தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில் ஒருவர் புலவர் கு.கலியபெருமாள்!

தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களில் ஒருவர் புலவர் கு.கலியபெருமாள். . ஆரம்பத்தில் பெரியார் ஆதரவாளராக இருந்து, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிர்சங்க தலைவராகினார். தொழிற்சங்க பொறுப்பு வகித்த காலத்தில் முதலாளி வர்க்கத்தின் மீது ஏற்பட்ட நேரடி காழ்ப்புணர்ச்சி அவரை நக்சல்பாரியாக உருவெடுக்க வைக்கிறது. பெரும் நிலச்சுவாந்தார்களின் நிலங்கள் இவர் தலைமையின் கீழ் இரவோடிரவாக அறுவடை செய்யப் பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

சாரு மஜும்தாரின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழகத்தில் நக்சல்பாரியாக செயல்படுகின்றார்.1969-ல் சாரு மஜூம்தாரை வைத்து அப்போதைய திருச்சி மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தின் முந்திரிக்காட்டில் ரகசியக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டி வாங்குபவர்கள், பொது சொத்துக்களை அபகரிப்பவர்கள் போன்றவர்களை அழித்தொழிப்பு செய்ய வேண்டும்என்று சாரு சொன்னதைத்தொடர்ந்து புலவர் தனது ஆட்களோடு அழித்தொழிப்பு செயலில் இறங்குகின்றார். இவரது முக்கிய தளபதியாக தமிழரசன் செயல்படுகின்றார். பெண்ணாடம் அருணா சுகர், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் போன்ற நிறுவனகளுக்கு எதிராக தனது இயக்கப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார். ஒரு கை விரல் எண்ணிக்கையிலான ஆட்களைக் கொன்டு இயக்கத்தை செயல்படுத்துகின்றார்.

இயக்கத்திற்கு தேவையான ஆயதங்களை இவரது தென்னஞ்சோலையில் வைத்து தயாரிக்கும் போது வெடிகுண்டுவிபத்து நேர்ந்து வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மாணவரணி தலைவர் கணேசன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர். றந்துபோன மூவரையும் ஒரு கோணிப்பையில் கட்டி தனது கரும்புத்தோட்டத்தில் புதைத்து மூவரின் சடலங்களும் காவல்துறையினரிடம் கிடைத்துவிடாமல் பார்த்துக்கொள்கின்றார்.

தமிழீழத்தின் பெரும் ஆதரவாளர்களாக இருக்கும் புலவர் மற்றும் தமிழரசனின் நம்பிக்கைகளில் ஒன்று தாய் தமிழகம் விடுதலை பெறாமல் தமிழீழம் விடுதலை பெறாது என்பது. தனித்தமிழகம் என்பது அவர்களின் இயக்கத்தின் வலுவான கோரிக்கையாகிறது. இயக்கத்தைக் கட்டியமைக்கும் பொருட்டு நிதித்தேவைக்காக தமிழரசன் வங்கிக்கொள்ளையில் ஈடுபடும் சமயம் காவல் துறையால் சதிசெய்து கொல்லப்படுகிறார். புலவர் தேடப்படும் குற்றவாளியாகிறார். புலவரைப்பிடிக்கும் பொருட்டு அவரது குடும்பத்தைச்சர்ந்த அணைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். தமிழரசணினால் அழித்தொழிப்பு செய்யப்பட அய்யம் பெருமாளின் கொலைப்பழி புலவரின் மீது சுமத்தப்பட்டு அன்றைய தி.மு. கலைஞர் ஆட்சியில் புலவர் அவரது மகன் வள்ளுவன் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது . அவரது துணைவியாரின் சகோதரி அனந்தநாயகி, அவரது இளைய மகன் நம்பியார், தம்பி மாசிலாமணி, ராஜமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

சில கால இடைவெளியில் அவருடன் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் ஜனாதிபதியிடம் கருணை மனுவுக்கு விண்ணபிக்க, இறுதிவரையிலும் புலவர் மட்டும் கருணை மனுவுக்கு விண்ணப்பிக்கவில்லை. வெளியில் இவர்களின் தூத்துத்தண்டனையை ரத்து செய்யக்கோரி பல இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பலவித போராட்டங்களை நடத்தியபோதும் கலியபெருமாள் மட்டும் கடைசி வரைக்கும் கருணை மனு கொடுக்கவில்லை. சென்னை பாண்டி பஜாரில் முகுந்தன் அணிக்கும், பிரபாகரன் அணிக்கும் சண்டை ஏற்பட்டு, அதில் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்த சமயம் பக்கத்து அறையில் இருந்த புலவருக்கும், பிரபாகரனுக்கும் நெருங்கிய அறிமுகம் கிடைக்கிறது.

பின்னாளில் பிரபாகரன் புலவரைப் பற்றி நினைவுகூர்கையில்தான் சந்தித்த தமிழக தலைவர்களிலேயே நேர்மையான தலைவர் புலவர் கலியபெருமாள்என்கிறார். புலவரின் மரணத்தின் போது வானொலியில் இரங்கல் தெரிவிக்கும் பிரபாகரன்தமிழீழம் விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தில் நான் முதலில் வந்துபார்க்க விரும்பும் இடம் புலவர் கலியபெருமாளின் கல்லறைஎன்று அறிவிக்கின்றார்.

இறுதியில் ராஜஸ்தானை சேர்ந்த கன்ஷியாம் பர்தேஷி என்கின்ற மக்கள் வழக்கறிஞர் இந்தியாவில் ஒரு குடும்பமே சிறையில் இருக்கும் அவலத்தை தெரிந்துகொண்டு தமிழகம் வருகிறார். சிறையில் இருப்பவர்களை சந்தித்து உண்மைநிலை அறிந்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். உச்ச நீதிமன்றம் அவர்களை விடுவிக்கும்படி ஆணை பிறப்பிக்கிறது. அப்போழுத்தும் கலைஞர் அவர்களை விடுவிக்க மறுக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. தமிழக அரசு விடுதலை செய்ய மறுத்தால் உச்ச நீதிமன்றம் சிறை சுவரை தகர்த்து உள்ளே வரும் என்கிறது. இறுதியில் அனைவரும் பரோலில் வெளி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிடம் புலவரை விடுவிக்க தங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா என்று கேட்க ஜெயலலிதா ஆட்சேபனை இல்லை என்று கையொப்பம் இடுகிறார். 13 வருட இன்னல்களுக்கு பிறகு புலவரின் குடும்பம் விடுதலை அடைகிறது. மக்களுக்காக தன வாழ்நாள் முழுக்க இன்னல்களை அனுபவித்த புலவர் இறுதியில் தன வயிற்றுபிழைப்புக்காக சிறிய காய்கறி கடை வைத்து பிழைப்பு நடத்தியவர் இதே மே 16ல் காலமானார்

நன்றி : www.aanthaireporter.com

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post