-பாரி
சனி
மாற்றம் கஜேந்திரகுமார் தலைமையிலான 'அகில இலங்கை` தமிழ்க்காங்கிரஸ்
கட்சியினருக்கு பாதகமாகத் தான் இருக்கிறது. லண்டனிலும் சரி மட்டக்களப்பிலும் சரி இவர்களின் பருப்பு வேகவில்லை. இவர்களது வண்டவாளத்தைத் தெரிந்தவர்கள் இவர்களது கொந்தளிப்பு எதையும் பொருட்படுத்தாமல் இது தான் நடைமுறை
என்று புரிய வைத்தார்கள். "ஒரு ஓழுக்கமுள்ள சிப்பாயால் தான் ஆளுமையுள்ள தளபதியாக உருவாக முடியும்"
- இது தேசிய தலைவர் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்ற விடயம். இவர்களோ
ஒருவரைக் கொண்டு வந்து இவர் தான் கட்டளைத்தளபதி
என்று திணித்தால் தாங்கள் நினைத்தது
நடந்து விடும் என்று நினைக்கிறார்கள்.
அன்னை
பூபதி நினைவுநாள் கடந்த புதன்கிழமை (19.04.2023) உணர்பூர்வமாக நடைபெறுவதற்கு
ஏற்ற வகையில் ஒரு ஏற்பாட்டுக் குழுவினை
அமைத்திருந்தார்கள். இதில் அன்னையின் குடும்ப உறுப்பினர்களும், மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் முதலானோரும் அங்கம் வகித்திருந்தனர. இவர்களது
நிகழ்ச்சி நிரலின் படி அன்னை உண்ணாவிரதம்
இருந்த அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார்
ஆலயத்தில் வழிபாடுகளை முடித்து கல்லடியில் உள்ள நினைவிடத்தில் நிகழ்ச்சிகளை
நடத்துவதெனத் தீர்மானித்திருந்தனர். மற்றவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி தாங்கள் நடப்பதா எனக் கொந்தளித்தனர்
காங்கிரஸ் கட்சியினர். ஊர்வலமாக வருபவர்கள் வருகிற நேரம் வரட்டும்; நாங்கள் எமது நிகழ்ச்சி நிரலின்
படி செயற்படுவோம் முந்திரிக்கொட்டைத்தனமாக முடிவெடுத்தனர். ஊர்வலமாக வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயற்பட்டமை கடந்தகாலத்தில் உயிர் நீத்தோரின் கௌரவம் கருதி முன்னாள் போராளிகள் செய்த விட்டுக்கொடுப்புகளை தமது ராஜதந்திரம் என தப்புக்கணக்கு போட்டதன் விளைவே. .அடாவடியைத்
தொடங்கினால் அடங்கிப் போய் விடுவர் மட்டக்களப்பு
மக்கள் என்று எதிர்பார்த்தது சரி வரவில்லை.
இந்தச் சம்பவங்களைப் புரிவதற்குத் திலீபனின் நினைவு நாட்களே மீள நினைத்துப் பார்ப்பது
நல்லது. இறுதி யுத்தம் முடிந்து புனர்வாழ்வுக் காலத்தைக் கழித்த பின் முன்னாள்ப் போராளிகள் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்கத் தீர்மானித்தனர்.2016 ஆம் ஆண்டு நினைவிடத்தை துப்பரவு செய்து திலீபனின் படத்தை வைத்து வணக்கம் செலுத்தும் வரையில் காங்கிரஸ்காரர்கள் தலைகாட்டவில்லை. முன்னாள்
போராளிகளின் முயற்சிகளுக்கு அந்த இடத்தில் தூபியை
முதன் முதலில் அமைத்தவரான சி.வி.கே
சிவஞானம் கைகொடுத்திருந்தார். இந்திய இராணுவ காலத்தில் இவ்வாறான செயற்பாட்டைச் செய்வதற்கு துணிச்சலும் சாதுரியமும் வேண்டும். அடுத்தடுத்த வருடங்களில் நாங்களும் உங்களுடன் இணைந்து இதைச் செய்யப் விரும்புகிறோம்; எதாவது பணியை எம்மிடம் தாருங்கள் என்று கூடாரத்தினுள் தலையை நீட்டின இந்த ஓட்டகங்கள். அடுத்த அடுத்த வருடங்களில் தலையிலிருந்து கழுத்து, கால் என ஓவ்வொன்றாக நுழைத்தன.
காலை
9.58 மணிக்கு திலீபனின் மூச்சடங்கிய நேரத்தில் அந்த இடத்தில் தீபம்
ஏற்றிய பின் தூபி அமைந்த
இடத்தில் நிகழ்வுகள் ஆரம்பிப்பதை ஜனநாயகப் போராளிகள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
தாமே இதனை முழுவதுமாக கையகப்படுத்த வேண்டுமென ஜீ.ஜீ பேரன் தீர்மானித்தார். திலீபன்
உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்து ஜனநாயகப் போராளிகள் வருவதற்கிடையில் ஆரம்ப நிகழ்வைத் தூபியடியில் செய்தனர். தொடர்ந்து சி.வி.கே.
சிவஞானம் அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு வருகையில் ஊடகவியலாளர்கள் அவரிடம் ஏதோ கேட்க முனைந்தனர்.
உடனே இங்கே
எதுவும் பேச முடியாது என
உத்தரவு போட்டார் பொன். மாஸ்டர். தொடந்து சர்ச்சை எழுந்த போதே "இந்த இடத்தில் முதலில்
தூபியை அமைத்ததே நான் தான்" என்று
சொன்னார் சி. வி.கே.
வரலாறு தெரியாத காங்கிரஸார் எதையும் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அப்போது எட்ட நின்ற கஜேந்திரகுமார் ஜனநாயகப் போராளிகளைப் பார்த்து "இவர்கள் விபச்சார அரசியல் செய்கிறார்கள்" என்று சாடினார். தற்போதென்றால் அவர் இப்படிச் சொல்லியிருக்கமாட்டார்.
இப்போது மறுமணம் செய்து மாட்சிமை தங்கிய எலிசெபத் மகாராணியின் பிரஜையாக இவருக்கு ஒரு வாரிசும் கிடைத்திருக்கிறது.
அன்று விவாகரத்துப் பெற்ற சிங்கிளாக இருந்ததால் தான் போராளிகளை இவ்வாறு
விரக்தியில் திட்டும் நிலையில் இருந்தார். அன்று அவர் காட்டிய வழியை அவரது கட்சியில் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் தீபன் திலீசன் என்ற ஆசிரியர் பின்பற்றியுள்ளார். "போராளிகள் எங்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை* என்று
கடந்த ஆண்டு திலீபன் நினைவு நாட்களில் திமிருடன் கூறினர். இதற்குப் பின்னரும் புலிகளின் வாரிசுகள் நாமே; அவர்களின் இலட்சியத்தை நாமே தொடர்ந்து முன்னெடுக்கிறோம்
என கூறி முன்னாள் போராளிகள் உட்பட புலம்பெயர் தேசத்தவர்களிடம் பிச்சை எடுக்கிறார் கோடீஸ்வரர் கஜேந்திரகுமார்.
தரவை
துயிலும் இல்லத்தில் அங்குள்ள மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினர் சிரமதானம் செய்து
விட்டு போன பின் மண்வெட்டியுடன்
நின்று படம் எடுத்து விட்டு
துயிலும் இல்லங்களின் பேரில் நிதியை ஏப்பமிட்டவர்கள் என்ற வகையில் இவர்கள்
குறித்து மட்டக்களப்பு மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்ததில் தப்பில்லை. ஊர்வலமாக வருவோர் அந்த இடத்தை சேர
முன்னர் இவர்களை அங்கே செல்ல விட்டால் என்ன நடக்கும்? நினைவிடத்தைச்
சுற்றி வர தாங்களே நிற்பர்.
யார் யார் அஞ்சலி செலுத்தத்
தகுதியுள்ளவர்கள் என்பதையும் இவர்களே தீர்மானிப்பர். இது தானே திலீபனின்
நினைவேந்தலின் போதும் நிகழ்ந்தது? தென்மராட்சியில் இருந்து வழக்கமாக அஞ்சலி செலுத்த வரும் தூக்குக்காவடியினரை அப்படியே வந்து மாலையிட விடாமல் எவ்வளவு நேரம் அலைக்கழித்தனர்? மதகுருமார் முதலில் அஞ்சலி செலுத்துங்கள் என்றனர். அங்கு சென்ற வேலன் சுவாமியை நீங்கள் போங்கோ என்று பொன்.மாஸ்டர் விரட்டும் பாணியில் கூறும் காணொளியைக் காண முடிந்தது.
அடுத்து மாலை போட வருபவர்கள்
வாருங்கள் என்றனர். முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான ஓருவர் மாலையுடன் போன போது "நீங்க
பிறகு வாருங்கள்" என்றார் கட்சிப்பிரமுகர் ஓருவர். தன்னால் ஏதும் பிரச்சினை வரக்கூடாதே என்று எண்ணிய அவர் திரும்பி வருகையில்
ஜனநாயகப் போராளிகள் " ஏன் அண்ணா திரும்பி
வாறீங்கள்?
என்று
கேட்டனர். நான் பிறகு போடுறன்
என்று அவர் சொன்னார். எனினும்
தாங்கள் கூடவே சென்று அவரை மாலை அணிவிக்க
வைத்தனர்
ஜனநாயகப் போராளிகள். மதகுருமாரிடம் கருத்துக் கேட்க ஊடகவியலாளர்கள் முனைகையில் "ஒலிபெருக்கியின்
சத்தத்தைக் குறைவாக வையுங்கள்; அல்லது நிறுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்த
போது ஒலியை அதிகரித்தனர். எனவே தூபியைச் சுற்றி
வர இவர்கள் நிற்பதைத் தவிர்க்கவும் ஏற்பாட்டுக் குழுவினரின் நிகழ்ச்சி நிரலை ஒழுங்குபடுத்தி செயற்படுத்தவுமே மட்டக்களப்பு மக்கள் முனைந்தனர். இதில்
என்ன தவறு? அன்னைபூபதியின் நினைவேந்தல் என்ற பெயரில் நிதி
திரட்ட முடியாத சூழ்நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டு
விட்டது. எனவே தாங்கள் கொண்டு வந்த ஊர்தியில் இருந்த உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தி விட்டு நடையைக் கட்டினர்.
தனியே
நிகழ்ச்சி செய்வதொன்றும் இவர்களுக்கு புதிதல்ல. பல்கலைக்கழக மாணவர்கள், வடமாகாண சபையினர், ஊர்மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ய முனைந்தனர்.
அக்காலத்தில் அம்பாறை
மாவட்டத்தின் காரைதீவில் உள்ள வடிவேல் சசிதரன்
என்பவரது தலைமையில் இந்தக்
கட்சியினர் சுடரேற்றும் இடத்திற்கு மக்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வாகனத்தில் சுவிஸ் கிளை என்று பதாதைகளைக்
கட்டிக் கொண்டு வந்தவர்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரே ஓரு இடத்தில்
மட்டுமே நடத்தலாம் எனக் கூறி அந்த
இடத்திற்கு அனுப்பி வைத்தனர் ஊர் இளைஞர்கள்.
கிழக்கு
மக்களை இவர்கள் எவ்வாறு கணிக்கின்றனர்? தேசியப்பட்டியல் விவகாரத்தை இவர்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதை நோக்கும் போது மட்டக்களப்பில் 2004 இல் நிகழ்ந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.மாமனிதர் யோசேப் பரராஜசிங்கம் அவர்கள் பரப்புரை
செய்ய முடியாத சூழ்நிலையை கருணா குழுவினர் ஏற்படுத்தினர். அவ்வேளை எதற்கும் யோசிக்க வேண்டாம் தேசியப்பட்டியல் மூலமாக உங்களைப் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குகிறோம் என்று செய்தி அனுப்பினர் தலைவர்.
இவர்களுக்கோ கடந்த தேர்தலில் அம்பாறையில் 243,மட்டக்களப்பில் 1203,திருகோணமலையில் 2745 என வாக்குகள் கிடைத்தன.
ஏன் ஒரு கிழக்குப் பிரஜைக்கு உறுப்பினர் ஆகும் சந்தர்ப்பத்தை இவர்கள் கொடுக்கவில்லை? திருமலையில் போட்டியிட்ட கண்ணண் என்ற ஞானேஸ்வரனுக்காவது கொடுத்திருக்கலாமே. சம்பந்தன் ஜயா மூப்பு காரணமாக
செயற்படாதிருக்கிறார்; ஞானேஸ்வரனுக்கு கொடுத்து இருந்தால் கிழக்கில் எவ்வளவு சுறுசுறுப்பு, அக்கறையுடன் செயற்பட்டிருப்பார்? அல்லது ஒரு பெண்ணுக்கு வழங்கியிருக்கலாம். பத்மினி சிதம்பரநாதன் உட்பட எந்தப் பெண்ணுமே இப்பதவிக்கு தகுதியற்றவர்கள் என எப்படி முடிவெடுத்தனர்? அல்லது
தங்களோடு நிற்கும் ஒரு முன்னாள் போராளிக்கு
வழங்கியிருக்கலாம். இந்த
லட்சணத்தில் ஒரு நாடு இரு
தேசம் என்ற கோசம் வேறு.
முதலில் தேசியத்தின் பெயரால் வடகிழக்கு மக்களின் ஜக்கியத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய இவர்கள் முனைய வேண்டும். ஆணையிடும் தரப்பாக மட்டுமே நாம் இருப்போம் என்றால்
கட்சியின் நிலையும் தேய்பிறை தான். மட்டக்களப்பில் கிடைத்த படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் இக்கட்சியினர். கஜேந்திரகுமார் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் என்று வியந்து வாக்களிக்கும் நிலையில் மக்கள் இல்லை. இதுவரை கிடைத்த வாக்குகளும் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியினால் திரும்பியவை தான்.
மட்டக்களப்பில் கிடைத்தது ஓரு எச்சரிக்கை தான். இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை முரண்பாடு இல்லாமல் செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய இவர்கள் முயல வேண்டும். இல்லையேல் வரலாற்றில் இருந்து தூக்கியெறியும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படலாம்.
Post a Comment