நினைவழியா நாட்கள் நூல் அறிமுக விழா ! 05,11.2023!

ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான  தேசியத் தலைவரால் இளமாறன் என புனை பெயர் சூட்டப்பட்ட குல மண்ணா எழுதிய `நினைவழியா நாட்கள்` நூலின் அறிமுக விழா  Netharlands நாட்டின் தலைநகரமான Amsterdan  Gouda எனும் இடத்தில் அமைந்துள்ள Bowlingen   centrum goudaHeurelaan  1 2803 DT என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் 05,11.2023 ஞாயிறுக்கு கிழமை நடைபெற்றது.

 கடந்த ஆண்டு சுவிற்சர்லாந்தில நடைபெற்ற வெளியீட்டு விழாவினை தொடர்ந்து இந் நூலின் அறிமுக விழாக்கள் இங்கிலாந்து,பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாகவே நெதர்லாந்து நாட்டிலும்  இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வு

பொதுச் சுடர் ஏற்றல்: மாவீரர் கப்டன் ரங்கனின் சகோதரி திருமதி பிரேமதர்சினி சிறிதரன்


மங்கள விளக்கேற்றல்: திருமதி உமாபதி லோகதாசன், திருமதி ஜெயம் (மொழிபெயர்ப்பாளர்), திருமதி சிவபாக்கியம் மகேஸ்வரன், பொன்னையா விஸ்வலிங்கம், புங்கையூர்  ராஜா, தவராஜா மதி, கையிலநாதன்











வரவேற்புரை: ஞானம் (தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர்)


அறிமுக உரை: காந்தன் (ஆரம்ப கால விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்)


ஆய்வு உரை : சத்தியக் கவிஞன் வேலுப்பிள்ளை தம்பிராஜா லிங்க ரெட்ணம்


சிறப்புரை : புங்கையூர் ராஜா


நூல் வெளியீடு:   சிறப்பு பிரதிகள் நூல் ஆசிரியர் குலம் வழங்க கமலநாதன் ரட்ணம், ஜெயம் துரைசிங்கம், பரா. மனோகரன் பாலசிங்கம், ரவி சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.



 

வாழ்த்துரை: லோகன் 


ஏற்புரை: செ.குலம் இளமாறன் (நூல் ஆசிரியர்)


நன்றி உரை: ராஜதுரை மோகன் (மொழிபேர்ப்பாளர்)


நிகழ்வு இந்த   ஒழுங்கில் நடைபெற்றது.

முன்னாள் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் ,ஊடகவியலாளர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

விஜயன் ஆறுமுகம் நிகழ்வை தொகுத்து வழங்கினார்





0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post