தமிழருக்கு
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக்கூடாது என்பதில் சகல சிங்களக் கட்சிகளும்
ஒத்த கருத்திலுள்ளன. தங்களுக்குள் எவ்வளவு அதிகாரப் போட்டி இருந்தாலும் இந்த விடயத்தில் மட்டும்
தெளிவாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லிவிடுகின்றன.
அதேபோல, புலிகள் சார்பானவர்கள் நாட்கணக்கிலோ, மணித்தியாலக் கணக்கிலோகூட நிர்வாகப் பதவியில் அமரக்கூடாது என்பதில் ஒத்த கருத்துடன் உள்ளன தமிழ் கட்சிகள். ஒவ்வொன்றும் தமது அறிவுகெட்டிய வகையில் சளாப்பல் பதில்களை சொல்லிவிட்டால் போயிற்று என அவை
முடிவெடுத்துள்ளன.
கடந்த யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் மிக மூத்தவர் சொலமன் சூ. சிறில். ஏற்கெனவே 1979ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு இராசா விஸ்வநாதன் தலைமையிலான நிர்வாகத்தில் ஓர் உறுப்பினராக விளங்கியவர் இவர்.
2004 பாராளுமன்றத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்தினர் புலிகள். சில காலம் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கினார். ராஜன்
யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கிய காலத்திலேயே இவரது போராட்டப் பங்களிப்பு ஆரம்பமாகிவிட்டது. யாழ். இடப்பெயர்வைத் தொடர்ந்து பிரபாகரன் தலைமை தாங்கும் பகுதிகளிலேயே தாங்கள் வாழவேண்டும் என முடிவெடுத்த யாழ். மக்களில் சிவநேசனும் இவரும் பின்னாளில் எம். பியாகினர். அரசியல்துறையின் வழிகாட்டலில் பல்வேறு பொறுப்புகளை இவர் வகித்து வந்தார்.
அதில் யாழ்ப்பாண பல நோக்குக் கூட்டுறவு
சங்கத் தலைவர் பதவியும் அடக்கம்.
இன்று யார் யாரோ எல்லாம் தலைவர் குறிப்பிட்ட பணிகளுக்காக அனுப்பி வைத்ததாகப் பலர் கதையளக்கின்றனர். இவர்களுக்கு
சமாதான காலத்தில் யாழ். பல நோக்குக் கூட்டுறவு
சங்கத் தலைமைப் பதவியை முழுமையாக வகிக்க இவரையே புலிகள் தேர்ந்தெடுத்தனர் என்ற வரலாறு தெரியாது.
(இடப்பெயர்வின் பின் ஒரே சங்கத்தின்
பெயரில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வெவ்வேறு நிர்வாகங்கள் இயங்கின.) சமாதான காலத்தில் அறிவிக்கப்பட்ட (உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாநகர சபைக்கென புலிகள் தெரிவு செய்த வேட்பாளர்களில் இவரும் அடக்கம். (மற்றொருவர் சீ. வீ. கே.
சிவஞானம்)
கடந்த
தேர்தலில் இவர் யாழ். மாநகர
சபைக்குப் போட்டியிட்டபோது மூப்பின் அடிப்படையில் இவருக்கே மாநகர முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். புலிகளை என்றுமே சகிக்க மாட்டாதவரான சுமந்திரன் இவருக்கு அப்பதவியை வழங்கக்கூடாது என்பதற்காக? “வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வரும்போது அவர்களுடன் உரையாடி கடமையாற்றக்கூடியவரே முதல்வர்”, என்றார். அவரைப் பொறுத்தவரை மாகாண முதலமைச்சருக்கு எதிரான
நம்பிக்கையில்லாப்
பிரேரணையை நிறைவேற்றப் பாடுபட்ட ஆனல்ட்டுக்கு அப்பதவியை வழங்குவதே நோக்கம். இந்தத் தேர்தலில் அரசியாலை கிழக்கு வட்டாரத்தில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் போட்டியிட்டார். அவரைவிட ஆனல்ட்டுக்கு கூடுதலாக ஆங்கிலம் தெரியும் என எப்படி சுமந்திரன்
முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. தலைவரினதோ, செயலாளரினதோ, கட்சியினதோ முடிவுக்கு மாறாக ஆனால்ட் மேயர் என்று தன்னிச்சையாக அறிவித்தார். ஆளுமையில்லாதவர்களே கட்சியின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அரியாலை கிழக்கு வட்டார மக்கள் ஒரு சதிகாரனுக்கு முன்னால்
தமது அன்புக்குரிய மோகனதாஸ் அவர்கள் ஒரு சாதாரண உறுப்பினராக
நிற்பதை விரும்பவில்லை. அதனை வாக்களிப்பில் வெளிப்படுத்தினர்.
தேர்தலின் பின், ஆனல்ட்டை தவிர வேறு யாரையாவது மேயராக்கினால் ஆதரவு என்றது ஈ. பி. டி. பி. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி ஆனல்ட்டை மேயராக்கியாயிற்று. ஒருநன்னடத்தை காலம்( ஜே.வி.பி
சந்திரிக்காவுக்கு ஆதரவு அளித்த போது நன்னடத்தை அரசாங்கம்
என்றது போல) என்ற மாதிரியான
நிலைப்பாட்டை எடுத்த ஈ. பி. டி.
பி. தொடர்ந்து ஆதரவளிக்க மறுத்தது. இதனால் பதவியிழந்தார் ஆனல்ட். எப்படியோ நேரடியாக மக்களால் தெரிவாகாத ரணில் எம். பியாகி, பிரதமராகி
ஜனாதிபதியானதுபோல மாநகர சபை உறுப்பினரானார் மணிவண்ணன்.
கூட்டமைப்பை பழிவாங்குவதற்காக இவருக்கு ஆதரவளித்து மேயராக்கிய ஈ. பி. டி.
பி. பின்னர் காலை வாரியது. மொத்தத்தில்
நகர அபிவிருத்தியை விட கட்சி நலனே
முதன்மையானதென இதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
மீண்டும் ஆனல்ட்டை மேயராக்க மாவை முடிவெடுத்தார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால் பாதீடு தோற்கவே
வேறு வழியில்லாமல் சொலமன் சூ. சிறிலை மேயர் வேட்பாளராக அறிவித்தார் மாவை.
தற்சமயம்
தனது சுயரூபத்தை வெளிப்படையாகக் காட்டினார் மணிவண்ணன். கடந்த பொதுத் தேர்தல் சமயத்தில் ஒரே இரவில் 2,000 படையினரை
கொன்றோம் என்றார் கருணா. இக்கூற்றுக்காக அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மணிவண்ணன். இவரது கூற்று குறித்து தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவர் கஜேந்திரகுமாரும் மௌனம் சாதித்தார். குறைந்தபட்சம் மணிவண்ணனின் சொந்தக்கருத்து என்றுகூடச் சொல்ல முயலவில்லை.
இன்று மணிவண்ணன் தரப்பு சிறில் முதல்வராகி விடக்கூடாது என்று, அதாவது புலிகள் சார்பானோருக்கு நிர்வாகப் பதவி என்பதை அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டனர். சபைக்கு சென்று எதிராகத்தானும் வாக்களிக்கலாம். கோரமில்லாது செய்ததன் மூலம் புலிகள் சார்பானோர் பற்றி பரிசீலிக்கவும் தயாரில்லை என்று வெளிப்படுத்தினார்.
இந்த
விடயத்தை விடுதலையை நேித்த புலிகள் சார்பானோரும் மாவீரர் குடும்பத்தினரும் முன்னாள் போராளிகளும் கவனத்தில் எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.
புலிகளின்
மூத்த உறுப்பினர் யோகன் பாதருக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது என்பதை
அறிந்ததும் உடனடியாக திருமலைக்குச் சென்ற மாவையும் இன்னொருவரும் புலிகளை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைக்க வேண்டும் என்று சொல்லி தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தினர்.
இறுதி யுத்தம் முடியும்வரை அரச படையினருடன் இணைந்து செயல்பட்ட புளொட்டுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மாவை ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கு வழங்கவில்லை. என்பதிலிருந்தே
இவர்களது நிலைப்பாட்டை உணர முடியும் இன்று
சொலமன் சூ சிறிலின் விவகாரத்தில்
தம்மை ஒரு தேசியவாதிகளாக காட்ட
முனைகிறார் கஜதீபன் என்ற ஒட்டுண்ணி 2004 தேர்தலில் வன்னியில் புளொட்டின் அரசியலை முற்றாகத் துடைத்தளித்தனர் புலிகள் இறுதி
யுத்தம் முடிந்ததும் புலிகள் இல்லைத் தானே என்ற நம்பிக்கையில்
வன்னியில் போட்டியிட்ட புளொட்டினால் ஒரு இடத்தைக் கூட கைப்பெற்ற முடியவில்லை அதன் பின்னர் மாவையிடம் ஒட்டிக் கொண்ட புளொட்டான் இப்போது சிறில் விவகாரத்தில் சவால் விடுகிறது.
ஒட்டுமொத்தமாக
புலிகள் காலைப் பாதுகாக்கும் செருப்பு அவர்கள் வெளியில்தான் நிற்க வேண்டும் என்பது தமிழ் அரசியல்வாதிகளின் தீர்மானம் மணிவண்ணனும் இதற்கு விதி விலக்கல்ல.
Post a Comment