ஈழச்சுடர்கள்
கொஞ்சு
மன்னைத் தமிழீன்ற
ஒளிச்
சுடர்கள்
மிஞ்சு
கவி தந்தெமக்கு உயிரீன்ற
விழிச் சுடர்கள்
மஞ்சு
உளங் கொண்டு தமையீன்ற
ஈழச்
சுடர்கள்
நஞ்சு
மதை மஞ்சமென மமதையுடன் அணிந்திருந்த தனிச்சுடர்கள்
வெஞ்
சமரில் வடுவேந்தி
வீறுடனே
வாழ்ந்திருந்த
பெருஞ்
சுடர்கள்
நெஞ்ச
மதில் உறுதியுடன் ஈழமெங்கும் நடை புரிந்த
புயற்
சுடர்கள்
தஞ்ச
மென பெருந்தலைவன் அணி சேர்ந்து கைகோர்த்து
பலம் சேர்த்த
கருஞ்
சுடர்கள்
வஞ்ச
மிலா அன்பு கொண்டு உறவாடி மகிழ்ந்திருந்த பூஞ்சுடர்கள்
துஞ்ச
லிலே தூயதொரு வித்தான
தூய
சுடர்கள்
எஞ்ச
மிலா வார்த்தைகளுக்குள் அடக்க முடியா நெருப்புச் சுடர்கள்
கஞ்ச
மிலா தீரங்
கொண்டு வெடி சுமந்து பகை
முடித்த உயிராயுத சுடர்கள்
பஞ்ச
மிலா வாழ்வுதனை தம் மக்கள் வாழ
வழி செய்த காலத்தினால் அழியாத தியாகச் சுடர்கள்
காற்றுங்
கூட புகா இடம் புகுந்த கரும்புலிகள்
மாற்றங்
கொண்டு ஈழம் அமைக்க வழி
சமைத்த அத்திவாரக்
கற்கள்
சீற்றங்
கொண்ட மாற்றானை வேரறுத்த கந்தகங்கள்
ஏற்றங்
கொண்ட உம் ஈழக் கனவு
பலித்திடும் ஓர் நாள்
அந்நாளே
எமக்குத் திருநாள்!
-நிலாதமிழ்(ஒருத்தி)
05.07.2024.
Post a Comment