கடந்த ஞாயிறு 21/07/2024 அன்று, லண்டன் Totteridge Academy ல், தமிழீழ எழுத்தாளர் திருமதி சாவித்திரி அத்துவிதானந்தன் அவர்களின் ‘நெருப்புக் குழந்தைகள்’ எனும் கரும்புலி மாவீரர்களின் வரலாறுகூறும் நூல், மிகச் சிறப்பாக வெளியிட்டுவைக்கப்பட்டது.வழமைபோன்று இந்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலோடு ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன்பின்னர் பிரித்தானியக் கொடியினை செல்வி சுரேகா சுதாகரனும்,
தமிழீழத் தேசியக் கொடியினை திருமதி கவிக்குயில் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
மாவீரர் இளநிலாவின் தாயார் திருமதி சிவபாக்கியம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க
, மாவீரர் அஜந்தி அவர்களின் சகோதரி திருமதி கௌரி அவர்களால் பொது மாவீரர் படத்திற்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டது
. இதனைத் தொடர்ந்து அனைவரினாலும் மாவீரர்களுக்கான அகவணக்கம், மலர் வணக்கம் ஆகியன இடம்பெற்றன.இவற்றினைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய வாத்தியமான பறை இசை திரு வாகீசன் அணியினரால் இசைக்கப்பட்டது.
பின்னர் தாயகப் பாடலுக்கான நடனம், மற்றும் தாயகப் பாடல்கள் இசைத்தும் எழுச்சிகரமாக நிகழ்வுகள் இடம்பெற்றன
.இதனைத் தொடர்ந்து, தமிழீழ மருத்துவத்துறையில் கடமையாற்றிய வைத்தியர் திரு வாமன் அவர்களால் வரவேற்புரை இடம்பெற்றது. இவ்வுரையானது, சமகால அரசியல் விழிப்புணர்வுகளையும் உள்ளடக்கிய சிறப்புரையாகவும் அமைந்திருந்தது.
மகளிர் அணியில் கடமையாற்றிய திருமதி கலைவிழி அவர்களால் வெளியீட்டுரை நிகழ்தப்பட்டதனைத் தொடர்ந்து
, இவ் வரலாற்று நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. திருமதி டிலானி சசிகுமார் அவர்கள் நூலினை வெளியிட்டுவைக்க, மாவீர்ர் இளையவளின் சகோதரன் திரு திருக்குமரன் அவர்கள் முதற்பிரதியினைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த அனைவரும் நூலினைப் பெற்று சிறப்பித்து வைத்தனர்.அடுத்து, நூலின் மதிப்பீட்டுரையினை திருமதி உமாகாந்தி அவர்களும், திரு ஜெயக்குமார் அவர்களும் மிகச் சிறப்பாக ஆற்றியிருந்தனர்.இதன்பின்னர், நூலாசிரியரும், தமிழீழ எழுத்தாளருமான திருமதி சாவித்திரி அத்துவிதானந்தன் அவர்களின் ஏற்புரை, இந்நூல் பற்றிய உருவாக்கப் பின்னணியோடு, உணர்புபூர்வமாக இடம்பெற்றது. இறுதியாக நன்றியுரை வழங்கப்பட்டு, தேசியக் கொடிகளின் கையேற்புடன் இந்நூல் வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நிறைவேறியது.
Post a Comment