ஊடக ஆளுமை இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் BBC மாணிக்கவாசகம் இயற்கை எய்தினார்.

ஊடக ஆளுமை இலங்கையின்  மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் இன்று புதன்கிழமை(12) அதிகாலை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில்  காலமானார்.

அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் வைத்தியகலாநிதி பவித்ராவின் பாசமிகு தந்தையும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவ புளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை 13.04.2023 அன்று 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பித்து 9 மணிக்கு தட்சனாங் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: Rosarian Lambart



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post