மகனின் விடுதலைக்காய் போராடிய தாய் வாகீஸ்வரியின் நினைவேந்தல்!

28 ஆண்டுகளாக மகனின் விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கலாசாலை வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காக கடுமையாகப் போராடி வந்திருந்த நிலையில், பிள்ளையின் முகம் காணாமலே கடந்தாண்டு இவ்வுலகைவிட்டு பிரிந்திருந்தார்.

சமூக எண்ணங்கொண்டு இம்மண்ணை நேசித்த வாகீஸ்வரி அம்மாவின் ஆத்மா உண்மையிலேயே சாந்தியடைய வேண்டுமானால், 28 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை சிறைவைக்கப்பட்டுள்ள பார்த்தீபன் உட்பட சக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்கின்ற மெய்ப்பொருளின் அடிப்படையில், தாயாரது முதலாமாண்டு நினைவேந்தலை குரலற்றவர்களின் குரல் அமைப்பு, குடும்பத்தாருடன் இணைந்து அடையாளப்படுத்தி அனுஷ்டித்துள்ளது.

நன்றி:  yarlvasal.lk இணையம்












0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post