விடுதலை படம் எப்படி உருவானது !

நிச்சயமாக உங்களுக்கு படிக்க நேரம் இருக்கிறதா? என்று எனக்கு 'தெரியவில்லை இருப்பினும் எமது கருத்தை தெளிவாக பதிவிடுகிறேன்.

தமிழர் கட்சி தமிழ்த் தேசியத் தலைவன் தமிழரசன் அரசியலை மையமாக வைத்து அரசியல் முன்னெடுப்புகளை தமிழ்நாட்டில் நகர்த்தி வருகிறது.

அந்த வகையில்,

ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தமிழ் தேசியர்களும் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் பிரச்சினையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த திரை காவியத்தை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

விடுதலை,திரை காவியம்  தேசிய இன விடுதலை பற்றியும், வர்க்க முரண்பாடுகளை பற்றியும்,இந்திய ஏகாதிபத்தியத்தை பற்றியும், திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சியை பற்றியும், மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது,

அரசியல் பார்வையோடு இத்திரைப்படத்தை பார்த்தால் மிகத் துல்லியமாக ஒவ்வொரு வசனமும் தெறிக்க விட்டிருக்கிறார். அதனால் தமிழர் கட்சி சார்பில்

மிகப்பெரிய வாழ்த்துக்களுடன் வெற்றிமாறனுக்கு!

திரைப்படம் பார்ப்பதற்கு முன்,

சிறு குறிப்பு,

விடுதலை படம் எப்படி உருவானது வெற்றிமாறனுக்கு.

வெற்றிமாறன் அவர்கள் வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இருக்கும் பொழுது, ஒரு உதவி இயக்குனர்  சங்கத் தலைவன் என ஒரு படம் எடுக்கிறார் அதில் புலவர் கலிய பெருமாள் பற்றி விடயங்களை தெரிவிக்கிறார் வெற்றிமாறன் அவர்களிடம்,

வெற்றிமாறன் அவர்கள் இது சம்பந்தமான தரவுகளை திரட்டுகிறார், அப்படி தமிழ்நாடு விடுதலைப் படை பற்றி வந்த நூல்கள் மிக மிக குறைவு,

அதில் வலதுசாரி சிந்தனையாக இருக்கக்கூடிய ஜெயமோகன் எழுதிய நாவல்,பின்னர் மக்கள் வழியில் மரணத்தை வென்றான்  புலவர் கலியபெருமாளின்  வரலாறு,

தோழர் செந்தமிழ் குமரன் எழுதிய லெனினும் தமிழ்நாடு விடுதலை படை புத்தகமும், மீன்சுருட்டி அறிக்கை/ பெண்ணாடம் மாநாடு அறிக்கை, தமிழ் பேச விடுதலையும் தமிழரசனும் என்ற புத்தகமும்,இப்படி பல புத்தகங்களை வாங்கி பல்வேறு கோணத்தில் படிக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள்,அவருடைய எண்ண ஓட்டங்கள் மிகப்பெரிய அளவுக்கு விரிவடைகிறது அதனால் தான் விடுதலை என்கிற படத்தை பாகம் 1 பாகம் இரண்டு என எடுக்கும் நோக்கத்தில் நகர்கிறார்,

திரைப்படத்திற்கு வருவோம்,

படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே வெற்றிமாறன் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்,திரைப்படத்தில் வரக்கூடிய காட்சிகளும் சம்பவங்களும் அனைத்தும் கற்பனையை கற்பனையே என்று அது அழகாக அவர் மொழியில் கூறி நம்மை போன்ற நபர்களுக்கு அழகாக கடத்தி உண்மை என கூறியிருப்பார்,

விடுதலை திரைப்படம் எடுத்த உடனே ரயில் குண்டு வெடிப்பு மூலம் நகர்கிறது,

ரயில் குண்டுவெடிப்பு  யாரால் நகர்த்தப்பட்டது,என்ன காரணத்திற்காக ரயில் தண்டவாளத்தில் குண்டு வைக்க திட்டம் தீட்டினார்கள் அதன் நோக்கம் என்ன ?

அதில் ஏன் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அடுக்கடுக்கான காரணங்களை இரண்டாம் பாகத்தில் தெரிவிப்பார் போலும்,

ரயில் குண்டுவெடிப்பு மூலம் ஆரம்பிக்கிற திரைப்படம்,

தமிழக மக்கள் விடுதலைப் படை என படத்தில் கூறியிருக்கிறார், அது தமிழ்நாடு விடுதலைப் படை பற்றியே படம் நகர்கிறது,

புலவர் கலியபெருமாள் கதாபாத்திரத்துக்கு பெருமாள் (வாத்தியார்) என பட்டம் சூட்டு இருக்கிறார்,

இங்கே பெருமாள் கதாபாத்திரம் என்பது திரைப்படத்தில் தமிழரசன் உடைய கதாபாத்திரமாக உள்ளது, இடையில் இன்ஜினியர் (T

.A) அதாவது இரண்டாம் கட்ட தலைவர் ரமேஷ் எனவும் அப்ப, அப்ப கூறி இருக்கிறார்கள், நிஜ வாழ்வில் அரசியல் முன்னெடுப்புகளும் தமிழரசனுடைய மூலையும்மாக விளங்கியவர் புலவர் கலியபெருமாள் அவர்கள்,

ரயில் குண்டுவெடிப்பாக இருக்கட்டும் புத்தூர் காவல் நிலைய தாக்குதலாக இருக்கட்டும் களத்தில் இறங்கி செய்தவர்கள்,தமிழ்நாடு விடுதலை படை தளபதிகளும் தலைவர்களும் மட்டுமே,

அன்னக்கிளி அன்னக்கிளி கணவரை விசாரணைக்கு என அழைத்து அன்னக்கிளிய சுமார் 6-க்கும் மேற்பட்ட காவலர்கள் புத்தூர் காவல் நிலையத்தில் கொடூரமாக கற்பழித்தார்கள், அன்றைக்கு எதிர்வினை ஆற்றியவர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை தளபதிகள்,

அந்த சீன் இந்த திரைப்படத்தில் துல்லியமாக நடந்ததை எந்த ஒரு இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தத்துவமாக வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார்,

இந்த படத்தில் வரும் கதாநாயகி எங்க அப்பாவும் எங்க அம்மாவும் காவல் நிலையத்திற்கு சென்றார்கள்,பின்னர் எங்க அம்மா நிர்வாணமாக தான் வந்தார்கள் அப்பொழுது நான் கை குழந்தை  என எடுத்து சொல்லும் விதம்மிகவும் ஆழமாகவும் மக்கள் மத்தியில் போய் சேரும் விதமாகவும் பதிந்து வைத்திருக்கிறார் வெற்றிமாறன் அவர்கள்.

அந்த காலகட்டத்தில் காவல் நிலையத்தில் பெண்கள் விசாரணைக்கு சென்றார்கள் என்றால் தொடர்ச்சியாக கற்பழிப்பு நடந்துள்ள காலகட்டம்,முத்தாண்டி குப்பம் காவல் நிலையம் சிதம்பரம் காவல் நிலையம் புத்தூர் காவல் நிலையம் என அடுக்கிக் கொண்டே போகலாம்,இதற்கு பதிலடி கொடுத்தவர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர்களும் தளபதிகளும்,அதற்குப் பின்னர் எந்த காவல் நிலையத்திலும் கற்பழிப்புகள் நடைபெறவில்லை ஏனென்று சொன்னால் பெரியவர் இருக்கிறார் தோழர் தமிழரசன் இருக்கிறார் அவருடைய தமிழ்நாடு விடுதலைப் படை உள்ளது தமிழக மக்களை பாதுகாக்க அரணாகவும் விளங்கினார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழரசன் தலைவனாக விளங்கினார்,

திரைப்படத்தில் மிகப்பெரிய கனிமவள சுரண்டல்களை ஏற்படுத்த இந்திய ஏகாதிபத்திய துணையோடு ஒரு கார்ப்பரேட் கம்பெனி உள்ளே நகருகிறது,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அடர்ந்த பாக்சைட் நிறைந்த ஒரு மலைப் பகுதியை குறி வைக்கிறார்கள் அதனை தடுத்து நிறுத்தியவர்  தமிழரசனும்  மற்றும் அவரது தோழர்களும்,, இதனை மையமாக வைத்து மக்களோடு மக்களாக கலந்து நிற்கிறார்,காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை,

இவ்விடத்தில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்,படம் முழுக்க புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழ் தேசியத் தலைவன் தமிழரசன் பற்றியே படம் நகர்கிறது, ஆனால் பெருமாள் என்கிற பெயரில் செயல்பாடு தளத்தில்  படத்தில் தமிழரசனை மட்டுமே அவருடைய சினிமா துறை சார்ந்து கூறியிருக்கிறார் வெற்றிமாறன் அவர்கள், காவல்துறையில் தமிழரசன் உடைய புகைப்படம் மட்டும் சுமார் 30 ஆண்டுகளாக கிடைக்கவில்லை அவர் எங்கு இருக்கிறார் எங்கு நகர்கிறார் எங்கே செல்கிறார் என்ற விடயம் தமிழரசனுக்கு மட்டுமே உரித்தாக இருந்தது, தற்போது கூட ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் தமிழரசனுடைய புகைப்படம் உளவிக்கொண்டிருக்கிறது மற்ற புகைப்படங்கள் அனைத்தும் வரையப்பட்டவை, அதனை இந்த படத்தில் தெள்ளத் தெளிவாக இயக்குனர் வெற்றிமாறன் கையாண்டு இருக்கிறார்,

உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கக்கூடிய நபர்கள் எப்படி தமிழ்நாடு விடுதலைப் படையை ஒடுக்க திட்டம் தீட்டுகிறார்கள் அதற்கு திராவிட ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஒத்துப் போகிறார்கள் என இந்த படத்தில் ரொம்ப ஆழமாக சிந்திக்க வைக்கிறார்கள்,

எம்ஜிஆர் காலகட்டம் அப்பொழுது உள்ள எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் எந்த அளவுக்கு ஒத்து போய் இருக்கிறார்கள் என்பதை அப்போ கோடிட்டு காட்டி இருக்கிறார் வெற்றிமாறன் அவர்கள்,

மலைகளில் சாலை போடும்பொழுது தமிழ்நாடு விடுதலைப் படையின் அரசியல் வசனங்கள் தெறிக்க விடுகிறார்கள்,

புலவர் கலியபெருமாள் கெட்டப்பில் விஜய்சேதுபதியை வெற்றிமாறன் அவர்கள் காட்டிருந்தாலும் புலவர் கலியபெருமாளாக திரைப்படத்தில்அவரைபார்க்க இயலாது அது தமிழரசனாகத்தான் பார்க்க முடிகிறது தோன்றுகிறது,புலவர் பெயரில் தமிழரசனை ஆழமாக திரை காவியத்தில் நிறுத்தி இருக்கிறார் வெற்றிமாறன் அவர்கள்.இங்கே தான் வெற்றிமாறன் உடைய சாதூர்யமான அரசியல் கணக்கு உள்ளது, இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கும் திராவிட ஆட்சியாளர்களுக்கு நடுவில் நாம் அரசியலை எப்படி கொண்டு போவது என்பதை தெளிவாக நகர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்,

ஐயா,புலவர் கலியபெருமாளை பேசலாம்,

ஆனால் தமிழ் தேசியத் தலைவன் தமிழரசன் அரசியலை பேச முடியாது,

அவர் வழியில் அவன் அரசியல் பாதையில் நாம் செல்ல முடியாத சூழலை தான் இந்திய ஏகாதிபத்தியம் நம்மை வைத்திருக்கிறது, வெகுமக்கள் திரள் போராட்டத்தை எடுக்க கூடிய அதுவும் பேனா வழியில் போராடி வரும் எங்களை ஒரு எள்ளளவு கூட நகர விடாமல் இந்திய உளவு நிறுவனங்களும், தமிழ்நாடு திராவிட உளவு நிறுவனங்களும், நம்மை வைத்திருக்கிறது,இந்த நேரத்தில் விடுதலை திரை காவியத்தை அதுவும் தமிழ் தேசியத் தலைவன் தமிழரசன் உடைய அரசியல் வரலாற்றை உலகளவில்  சென்றடைய வேண்டும்  சில விடயங்களை பட்டி டிங்கரிங் செய்து தான் ஆக வேண்டும் அதை அழகாக வெற்றி மாறன் அவர்கள் செய்திருக்கிறார். புலவர் கலியபெருமாள் முதுகில் தமிழரசனை சவாரி செய்ய விட்டிருக்கிறார்,

படத்தில் வரும் அரசியல் வசனங்கள், நாங்கள் நித்தம் நித்தம் பல ஆண்டுகளாக பேசி வரும் வசனங்கள் எங்கள் கண்முன்னே வந்து போகிறது,

ஒரு வாரத்தில் முன்னரே கூட நாங்கள் குடியரசில் பற்றி பேசும்பொழுது,

சாதி மதம் தோன்றுவதற்கு முன்னாடி மொழி அதனுடைய மரபு தோன்றி விட்டது மொழி அடிப்படையிலும்  அதன் மரபுகள் அடிப்படையிலும் தான் ஒரு தேசிய இனம் வரையறுக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்தோம்,அத அப்படியே இந்த படத்தில் வசனங்களாக எடுத்துரைத்திருக்கிறார் வெற்றிமாறன் அவர்கள்.

இங்கே கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் என்பது மக்களை காக்கும் காவல்துறை, ராணுவத்துறை, மக்களை எந்த அளவுக்கு அதிகாரத் திமிரில் மக்களை கையாளும் என்பதற்கு உண்மையை உண்மையாக எடுத்துரைத்துள்ள வெற்றிமாறன் அவர்கள் நாம் போற்றி புகழ வேண்டிய பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்.

அடுத்து காவல்துறையாலும், ராணுவத் துறையாலும் பெண்கள் எந்த அளவுக்கு உள்நாட்டிலேயே கொடூரமாக கற்பழிக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டு பாலியல் சீண்டலுக்கு உள்ளாகப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு காணப்படாமல் ஆகிற விடயங்களை தெளிவாக கூறியிருக்கிறார்,

ஆனால் அரசாங்கம் கூறுகிற எந்த ஒரு தீவிரவாத குழுக்களும் பெண்களையோ குழந்தைகளையோ வயதான முதியவர்களையோ இதுபோல சித்திரவதையும் கற்பழிப்புகளும் நடந்ததாக உலக வரலாற்றில் கிடையவே கிடையாது,

அது சேகுவாரா ஃபிடல் தோற்றுவித்த இயக்கமாககட்டும், அது பாலைவனச் சிங்கம் உமர் முக்தார் தோற்றுவித்த தேசிய விடுதலை போராட்டமாக இருக்கட்டும்,சுபாஷ் சந்திரபோஸ் கட்டி எழுப்பிய விடுதலை போராட்டமாக இருக்கட்டும்,வெனிசுலாதிபர் உருவாக்கிய தேசிய விடுதலைப் போராட்டமாக இருக்கட்டும்,தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய வெகு மக்கள் படை ராணுவமாக இருக்கட்டும்,தமிழ்நாடு விடுதலைப் படை உருவாக்கிய படையாக இருக்கட்டும்,இது போன்ற அரக்கத்தனமான செயல்பாடுகளை ஒருபோதும் மக்களுக்காக போராடுகிற நபர்கள் செய்ததில்லை செய்ததாக அரசாங்கமும் தெரிவித்ததும் இல்லை, ஆனால்  அரசாங்கம் அரசாங்கத்தில் பயணம் செய்யக்கூடிய ராணுவம் காவல்துறைகள் பொதுமக்களையும் குழந்தைகளையும் பெண்களையும் அதிகாரத் திமிரில் சீண்டும் சித்திரவதை செய்யும் செயல்பாடுகள் உலக அளவில் நடந்தேறி வருகிறது இதுதான் வரலாற்று உண்மை.

அதனையும் வெற்றிமாறன் அவர்கள் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்,

இங்கே சூரி கதாபாத்திரம் பற்றி யாரும் புத்தகத்தில் கூறியிருக்க வாய்ப்பில்லை,அழகாக இந்த படம் பார்க்கும் பொழுது அப்படி ஒருவர் அல்லது பத்துக்கு மேற்பட்ட நபர்கள் நிச்சயமாக அந்த போலீஸ் கேம்ப்ல இருந்திருப்பாங்க உருவாகி இருப்பாங்க/ ஏனென்று சொன்னால் அவர்கள் சாதாரண குடும்ப வறுமைக்காக காவலர் பணிக்கு வரக்கூடிய அறம் சார்ந்த தமிழர்கள்,

இங்கேதான் வெற்றிமாறன் தன்னை சூரி கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த திரைக்காவியத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். குறிப்பு ,படத்தில் ஒரு வசனம் வருகிறது தமிழ்நாடு விடுதலைப் படை தலைவனை பிடித்தாச்சு,இவனை சிறையில் வைத்தோம் என்றால் பக்கம் பக்கமாக உட்கார்ந்து புத்தகம் எழுதுவான் அந்த புத்தகம் 10 தலைமுறைக்கு அடுத்த கட்ட போராட்டத்தின் நடத்தும், அதனால் இந்த ஐடியாலஜி பத்தி இன்னும் பத்து தலைமுறைக்கு தமிழ்நாட்டு மக்கள் பேசவே கூடாது என அதிகாரவர்க்கும் பேசி முடிவெடுக்கும்.

பத்திரிகையாளர்களை எப்படி அரசு தன் கட்டுப்பாடில் வைத்துள்ளது.

சுதந்திரமான பத்திரிகையாளர்கள் உள்ளதை உள்ளபடி எழுதினால் அரசு அவர்கள் மீது என்ன மாதிரியான கட்டமைப்பை கட்டி அவர்கள் மீது எப்படி எல்லாம் வழக்கு தொடுக்கலாம் என சிந்திக்கிறது.

மொத்தத்தில் வருகிற செய்திகள் அனைத்தும் அரசாங்கத்துக்கு ஆதரவாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளத அதில் அப்பப்போ சூரி கதாபாத்திரம் இந்த பத்திரிகை செய்தியை பற்றி நானும் நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் உண்மை என்பது வேறு மாதிரி உள்ளது என சூரி கதாபாத்திரம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கும்,படம் சென்று போய் பாருங்கள் தமிழ் தேசிய உறவுகளே, மேதகு பிரபாகரனை பற்றி தெரிந்த நமக்கு தமிழரசனை பற்றி தெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது இந்த படம் மூலம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்|

இருட்டடிப்பு ஏன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த இருட்டடிப்புக்கு பின்னர் இந்திய உளவு நிறுவனங்களும் இந்திய ஏகாதிபத்தியமும் தமிழ்நாடு உளவு நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன,

அது பற்றிய சிறிய பார்வை,

தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை தமிழரசனை தவிர்த்து விட்டு எவர்கள் இங்கே தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார்களோ? அவர்கள் நிச்சயமாக போலி தமிழ் தேசியவாதிகள் என முகத்திரை கிழிக்க வேண்டிய அரசியல் வெகு காலத்தில் இல்லை,

எப்படி.! ஈழத்தில் யாராவது ஒரு நபர் அல்லது ஒரு தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை தவிர்த்துவிட்டு ஈழத்தில் தமிழ் தேசிய அரசியல் பேசினால்  மனசாட்சி தொட்டு பேசுங்கள் நாம் ஏற்போமா?

ஆனால், இங்கு என்ன நடக்கிறது தமிழ் தேசியத் தலைவன்  தமிழ்நாடு விடுதலைப் படை கண்ட தோழர் தமிழரசன் அரசியலை எவரும் தமிழ் தேசிய அரசியலாக பெரும் கருத்தியல் புயலாக முன்னெடுப்பதில்லை,அவருக்கு போற போக்குல தமிழ் தேசிய போராளி பொன் பரப்பி தமிழரசன் இப்படி தான் கூறுகிறார்கள்,

நான் திராவிட தலித்திய அரசியல் பேசக்கூடிய நபர்களை நான் ஒருபோதும் கூற மாட்டேன்,

அரசியல் ரீதியான விமர்சனம் தான் நான் வைக்கிறேன் தவிர தனிநபர் விமர்சனம் அல்ல,

ஐயா பழ நெடுமாறன் அவர்கள் மிக மோசமாக தமிழ் தேசியத் தலைவன் தமிழரசனை இருட்டடிப்பு செய்தார்,இவ்வளவுக்கும் புலவர் கலியபெருமாளோடு பயணம் செய்தவர் ஐயா பழ நெடுமாறன் அவர்கள்,

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு செல்லுங்கள் அங்கு தமிழுக்கு வழி சேர்த்த ஆங்கிலேயர்கள் இன்னும் பிற மொழியாளர்கள் எல்லாம் புகைப்படமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார்கள்,தமிழ்நாடு விடுதலைப் படை தலைவன் தமிழரசன் ,மாறன், லெனின்,மற்றும் ஜெகநாதன், தென் தமிழன், பழனிவேல் ,நாகராஜன்,ராஜாராம்,

புதுக்கோட்டை சரவணன், சுப முத்துக்குமார்,இன்னும் எண்ணற்ற தலைவர்கள்,போராளிகள் புகைப்படங்கள் கிடையாது,

அடுத்து ஐயா பெ மணியரசன் அவர்கள் இதனைப் பற்றி தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பாக அவர் பேசியதும் கிடையாது,ஆனால் நம் அரசியல் மேடைகளில் வந்து பேசுவார் கலந்து கொள்வார் அந்த வகையில் அவரை பாராட்டலாம், செந்தமிழன் சீமான் அவர்கள் கடமைக்கு தற்பொழுது அதாவது ஒரு மூணு நாலு ஆண்டுகளுக்கு பேசி வருகிறார்/அதுவும் பொன் பரப்பி தமிழரசன் தமிழ் தேசிய போராளி தமிழரசன் என்று பேசி வருகிறார்,

தற்போது கூட இத்திரைப்படத்தை பார்த்து வெளியில் வந்து பேட்டி கொடுத்தவர்,உன்னிப்பாக கவனிங்கள் எந்த இடத்திலும் தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் தமிழரசன் புலவர் கலியபெருமாள் அரசியல் பற்றியும் பேசாமல் பொத்தாம் பொதுவாக விடுதலை என்ற திரைப்படம்  விடுதலையை குறிக்கிறது என்று கடந்து சென்றிருக்கிறார்,

நிற்க ஒருவேளை வெற்றிமாறன் அவர்கள் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை பற்றி படம் எடுத்திருந்தால், அண்ணன் சீமான் தமிழ்நாட்டில் என்ன பேசி இருப்பார் என சிந்தித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் யாரை விதைத்து அரசியல் செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு நாம் யாருக்கு ஆதரவாகும் உறுதுணையாகும் இருக்கிறோமோ அவர்களை இங்கே நிலை நிறுத்துவது என்பது தமிழ் தேசிய அரசியலுக்கு பின்னடைவாக செல்லும்,

ஈழத் தமிழர்களுக்காக ஈழத் தமிழருடைய உரிமைக்காக சிங்கள பேரினவாத அரசை எதிர்த்து படை கட்டியவர் தமிழீழ தேசியத் தலைவன் பிரபாகரன்.இன்று அவரை உலக தமிழ் மக்களுக்கான தலைவராகவும் உலக தமிழ் தேசிய தலைவராகவும் அவரை நாங்கள் ஏற்கிறோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,

ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக தமிழ்நாடு விடுதலைப்படை கண்ட தலைவராக இருபது ஆண்டுகளாக களம் கண்டு போன தமிழரசனை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்,

தமிழ்நாடு விடுதலைப் படை கொள்கையில் இரண்டாவது கொள்கை தமிழ்நாடு, ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஈழநாடு வாங்கி கொடுப்பதற்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது,

ஈழ விடுதலை இயக்கங்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் இருந்தன அவர்கள் கொள்கையில் தமிழ்நாடு விடுதலைக்கு ஈழ விடுதலை இயக்கங்கள் உறுதுணையாக இருக்கும் என எங்கேயாவது ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளனர் என்ற விடயங்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

உலக வரலாற்றில் தமிழ்நாடு மீண்டெழுந்தால் மட்டுமே மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தலை தாங்கி நிற்பார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை,

அடுத்து ஒப்புக்கு அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் பேசுவார், எங்கேயாவது தேவைப்படும் பொழுது அப்ப, அப்ப அண்ணன் வேல்முருகன் அவர்கள் தோழர் தமிழரசன் பெயரை பயன்படுத்துவார்கள், மேதகு பிரபாகரனை பயன்படுத்துவதை கூட தமிழரசன் புகைப்படத்தை பயன்படுத்த மாட்டார்கள்.  

இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மாபெரும் நெருப்பு,அந்த அரசியல் தற்பொழுது திரை காவியம் மூலமாகவும் சின்ன சின்ன இயக்கங்கள் மூலமாகவும் தற்பொழுது எடுக்கத் தொடங்கி விட்டார்கள் இளைஞர்கள்,இதில் இந்திய அரசால் உருவாக்கப்படுகிற இயக்கங்கள் எத்தனை?திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் எத்தனை? தன்னெழுச்சியாக மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்கள் எத்தனை? என காலம் தான் முடிவு செய்யும் |

இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வருகிறார் அவர் ஒரு காவல்துறை டிஎஸ்பி மேனனாகவே காட்டுகிறார்கள்,

தமிழ்நாடு விடுதலைப்படை தலைவர் தமிழரசனை அடக்குவதற்கும், நடமாட்டத்தை சிதைப்பதற்கும் தமிழ்நாடு விடுதலைப் படை தோழர்களை சுட்டுக் கொள்வதற்கும் அன்றைக்கு மலையாளியாக இருந்த மேனன் ஒருவனே காரணம்,அவனுக்கு திராவிட ஆட்சியாளர்கள் அனைத்து அதிகாரத்தையும் கொடுத்து வைத்திருந்தார்கள்,குறிப்பு எம்ஜிஆர் அன்றைய காலத்தில் கதாநாயகன் (மலையாளி) அவர் காலகட்டத்தில் தான் தமிழ்நாடு விடுதலைப் படை கடுமையாக நசுக்கப்படுகிறது ஒடுக்கப்படுகிறது,

ஒரு பக்கம் எம்ஜிஆர் ஈழத் தமிழர்களுக்கு ஈழத்தமிழர் படையை உருவாக்குவதற்கு காசு பணம் கொடுப்பதாக தமிழ்நாட்டு மக்களிடத்தில் பேசப்படுகிறார்,கொடுக்கவும் செய்தார் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,

அதே காலகட்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படையை படு தீவிரமாக ஒடுக்கவும் செய்தார் கண்காணிக்கவும் செய்தார்,

இங்கே ஒன்றை கவனிக்க ஈழத் தமிழர்களால்  தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டில் தலைமைக்கும் எந்த  பிரச்சனை இல்லை,தமிழ்நாட்டில் வளரக்கூடிய தமிழ் தேசியத் தலைவர்களால் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இருப்பிடம் கேள்விக்குறியானது, ஏன் என்று சொன்னால் இவர்கள் திராவிட வடுக கூட்டத்தின் வழிவந்தவர்கள். அதனால் ஒரு பக்கம் இந்திய பிராமண ஏகாதிபத்தியம் இன்னொரு பக்கம் திருட்டு படுக கூட்டம் இன்னொரு பக்கம் சிங்கள கூட்டம்,இதற்கு நடுவில் தான் தமிழ்நாடு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது,

தமிழ்நாடு தலைநிமிர்ந்தால் மேலே குறிப்பிட்ட நபர்கள் தமிழ்நாட்டை வைத்து சுரண்ட முடியாது தமிழ்நாடு  மற்ற நாடுகளை விட சிறப்பான நாடாக அமையும் வளரும்,இதுதான் வரலாறு,

இதுபோல வெற்றிமாறன் அவர்கள் எவரும் பேச முடியாத பயந்த குழி தோண்டி புதைத்த அரசியலை திரை காவியமாக மக்கள் முன் நிறுத்தி பேச வைத்தது என்பது அவன் தமிழ்நாட்டின் தமிழர்  மரபில் வந்தவன் என  காட்டுகிறது,

சகோ,வெற்றிமாறா இயற்கை உன்னை எதர்க்க படைத்ததோ அந்த வேலையை தாங்கள் தெளிவாக செய்கீறீர்கள் இயற்கையும் தமிழும் இருக்கும் வரை வரலாறு உன்னை பதிவு செய்து கொண்டே இருக்கும்,

கோடிக்கணக்கான தமிழர்களிடத்தில் தமிழ்நாடுவிடுதலைப் படை தலைவனையும் புலவர் கலியபெருமாளையும் அவர்கள் மக்களுக்காக செய்த தியாகத்தையும் வரலாறு தெரியாத மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததற்கு உமக்கு கோடான கோடி நன்றிகள்,தமிழரசா,உன் அரசியல் நெறுப்பை நான் தொட்டேன்  மக்களிடத்தில் அரசு அதிகார பீடத்தில்,  காவல்துறை இடத்தில் பயங்கரவாதியாக உள்ள நபர்கள் என்னை  தீவிரவாதியென்று கூறுகிறார்கள் |   சிரிப்புடன் கடந்து செல்வேன்,

எம் அரசியலே பேனா தான்,

எனக்குஆயுதமே பேனா தான் பேனா அரசியலையே இந்திய ஏகாதிபத்தியம் திராவிட ஏகாதிபத்தியமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை,

ஒன்று கூறுகிறேன் பேசினவன் எல்லாம் தலைவனாகிற முடியாது எவன் தமிழ் இனத்திற்காக தலையைக் கொடுக்கிறானோ அவனே தலைவன் காலம் பதில் சொல்லும், இங்கே சிலுவண்டுகள் பூச்சாண்டிகள் உதிரிகள் நிறைய உருவாகிக் கொண்டு வருகிறது,

தலைமையே இல்லாம யார் தலைவர் என்று தெரிவிக்காமலும்,அமைப்பியல் முறை இல்லாமலும்,அப்படியே அமைப்பாக இருந்தால் அந்த அமைப்புக்கு தலைவராக ஒருவர் அல்லது அதிகபட்சம் ஐந்து நபர்கள்  மட்டுமே இருந்து கொண்டு  தமிழ் தேசியம் பலபேர் பேசிக்கொண்டு வருகிறான்.அதுவும் தமிழ்நாட்டு தலைவனாக, இதைத்தானடா கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள் செய்தது, 30 இயக்கம் 30 தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்,

அதேபோலத்தான் இப்பொழுதும் தமிழ் தேசிய இயக்கங்கள் உருவாகி வருகிறது இவர்களை எல்லாம் உருவாக்குபவர்கள் யார்

அன்புடன்  மக்கள் வழக்கறிஞர்

 தீரன் திருமுருகன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post