பனாகொடை மகேஸ்வரன் காலமானார்!


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதி உன்னதமான போராளியும், ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்த தலைவர்களில் கடைசியாக எஞ்சி இருந்தவருமான தம்பிப்பிள்ளை மகேஸ்வரன்(பனாகொட மகேஸ்வரன்) இன்று காலமாய் ஆனார்.

உன்னைப் போல அறிவார்த்தமான அதி உன்னதமான போராளியை நான் எங்கும் கண்டதில்லை,

இராணுவ விஞ்ஞானியே

அறிவுப் பொக்கிசமே

என் ஆருயிர் நண்பா

Tamil eelam Army தமிழீழ இராணுவம் என்ற பெயரில் முதன் முதலில் யாழ் கோட்டைக்கு எறிகணை செய்து அடித்தவன் நீ, சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல், தேயிலை பொருளாதார இலக்கின் மேல் தாக்குதல், மீனம்பாக்கம் விமானநிலையக் குண்டு வெடிப்பு, மட்டக்களப்பு சிறை உடைப்பு என நீ செய்யாத சாகசங்கள் இல்லை, 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவத் தலைவனே.. சென்ற புதன் கிழமை தானே உலகில் உள்ள தீவுகள் பற்றி எல்லாம் பேசி விட்டு, மிகுதித் தகவல்களையும் சேகரித்துக் கொண்டு திரும்ப அழைக்கிறேன் என்றாய்..,

நீயும் நானும் செங்கற்பட்டு சிறையில் இருந்து பேசிய கதைகள் என்றும் மறக்க முடியாதவை..

இந்த உலகின் எங்கோ ஒரு மூலையிலேனும் தமிழனுக்கு என ஒரு தேசம் அமைக்க வேண்டுமென தீராக் கனவுடன் வாழ்ந்தாய்..,

உலகப்படத்தை எடுத்து எழுமாறாய் ஒரு புள்ளியை தொட்டு இது எந்த இடமெனக் கேட்டால் அந்த நிலப்பரப்பின் வரலாறு, அதில் உள்ள வளங்கள், அரசியல் என விரல் நுனியில் பூகோள வரலாறை வைத்திருந்தாய். இனி ஏதாவது ஒன்று குறித்து கேட்டால் தெளிவு படுத்த எம்மினத்தில் யாரும் இல்லை..

பனாகொட சிறை, வெலிக்கடை சிறை, புழல் சிறை, செங்கல்பட்டு சிறை, தன்சானியா சிறையென 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் இருந்து ஊர் திரும்பினாய்..

உன்னைப் போல் ஒரு திறமையான போராளியை, நல்ல மனிதனை, நண்பனை, அறிஞனை இழந்து உடைந்து போய் விட்டேன் நண்பனே

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  மறக்க முடியாத உயரிய வரலாறாய்

நீ வாழ்வாய்..

 போய் வா நண்பனே..

வீர வணக்கம்

திரு திருக்குமரன்


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post