சாந்தன் இவ்வுலகைவிட்டு பிரிந்தார் !

 


சாந்தன்...

மனது வேதனையில் துடிக்கிறது...

மகனைத் காணத்துடித்த தாயின் விருப்பம் நிறைவேறாமலும்...

தாயை காண விரும்பிய மகனின்

விருப்பம் நிறைவேறாமலும்...

சாந்தனின் உயிர் பிரிந்திருக்கிறது.

நேற்று அவர் உடல்நிலை குறித்த செய்தியை செய்தித்தாளில் படித்த போதே எனக்கு அய்யம் ஏற்பட்டது.

இன்று அது நடந்து விட்டது.

2005 ஆம் ஆண்டு என்னுடைய "புயலின் நிறங்கள்" ஈழ வரலாற்று ஓவியக் காட்சி தமிழீழத்தில் பல இடங்களில் நடைபெற்ற போது மல்லாவியிலும் மகா வித்தியாலயா பள்ளியில் நடைபெற்றது..

மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என கூட்டம் பார்வையிட்டு கொண்டிருந்த நிலையில் ஒரு ஆசிரியை என்னை தனியாக அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று..

அங்கு நின்ற ஒரு பெண்ணை சுட்டி "இவர் சாந்தனின் தங்கை. இந்த பள்ளியில் தான் ஆசிரியராக இருக்கிறார்" என்று கூறி முடிப்பதற்குள் சாந்தனின் தங்கை கதறி அழுதார்...

அங்கு அவர் யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ள முடியாத அவலநிலை..

அழுவது கூட யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று சத்தம் வெளிவராவண்ணம் அடக்கிக் கொண்டு கதறியதை என்னால் மறக்கவே முடியவில்லை..

அக்காட்சி இன்றும் மனக் கண் முன்னால் நிற்கிறது..

அவர் சகோதரர் மதி சுதாவும் தொடர்பில் இருக்கிறார்..

அந்த உறவுகளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது..

வேதனை... வேதனை... ஆட்றொண்ணா துயரம்...

சாந்தனுக்கு என் அகவணக்கம்..

ஓவியர் புகழேந்தி

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post