நலவாழ்வு நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவும் நலவாழ்வு சஞ்சிகையின் 25 ஆவது சிறப்பிதழ் வெளியீடும் 25.02.2023 பி. ப 3 மணிக்கு சுவிஸ் தமிழ் மருத்துவத்துறை நிபுணர்களின் ஒழுங்கமைப்பில்
சுவிஸ் யேர்மன் எல்லையில் உள்ள "hotel Löwen
Jestetten" இல் அறிவிப்பாளர் திரு முல்லைமோகன் தலைமை
யில் சிறப்புற நடைபெற்றது. சித்த
- ஆயுள்வேத வைத்தியர் இளங்கோ ஏரம்பமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.
மனநல
வைத்திய நிபுணர் விஜயதீபன் பாலசுப்பிரமணியம் நலவாழ்வு நிறுவம் கடந்து வந்த 15 ஆண்டு காலத்தை தன் உரையில் பதிவு
செய்தார்,
சஞ்சிகை
ஆசிரியை கானவி யினது நூல்
அறிமுகத்தை தொடர்ந்து, வெளியீட்டு உரையினை நலவாழ்வு நிறுவனத்தின் தலைவர் ஜெயக்குமார் துரைராஜா நிகழ்த்தினார் நூல்
அட்டைப்படத்திரைநீக்கத்தை
நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அந்தோணி நிக்கிலாப்பிள்ளை திறந்து வைத்தார்.
சிறப்புரையினை
சுவிஸ் தமிழ்கல்விச்சேவை
ஒருங்கினணப்பாளர் கலாநிதி பார்த்தீபன் கந்தசாமி வழங்கினர்.
கருத்துரையினை தாயகத்தில்
போர்கலாத்தில் மருத்துவசேவையாற்றிய துரை கேதீஸ் மற்றும்
சமூக சேவகைகளை தாயகத்தை நோக்கி வழங்கிக் கொண்டிருக்கும் விக்கி.....,
...... கமல்
அவர்களும் ஆற்றினர்.
குருதி
மற்றும் மருத்துவ வேதியல் நிபுணர் கந்தரூபன் பாலசுப்பிரமணியம், நலவாழ்வு வின் இனையமுகவரி பற்றிய
விளக்கத்தை திரையிட்டு விளக்கினார்
மனநல
வைத்திய நிபுணர் இராஜ்மேனன் இராஜசேகரன், மருத்துவர் காந்தறூபன் மற்றும் மருத்துவர் அருணி அவர்களுடனான கேள்வி
நேரம் நிகழ்ச்சியை அறிவிப்பாளர் சிறப்பாக வழங்கினார்.
மருத்துவ
துறையில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகப் பாராட்டுக்கள் வழங்கப்பட்டன. வாழ்த்துரைகளை
MTV இயக்குநர் சிவநேசன் மற்றும் மனநல வைத்தியர், கேமா
நவரஞ்சனும் வழங்கினர், நன்றியுரையினை நிறுவனத்தின் உபதலைவி அருணி வேலழகன் வழங்கினார்,
நலவாழ்வின்
25ஆவது இதழானது
நோயும் நோய்கான தீர்வும் மட்டுமின்றி எமது
நல்வாழ்விற்கு தேவையான பல கட்டுரைகளை தாங்கி
வெளிவந்திருக்கின்றது,
தாயகம், தமிழ்நாடு,, புலம்பெயர்தேசங்களிலுள்ள வைத்திய துறைசார்ந்த வர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்தவர்களின் கட்டுரைகளும் பொதுவாக எமது வாழ்வியலுக்கு நாளாந்தம் பயன் அளிக்கும் கருத்துகளே நூல் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ளடதுடன். இனிவரும் நாட்களில் உலகத்தமிழர் பயன் பெறும் வகையில் இணைய சஞ்சிகையாகவும் வெளிவர இருக்கின்றது என்ற புதிய செய்தியையும் நலவாழ்வு நிறுவனம் பகிர்ந்து கொள்கின்றது
Post a Comment