பேராசிரியர் சாந்தி கேசவன் அவர்கள் பல்கலைக்கழக கற்பித்தலில் இருந்து சென்ற வாரம் ஓய்வு பெற்றார்
அவர் ஓய்வு நாளில்
அவ ரிடம் கற்ற மாண வர்கள் அவரைக் கௌரவித்தனர்
கௌரவிப்பு விழாவாக மாத்திரமன்றி ஓய்வு நாளை ஒட்டி அவர் ஒரு நூலையும் வெளியிட்டார்
அந்த விழா ஓய்வு விழாவாக மாத்திரம் அன்றி ஓர் ஆய்வு நூல்
வெளியீடாகவும் அமைந்தமை என்னைக் கவர்ந்த விஷயமாம்
தமது ஓய்வோடு ஆய்வுக்கும் விடை கொடுத்து விடும் பல்கலைக்கழக காரர்கள் பலரைக் கண்டிருக்கிறேன்
உண்மையில் ஓய்வின் பின் தான் ஆய்வு சிலருக்கு வேகம் கொள்கிறது
சாந்தி கேசவனை நான் அவரது இளம் வயதிலிருந்து அறிவேன்
பாடசாலை மாணவியாக
யாழ்ப்பாண பல்கலைக் கழகம் மாணவியாக
பாடசாலைஆசிரியராக
ஆசிரிய ஆலோசகராக
கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரீக பாட விரிவுரையாளராக
கலாநிதியாக
பின்னர் இந்து நாகரிகத் துறை தலைவராக
அதன்பின் பேரா சிரியராக
அவர் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்
கிழக்குப் பல்கலைக் கழகத் திலே ஆரம்பத்தில் இந்து நாகரிகம் என்னும் பாடநெறி நுண்கலைத் துறை யுடன் தான் இணைக்கப் பட்டிருந் தது
அப்போது நுண்கலைத் துறைவராக இருந்து நான் தான் இதற்கும் பொறுப் பாளர் ஆனேன்
இதற்கான பாடத் திட்டங் களும் தீட்டப்பட் டன்
பின்னால் இந்த பாடநெறி
ஒரு துறையாக மாற்றம் பெற்று இன்று அது ஒரு பீடமாக மாறும் நிலைக்கு உயர்ந்துள்ளது
இந்த வளர்ச்சியில் சாந்தி கேசவனின் பங்கு அளப் பெரியது
அவர் பல நூல்களின் ஆசிரியர்
அவரது கலாநிதி பட்ட ஆய்வு
மட்டக்களப்பின் கண்ணகி வழிபாடு சம்பந்தமான இந்த
நூல்
மட்டக்களப்பிலே கண்ணகி அம்மன் இந்து மக்களிடம் ஒரு முக்கிய தெய்வமாக கணிக்கப்படுகிறாள்
வைகாசி மாதம் பிறந்து விட்டால் மட்டக்களப்பின் கிராமங்கள் தோறும் கண் ணகி விழா ஆரம்ப மாகி விடும்
இதனைக்
"கண்ணகி அம்மன் சடங்கு" என அழைப்பார்கள்
வழிபாட்டு முறைகளும் வேறு
நீண்டதொரு வரலாற்றை கொண்ட இந்த வழிபாடு இன்று பல்வேறு விதமாக மாறிக்கொண்டு வருவதும் ஆராய்வுக்குரியதாகும்
சாந்தி கேசவனின் இந்த நூல் மட்டக்களப்பில் கண் ணகி அம்மன் வழிபாட்டின் பரவலையும்
அது சம்பந்தமாக இருந்த வழிபாடுகளையும்
அதன் தத்துவங்களையும் இந்து மத நோக்கில் ஆராய் கிறது
மட்டக்களப்பின் கண்ணகி வழிபாடு பற்றி
மேலும் ஆராய
விரும்புபவர்களுக்கு
இந்நூல் பெரிதும் துணை யாக இருக்கும்
தனது ஓய்வு நாளை ஒரு புத்தக வெளியீடாக மாற்றிய சாந்தி
கேசவனுக்கும்
இந்த விழாவை ஒழுங்கு செய்ததோடு அதற்குத் தலைமை தாங்க என்னை க்ஷ அழைத்த
அன்பான மாணவர்களுக்கும எனது வாழ்த்துக்கள்
கிழக்குப் பல்கலைக் கழ கத்தின் பல முக்கிய பிரமு கர்கள் இதில் கலந்து கொண்டமை ஒரு விசேஷ அம்சமாக எனக்குத் தெரி கிறது
ஓய்வு காலத்தில் ஒதுங்கி விடாது அவர் மேலும் பல ஆய்வுகள் செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார் ப்பாகும்
Maunaguru Sinnia (fccebook)
Post a Comment