இரா துரைரட்னம் என்ன பேசுகிறார்?


ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் வானொலி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் பற்றி தெரிவித்த கருத்துக்களை விமர்சனம் செய்கிறார் . கனடாவிலிருந்து ஈழ மறவன் 

இரா துரைரட்னம்  என்ன பேசுகிறார்?

தமிழரசுக்கட்சி ஒரு மாயமான்.

ஏனைய அரசியல் கட்சிகள் துரைரட்னம் சொல்வது போல சர்வாதிகார தலமையை கொண்டதுதான் அப்படிப்பார்த்தால்  தமிழரசுக்கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையை வலியுறுத்தும் சுமந்திரனின் நிலைப்பாடு சரியானது ஆனால் இன்று உலகில் சனநாயகம் புனிதமானதாக உயிர் வாழ்கின்றதா?  ஆககூடிய அயோக்கியத்தனங்கள் மலிந்துள்ளதாக தேசியமும், சனநாயகமும் காணப்படுகிறது.

சர்வாதிகாரத்திற்கும் இன்று நடைமுறையில் இருக்கும் சனநாயகத்திற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.  நான் இப்படிக் கூறுவேன் இன்றுள்ள சனநாயகம் மகா ஆயோக்கியத்தனம் என்பேன்.

தேசியம் என்பதன் வரைவிலக்கணத்தை துரைரட்னம் புரிந்து பேசுகிறாரா? எனக்கு புரியவில்லை?

யோகேஸ்வரன்

மூன்றாம் தரப்பால் நிறுத்தப்பட்டிருக்கலாம். அல்லது தமிழ் தேசியவாதிகளால் நிறுத்தப்பட்டிருக்கலாம். அதற்குமப்பால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் போட்டியிடவேண்டும் என எண்ணியவர்களால் நிறுத்தப்பட்டி ருக்கலாம். அல்லது யோகேஸ்வரன் கூறுவது போல அவரது சொந்த நிலைப்பாடாகவும் இருக்கலாம்.

இரா துரைரட்னம் சுமந்திரனின் ஆதரவாளராகப் பேசுகிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் சனநாயத்தை வலியுறுத்துகிறார் அது நல்ல விடையம்தான்.

நெடியவனை எந்த அடிப்படையில் இங்கே துரைரட்னம் கொண்டுவருகிறார் என்பது கற்பனையாகவே தெரிகிறது.

யோகேஸ்வரனின் செயற்பாடுகளை பார்த்தால்

அவர் வெளிப்படையாக சிறீதரனை ஆதரிக்கிறார்.

அதனடிப்படையில் பார்த்தால்

மூன்றாம் தரப்பான இந்தியாவால் அல்லது சிறிதரனுடைய ஆதரவாளர்களாலோ தமிழ்த்தேசிய வாதிகளாலோ யோகேஸ்வரன் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றே கருத முடிகிறது.

 பிள்ளையானுக்கு சிறு தெய்வ கோவிலொன்றில் வைத்து வெற்றிபெற ஆசி கூறி நூல் கட்டியதால் யோகேஸ்வரன் பிள்ளையானின் ஆதரவாளராக கருத முடியுமா? யோகேஸ்வரன் தமிழரசுக்கட்சிக்கு வந்தால் தவறு என்றும் தேசத் துரோகம் என்று கூறும் இரா துரைரட்னம் தேசியக்கட்சிகளில் இருந்து வரும் சாணக்கியன் போன்றவர்களை புனிதர்கள் என்கிறார்.

இது எந்த அடிப்படையிலானது?

சுமந்திரனுடைய கடந்த பதினைந்து ஆண்டுகளை அவதானித்ததில் இருந்து

தமிழின விரோதியாக அறியப்படுகிறார்.

அடிமட்ட உறுப்பினர்களால் தலைவர்கள் தெரிவுசெய்யப்படுவது நல்லதுதான் அடிமட்டத் தொண்டர்கள் சலுகைக்கு விலை போனால் நிலமை பரிதாபமாகிவிடாதா? ஈழத்தமிழ் மக்களே சலுகைக்கு வாக்களிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சனநாயகத்தை எங்கே பணப்பெட்டிக்குள் அல்லது பதவிக் கதிரைகளுக்குள்தானே தேடவேண்டியுள்ளது.

தேசியம் என்றால் என்ன?

தேசம் மற்றும் தேசியம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு மாறிகொண்டே வந்துள்ளது. ஒரு காலத்தில் பூகோளப்பரப்பை இணைப்பது என்பது தேசியமாக கருதப்பட்டது. அதற்காக பல போர்கள் நடந்தன. உயிர் இழப்பு ஏற்பட்டது. அதே நாடு பின்னர் பிரிவதுதான் தேசியம் என கருத்து உருவானது. அதற்கும் போராட்டங்களும் உயிர்ப்பலியும் நடந்தன.

தேசம் அல்லது தேசியம் எனும் கருத்தை தவறானது எனக் கூறிய மகத்தான மனிதர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் இரவீந்திரநாத் தாகூர். இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் தேசிய கீதத்தை எழுதியவர் அவர்தான் அதே தாகூர் அவர்கள் தான் தேசம் எனும் கோட்பாட்டிற்கு வலுவான எதிர்கருத்தை கொண்டிருந்தார் என்பதையும் காண்கிறோம்.

ஆக தேசியம் எனப்படுவது  ஒரு சமூக மக்கள் கலை,இலக்கியம்,பண்பாடு,மொழி,நிலம் என பலவற்றால் இணைக்கப்பட் குறிப்பிட்ட ஒரு மனித சமூகக்கூட்டம் தமது இருப்பிற்கான ஒற்றுமை, சமத்துவம் சனநாயகம் என்பதனடிப்படையின் கூட்டை மையப்படுத்தி வலியுறுத்துவதே தேசியமாக வகைப்படுத்தப்படுகிறது என்பதே எனது கருத்தாகும். அந்த அடிப்படையில் பார்த்தால் ஈழத்தில் ஈழத்தேசியவாதத்தின் நிலையானவர்களாக  வே.பிரபாகரனும் அவரது வழிநடத்தலை உயிருள்ளவரை காப்பவர்களுமாக இருப்பார்கள் ஏனையோர் தேசியவாத அரிதாரம் பூசிய நடிகர்களாவார்.

மனிதன் ஒரு சமுதாய விலங்காவான் எண்ணங்களாலும், சூழ்நிலைகளாலும்,

சந்தர்ப்பங்களாலும், தேவைகளாலும் இயக்கப் படுகிறான்  தலைவர் பிரபாகரன் அவர்களைப்போல்  தனது, தான் தலைமைதாங்கும் இனத்தினது தேவை இது மட்டுமே என்ற அடிப்படையில் ஏனைய அனைத்து தாக்கங்களையும் தனக்கு பின்னால் அணிவகுத்து வழக்கூடியவர்கள் இந்த பூமிப்பந்தில் மிகச்சிலரே இதுவரை வாழ்ந்துள்ளனர் தமிழீழத் தேசியத்தலைவர் என வே.பிரபாகரனவர்களை அழைத்தது அவரது உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையிலானதே.

இப்போது சொல்லுங்கள்  இரா சம்மந்தன் மகிந்தராஜபக்சாவை தேசியத்தலைவர் என்றார். சம்மந்தனை தலைவனாக ஏற்று செயற்படும் தமிழரசுக்கட்சியினர் சிங்களத்தேசிய வாதிகள் தானே!

சிங்களத்தேசியவாதம் பேசும் அனைவரும் தெலுங்கர்கள் தானே. இலங்கையில் தெலுங்கு நாயக்கர்கள்தானே பொளத்த மதத்தை பரப்பிரதோடு சிங்கள மொழியையும் உருவாக்கினார்கள்.  தமிழர்களுக்குள்ளேயும் தெலுங்கர்கள் இருக்கிறார்கள் அவர்கள்தான் சிங்களத்தை ஆதரிப்பவர்கள்.

    

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post