சிறீநேசன் ஒரு கோழையா? அல்லது தியாகியா?

10,02,2024 அன்று DAN TV நெற்றிக்கண் நிகழ்ச்சியில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்அவர்கள்  கடந்த 27.01.2024 அன்று திருகோணமலையில் தமிழரசுக் கட்சி செயலர் தெரிவில்  அங்கே  என்ன நடந்தது என்று  கூறியிருந்தார் .

இந்த பேட்டி பற்றி  ஈழ மறவனின் (முல்லைமதி )கருத்து இது.

 சிறீநேசன் ஒரு கோழையா? அல்லது தியாகியா?

குகதாசன்,

கலையரசன்,

ராகுல் சாணக்கியா,

 இம் மூவரில் ஒருவருக்கே செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்தியதற்குப் பின்னணி உண்டு.

சிறீதரனை தலைவராக்குவதற்காக பாடு பட்ட மட்டு அம்பாறை சிறீநேசன், அரியநேந்திரன் , யோகேஸ்வரன் ஆகியோரை எக்கரணம் கொண்டும் கட்சியின் செயலாளராக தெரிவு செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் சுமந்திரன்.

DAN டான் தொலைக் காட்சிக்கு கருத்துக்கூறிய சீ. வி .கே சிவஞானம் ஒராண்டிற்கு முன்னதாகவே சிறீநேசனை அடுத்த செயலாளராக செயற்படுவதற்கு தயாராகும்படி

தானும் மாவையும் சொல்லி அனுப்பியதாக  சொல்கிறார் .

சுமந்திரன் தனக்கு நெருக்கமான வெளிநாடொன்றில் செயற்படும் கட்சி ஆதரவாளர் ஒருவருக்கு தானே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவேன் எனவும்

குகதாசனை செயலாளராக்க இருப்பதாகவும் அதற்கு எதிர்ப்புக்கள் வந்தால்

கலையரசன் அல்லது

ராகுல் சாணக்கியா

இருவரில் ஒருவருக்கே செயலாளர் பதவி வழங்கப்படும் எனவும் சிறீநேசன் உறுதியற்றவர் என்பதால் அவரை செயலாளராக்க முடியாது எனவும் சில மாதங்களுக்கு முன்னரே கருத்துக் கூறியுள்ளார்.

சுமந்திரனின் கூற்று  கசிந்ததை தொடர்ந்தும் சுமந்திரனை கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து அகற்ற வேண்டும் என விரும்பிய பிராந்திய வல்லரசின் உளவுத்துறையும் சுமந்திரனின் எதிர்ப்பாளர்களும் களத்தில் இறங்கி உருவாக்கிய தந்திரோபயத்தின் விளைவே சிறீதரன் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படதற்கு காரணமானது.

சிறீதரனின் உறுதியற்ற நிலைப்பாடுகளை அவதானிக்கும் போது அரசியலில் தனது இருப்பை காப்பதில் அவர் கவனம் செலுத்துவது தெரிகிறது.

சுமந்திரனின் நெருக்குதல்களில் நசிந்து கிடக்கிறார் சிறீதரன்.

அதேவேளை தேசியவாதம் இங்கே பயன் படு பொருளானதாகவே கருத வேண்டியுள்ளது.

சுமந்திரன் கட்சியின் அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில்  வைத்துக் கொள்வதற்காக  எதைவேண்டுமானலும் செய்வார்  என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம்.

அமெரிக்கத் தரப்பிற்கு 200 வாக்குக்களால்  தலைவராக தானே தெரிவு செய்யப்படுவேன் என நம்பிக்கை தெரிவித்த சுமந்திரன்

தமிழ்தேச கோசத்தால் தோற்கடிக்கப்பட்டது பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது வெள்ளிடை மலையாகும்.

சுமந்திரன் எதிர் வரும் தேர்தலில் தமிழ் மக்களால் முற்றாகத் தோற்கடிக்கப்படும் போது  தேசியப்பட்டியல் மூலமே பாராள மண்றத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும். அப்போது செயலாளராக  சிறீநேசன் இருந்தால் அது நடக்காது. ஆனால் குகதாசன் கட்டாயம் சுமந்திரனை காப்பாற்றப் போகிறார்.

கனடாவில் இருக்கும் தங்கவேலு குழுவின் ஆதிக்கம் தமிழரசுக்கட்சியில் வலுவாக உள்ளது. சுமந்திரனின் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத தங்கவேலு தனது சமூகவலைப் பதிவுகளில் ஏற்கனவே கோபத்தை கொப்பளித்துள்ளார். எப்படியாவது சிறீதரனை தோல்வியுற்ற தலைவராக மொட்டையடித்து விரட்டும் வரை சுமந்திரனும் அவரது அணியும்  ஓயமாட்டார்.

 சுமந்திரனுக்கே தலைவர் பதவி வழங்க வேண்டும் என வெளிப்படையாக கூறிய சீ.வி. கே சிவஞ்ஞானம்சிறீதரனின் வருகையை மகிழ்சியாக ஏற்கவில்லை ஆனால் சீ வி கே பழுத்த பனங்காட்டு நரியாவார் சிரித்துக் கொண்டே சித்தர் லேகியத்தை நஞ்சாக ஊட்டக் கூடியவர் அவர் 

தமது பெட்டி பிரிக்கும் அரசியலுக்கேற்ற தலைமைக்குழுவை மீண்டும் நிலைநிறுத்துவதில் தமிழரசுக்கட்சி வெற்றி பெறுவது ஓரளவிற்கு உறுதியாகி விட்டது

ஏற்கனவே சுமந்திரனை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு ஒப்பாக பேசியவர் சிறீதரன் கடந்த முறை தனது விருப்பு வாக்குகளை வழங்கி சுமந்திரனை காத்த அறிவாளி என்பதால் சிறீதரனை நம்ப முடியாது என்ற கருத்துக்களும் உலாவருகிறது.

அதே வேளை சிறீநேசனின் பலகீனங்களால் சீரழிவை சந்ததித்தது

செயலாளர் தெரிவு உள்ளிட்ட தலமைக்குழு தெரிவு என்பதில் மாற்றமில்லை. இன்று டான் தொலைக்காட்சி நெற்றிக்கண் நிகழ்ச்சிக்கு செவ்வி வழங்கிய சிறீ நேசன் மீண்டும் கெப்புத்தாவிய குரங்கின் நிலையில் இருப்பதை கவனிக்க முடிந்தது. அதனால் குகதாசன் தான் செயலாளராக தொடர்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளது.

எக்காரணம் கொண்டும் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்படும் எந்த ஒருவரையும் தேசியப்பட்டியலுக்கு ஊடாக முன்நிறுத்த இனிமேல் அனுமதிக்க கூடாது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

ஈழ மறவன்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post