாயிகள்,கைம்பணி உற்பத்தியாளர்களை இனம்கண்டு அவர்களை வாழும் வயதினிலே வாழ்த்தி மகிழ்ந்தோம்…
இக்
கெளரவித்து நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வானது தாயகத்தில் மூன்றாவது தடவையாக நடைபெறுவதும் சிறப்பம்சமாகும்…
நிகழ்வின்
ஆரம்ப நிகழ்வாக மங்கள வாத்திய இசை முழங்க வரவேற்பு,
கலைநிகழ்வுகள்,
உரைகள், பரிசில்கள் பொங்கல்,
உணவு வழங்கல் என நிகழ்வு மகிழ்வுர
நிறைவானது….
நிகழ்வினை
கவிஞர் மன்னார் பெனில் தலைமை ஏற்று நடத்தினார்..
இதில்
கிராமமட்ட பொது அமைப்புக்கள்,முன்பள்ளி
சிறார்கள்,பெற்றோர்கள்,
அறநெறி
மாணவர்கள்,கிராம மக்கள் எனப் பலரும் கலந்து
கொண்டனர்..
நிகழ்வை
ஏற்பாடு செய்த ஏர்
நிலத்திற்கும்,
முழுமையான
நிதிப் பங்களிப்பை வழங்கிய புலம்பெயர் தேசத்து உறவுகளான…
திரு.நமசிவாயம் இராமச்சந்திரன்,
திருமதி.மனோகரன் கிருஷ்ணகுமாரி,
திரு.துரைராசா லிங்கேஸ்வரன்,
மற்றும்
பெயர் குறிப்பிட விரும்பாத நலன் விரும்பி ஒருவரும்
இணைந்து வழங்கி இருந்தனர்
இதில்
திரு.துரைராசா-லிங்கேஸ்வரன் அவர்கள் இரண்டு ஆண்டுகள் இந் நிகழ்வை நாடாத்த
தனியாகவே நிதியுதவி வழங்கினார் என்பதும் தைப்பூச நிகழ்வோடு முதிர்ந்த உழைப்பாளிகளை கெளரப்படுத்தி சிறப்பளியுங்கள் என்ற ஆலோசனையை முன்வைத்து
அதனை சிறப்புற ஆண்டுதோறும் நடாத்த திடம் தருவதும் குறிப்பிடத்தக்கது…
நிதிக்கொடை
நல்குனர்களுக்கும்,
ஓழுங்கமைத்த
மாங்குளம் உறவுகளுக்கும், பணி நிறைவாக்க உழைத்த
“ஏர் நிலம்”நிர்வாகம், நிகழ்வை பொறுப்பேடுத்து சிறப்பாக நடாத்தி நிறைவாக்கிய செயலாற்றுனர் கவிஞர் லக்சிதரன் மற்றும் மாவட்ட செயலாற்றுனர்களான கவிஞர் மன்னார் பெனில்,படைப்பாளி தே.பிரியன்,சமூகசேவகி
வதனா,சமூகசேவகர் லதன், ஆலோசகர் வினோ ஆசிரியை, நெறிப்படுத்த
உதவிய இணைப்பாளர் தனம்-நித்தி ஆகியோர்கும்
பயனாளிகளான விவசாயிகள்,கைம்பணி உற்பத்தியாளர்கள்,முன்பள்ளிகள், அறநெறி மாணவர்கள்,
பொது
அமைப்புகள்,
கல்வி
நிலையங்கள்,கிராம மட்ட அமைப்பினர், கிராம
மக்கள் யாவருக்கும் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்……
து.திலக்(கிரி),
“ஏர்
நிலம்”
22.02.2023.
Post a Comment