கிழக்கு முதலமைச்சர் கனவில் முன்னால் மாநகர முதல்வர் தமிழ் தேசியத்தையும் கைவிட்டார்!

 



கிழக்கு முதலமைச்சர் கனவில் முன்னால் மாநகர முதல்வர் தமிழ் தேசியத்தையும்
   கைவிட்டார்!

இம்மாதம் முதலாம் நாள் (2024.09.01)                                                                                       வவுனியாவில்நடைபெற்றதமிழரசுக்கட்சியின்மத்திய குழுகூடியது . இதன் போது  நடைபெறவுள்ள  ஜனாதிபதி  தேர்தலில்   தமிழ்  பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை  எனவும்   சிங்களவேட்பாளர்  திரு  சஜி த்  பிரேமதாசாவை    ஆதரிப்பதென   முடிவு    எடுக்கப்பட்டது.

 தென்னிலங்கை வேட்பாளரான சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற சுமந்திரன் அவர்களின் கோரிக்கை என்ன அடிப்படையில் முன்மொழியப்பட்டது என்பதை மத்திய குழு உறுப்பினர்கள் புரிந்துகொண்டார்களா என்பது தெரியவில்லை! .இருப்பினும் சுமந்திரனின் கூற்றுக்கு வலுவூட்டும் வகையில் சிலர் கூட்டத்தில் கருத்துக்களை சொன்னதாக அறியமுடிகிறது.அவர்களில் குறிப்பாக மட்டக்கள ப்பு  மாநகரசபையின் முன்னாள் முதல்வர் பொதுவேட்பாளருக்கான ஆதரவை

வழங்காது இருப்பதுடன் அவருக்கு சார்பாக பிரச்சாரம் செய்வதை விடுத்து  சஜித்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றது.சுமந்திரன் சாணக்கியன் அணியினருக்கு தனதுவிசுவாசத்தை வெளிப்படுத்த உள் நோக்குடன்  மட்டக்கள ப்பு  மாநகர சபையின் முன்னால் முதல்வர் எடுத்த முடிவாக இது மக்களால் நோக்கப்படுகிறது.

2020பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சாணக்கியனுக்கு மட்டக்களப்பில் ஒரு பிரச்சாரமேடையேனும் ஒழுங்கு படுத்தாதவர் முன்னாள் முதல்வர் ,

 மாநகர முதல்வரை மீறி கல்லடிப்பாலத்திற்கருகில் சாணக்கியனின் அபிமானிஎளால் ஒழுங்கு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்திற்கு கூப்பிடு தூரத்தில்இவர் வீடு இருந்தும்  அப்பக்கம்  தன்தலைக்கறுப்பைக் கூட காட்டாதவர் இவர் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களின் காலடியைச் சுற்றி சுற்றிவந்து பல்வேறு வரப்பிரசாதங்களை பெற்ற முன்னாள்

முதல்வர் சிறிநேசன் அவர்களுக்கே குழிபறிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.மண்முனை வடக்கு,மண்முனை மேற்கு,மண்முனைப்பற்று ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தமிழரசுக்கட்சியின்கிளைக்கூட்டத்திற்கு அதன் தலைவருக்கு தெரியாமல் அழைப்பு விடுத்து நேற்று கூட்டத்தை நடாத்தி உள்ளார்.இதன் மூலம் வவுனியாவில்நடைபெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு வலுவூட்டும் செயல் பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக அறியமுடிகின்றது.மண்முனை மேற்கு அங்கத்தவர்களுடன் மண்முனை பற்று அங்கத்தவர்கள் பலர் பிரசன்மம்ஆகாத நிலையில் நேற்று அக்கூட்டத்தை நடாத்தி தனதுவிசுவாசத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மாகாணசபை தேர்தல் 2008இல் நடைபெற்றது.இதில் ஐக்கிய சதந்திரகூட்டணி 37அங்கத்தவர்களில்20பேரை தனதாக்கிக்கொண்டது.மகிந்தவிற்கு பிள்ளையான்  காட்டிய விசுவாசத்திற காகவும் தமிழ் மக்களுக்கு தான்விசுவாசி எனக்காட்டிக்கொள்ளும் வகையில்

ஐக்கிய சுதந்திர கூட்டணியில் இருந்த ஹிஸ்புல்லாவை விட்டு

பிள்ளையானை முதல்வராக்கினார் மகிந்த. மேற்படி சமன்பாட்டிற்கேற்ப வருகின்ற மாகாணசபைத்தேர்தலில் சாணக்கியன் துணையுடன் வெற்றியைபெற்று விட்டால் சுமந்திரனின் ஆசியுடன் சஜித் அணியால் முதலமைச்சர் நாற்காலியைபிடிக்கலாம் என முன்னாள் முதல்வர்கணக்குபோட்டுள்ளார்.மட்டக்களப்பில் தேர்தல் அரசியலுக்கு , முன்னாள் முதல்வர் யார் யாரால் அழைத்து வரப்பட்டாரோ அவர்கள் எவரும் இவர் அருகில் தற்போது இல்லாதநிலையில் தமிழ் மக்களின்உரிமைகளையும் உணர்வுகளையும் மறந்து சுமந்திர,சாணக்கிய புராணங்களை பயபக்தியுடன் பாடுகின்றார் இந்த போலி தேசியவாதி .

காந்தரூபன்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post