சொந்த சகோதரர்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டும் சிந்தை இரங்காரடி… !

1948 கார்த்திகை திங்கள் 15இல் இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கை குடியுரிமை சட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்றி இலட்சக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையை பறித்தது.

இதற்குதமிழ் தேசியத்தை தனது கொள்கையாக கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் துணைபோனது.

இந்திய தமிழருக்கு ஏற்பட்ட இன்னல்கள் இலங்கை தமிழருக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு

எனக்கருதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து தந்தை செல்வா அவர்கள் வெளியேறி 1948மார்கழித் திங்கள் 18ம் நாள் மருதானையில் உள்ள அரசலிகிதர்சேவையாளர் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார்.

இதன் மூலம் தமிழனுக்கு ஒரு அநீதியென்றால் அதை ஒருபோதும் தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொள்ளாது எனபதே இதன் பொருள். "வரலாறு

மேற்படி மகிமையும் சிறப்பும் கொண்ட தமிழரசுக்கட்சியினுள் ஆயுதபோரட்டம் மௌனிக்கப்பட்ட 2009மே 18க்கு பின்னர் போலித்தேசியவாதிகள் பலர் வந்துகூடாரமிட்டார்கள்.குறிப்பாக சுமந்திரன்,சாணக்கியன்,கலையரசன்,தியாகராசா சரவணபவன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.தமிழ் தேசியத்தை சிதைக்கும் எண்ணும் தங்கள் எஜமானர்களின் விருப்புக்காக மேலும் சிலரை

கட்சிக்குள் இனைத்துக்கொண்டுதமிழ் இனத்திற்கு பல நாசகார செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதை இவர்களின் அண்மைக்காலசெயற்பாடுகள் வெளிப்படுத்துகிறது.

இம்மாதம் 1ம்திகதி  வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மேற்படிகூற்றை வலுப்படுத்துகிறது.

 1.பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்குதல்.

2.பொது வேட்பாளரை போட்டியில் இருந்து விலககோருதல்.

3.தமிழ் வேட்பாளருக்கு சார்பாக பிரச்சார பணியில் தமிழரசுக்கட்சி

ஈடுபடாதிருத்தல்.

4.சஜித்திற்கான ஆதரவை வாய்மூலம்வழங்குவதுடன் நின்றுவிடாது,அவருக்கு சார்பாகபிரச்சாரம் செய்தல்.

இவற்றில் முதல் மூன்று விடயங்களும் பிரசன்ன மானவர்களில் அதிகமானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட நான்காவது தீர்மானம் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

 தமிழ் இனத்தின் விடிவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி இம்மாதம் 1ம்திகதி வவுனியாவில்  தமிழ் இனத்தையே புதைகுழியில் போடும் நிகழ்வை நிகழ்த்தியது.

பொங்கு தமிழர்க்கு இன்னல்விளைந்தால்

சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

என்ற பாவேந்தர் பாடலுக்கு ஏற்ப தமிழ்மக்கள் திரண்டு வரும்வேளையில்  வவுனியாத் தீர்மானத்திற்கு சாதகம்,பாதகமான கருத்துக்களை மத்தியகுழுக்கூட்டத்தில் சிலர் தெரிவித்து இருந்தனர்.

 கிழக்கில் இருந்து மத்திய குழுவுக்குதெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் சமூகமளிக்காதநிலையில் 

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,தேசியபட்டியல்பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள்முதல்வர் சரவணபவன்,மண்முனை தென்எருவில் பற்று பிரதேச்சபையின்முன்னாள் உபதவிசாளர் ஆரியரத்தின ரஞ்சனி கனகராசா ஆகியோர் தீர்மானத்திற்கு தமது பூரண ஆதரவை  வழங்கியிருந்தனர்.


திருமலை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் திரு.S.குகதாசன்,மூதூர் கட்டபறிச்சானைச் சேர்ந்த முன்னாள் அதிபர் திரு.க.கனகசிங்கம் ஆகியோர் தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.S.குகதாசன் அவர்கள் 1977,1983 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளையும்,உறவுகளையும் இழந்து அகதிகளான சில ஆயிரம் மலையகத்தமிழ் மக்களை கொண்டுவந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்லம்பத்தை,பன்குளம்,பறையன்குளம்,புளியடிச்சோலை முதலிய இடங்களில் குடியமர்த்தி மறுவாழ்வுஅளிக்கும் பணிகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டார்.

இதன் விளைவாக ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டுவெளியேறி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தார். தமிழ் நாட்டில் அடைக்கலம் புகுந்தும் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் தமிழ்நாட்டிக்குவந்து முகாங்களில் தங்கியிருந்த இலடசக்கணக்கான இலங்கை தமிழ்அகதிகளுக்கு நிவாரணமறுவாழ்வு மற்றும் கல்வி வழங்கும் பணியில்நேரடியாக ஆறு ஆண்டுகள் ஈடுபட்டவர் .  இவர்  ஒரு உண்மையான

தமிழ்தேசியவாதியான காரணத்தால் ஆரம்ப காலத்தில் சுமந்திரன் அணியில் தன்னை இனைத்துக்கொண்டாலும் தற்போது பொது வேட்பாளருக்கான தனது ஆதரவு தளத்தை விரிவு படுத்திகொண்டுள்ளார் .இதன் காரணமாக  வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் பொதுவேட்பாளருக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

 மூதூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் க.கனகசிங்கம் அவர்கள்தமிழ் தேசிய புலத்தில் நீண்டகாலமாக தன்னை இணைத்துக்கொண்ட அப்பழுக்கற்ற மனிதர். தரம் 6  இல் கல்வி கற்ற காலத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் நெறிப்படுத்தலில் 1960 பொதுத்தேர்தலில் மூதூர் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி் வேட்பாளர் திரு.து.ஏகாம்பரம் அவர்களுக்காகபரப்புரை செய்தவர்.1970இல் மூதூர் தொகுதி வாலிபர் அணிச்செயலாளராகவும் மூதூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்திரு.அ.தங்கத்துரை அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு வலதுகரமாக இருந்து உழைத்தவர் . 1981முதல் 2010வரை பிறந்த மண்ணைவிட்டு அந்நியவாசம் வாழும்நிலை ஏற்பட்டது.இருப்பினும் இன்றுவரை தமிழ் தேசியத்தின் வாழ்நெறி பிறழாது வாழ்பவர்.இவர் வவுனியாவில்  நடைபெற்ற மத்தியகுழுக்கூட்டத்தில் பொதுவேட்பாளருக்கு சார்பாக பலகருத்துக்களை முன்வைத்தது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.தன் இனத்தின் பால் பற்றும்உறுதியும்கொண்ட உண்மைத் தமிழ் தேசியவாதி பொது வேட்பாளருக்குசாதகமாகவே தொழிற்படுவார்.

மாவீரர் தொடர்பான பதிவுகளின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் 305பேர் தமிழ்மக்களின் வாழ்வுக்காக தமது இன் உயிர்களை தியாகம்செய்து உள்ளனர்.கல்லடிப்பிரதேசத்தின்முதல் மாவீரன் பொன்னையா காந்தரூபன் .இந்த வரலாறுகளை மட்டக்களப்பு

மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சரவணபவான் அறிந்திருக்க வாய்ப்பில்லை.எனெனில் போராட்டகாற்று இவர்கள் மீது படாது வாழ்ந்தவர்கள் ஆயிற்றே! 1972காலப்பகுதியில் மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களின் எழுச்சிப்போராட்டங்களுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக காணப்பட்ட மட்டக்களப்பு மாவட்டஅபிவிருத்தி அதிகாரியான ஶ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு ராஜன் செல்வநாயகத்தின் கரத்தைபற்றி மாநகர முதல்வர் கதிரையைகைப்பற்றியவர் திரு கந்தையா தியாகராஜாவான திரு சரவணபவானின் தந்தையார் .மரபுவழி தமிழ் தேசியத்தில்வளராமல்2010க்குபின்அரசியலுக்குபிரவேசித்ததிரு.சரவணபவானிடம்தமிழ் தேசிய பற்றுதியை எதிர்பார்பது மடமையே! எனவே பொது வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களை சரவணபவன் வெளிடுவது ஒன்றும் புதுமையில்லை!   

களுவாஞ்சிகுடிப் பிரதேசம் தமிழீழப்போராட்டத்தில் பல வரலாற்று விடயங்களை கொண்டது.பதிவுகளின் பிரகாரம் இப்பிரதேச  60மாவீர்ர்கள் தமது இன்உயிர்களை தியாகம் செய்து உள்ளனர்.1970க்குப் பின் கிழக்கில் அரசு இயந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையை 1976இல் பஸ் எரிப்பு மூலம் நாவற்குடாவில் மேற்கொண்டவர் பரமதேவா .இவர்கிழக்கில் முதன் முதலாக  ஆயுத தாக்குதலை 22.09.1984 அன்றுகளுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம்மீது மேற்கொண்டார். இத்தாக்குதல்தோல்வியில் முடிவுற பரமதேவாவுடன் மகிழடித்தீவைச் சேர்ந்த ரவியும் கிழக்கின் முதல் மாவீரர்களாக களுவாஞ்சிகுடி மண்ணில் வீழ்ந்தார்கள்.இச்சம்பவம் நடைபெற்று இம்மாத த்துடன் 40 வருடங்கள் முடிவடைகின்றது.

இதுமட்டுமின்றி களுவாஞ்சிகுடியில் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்த அதிரடிப்படை முகாமை அகற்றும் பணியில் பலர் தமது இன்னுயிரை இழந்தனர்.

இவற்றை இராசபுத்திரன் சாணக்கியன் அறிந்திருக்கவோ அன்றி தெரிந்திருக்கவோ வாய்பில்லை. ஏனெனில் இவர் தனது கடந்த காலத்தை சிங்கள தேசத்திலும் அதனைத்தொடர்ந்து கடல் கடந்த நாடுகளிலும் கழித்தவர்.

2010க்குப்பின் அரசியல் செய்வதற்காக ஐக்கிய சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு1650 வாக்குகளை மட்டுமே மட்டக்களப்பில் பெற்றவர்.

இவரிடம் தமிழ் தேசியப்பற்றை எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? இவ்வாறனவர் பொது வேட்பாளருக்கு சார்பாக எவ்வாறு நடந்து கொள்வார்? 2020 பாராளுமன்றத் தேர்தலில் இவருக்கு வாக்களித்த33332 மக்கள் இன்று ஏமாந்து போயுள்ளனர்.இவர் சிங்கள தேசத்தின் சூட்டில் இருந்து வளர்ந்தவராயிற்றே அது தானே உயர்வு  !

கல்லாறு பிரதேசமானது ஈழப்போராட்டத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய மற்றொரு பிரதேசமாகும்.கோட்டைக்கல்லாறு 40 மாவீரர்களையும்  பெரியகல்லாறு37மாவீர ர்களையும் போராட்டத்திற்காக ஈந்துள்ளது . தமிழீழ புலிகள் இயக்கத்தின் கிழக்கு அரசியல் பிரிவின் முதல் பொறுப்பாளராக   கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த சடாச்சரன் என்ற இயற்பெயர் கொண்ட பிரான்சிஸ்  செயற்பட் டார்.31.10.1988 இல் துரோக்கும்பல்களின் தாக்குதலில்பிறந்த மண்ணிலே உயிர் துறந்து கோட்டைகல்லாறு பிரதேசத்தைசேர்ந்த மாவீரர்  பட்டியலில் மூன்றாவது நபராக பதியப்பட்டார்.சடாச்சரபவானின்உடன் பிறந்த சகோதர ரான சரவணபவான் 13.08.1989 அன்று ஈழப்போராட்டத்திற்காக தன்னுயிரை ஈந்தார்.இதன்மூலம்கோட்டைக்கல்லாறு பிரதேச மாவீரர் பட்டியலில் நான்காம் இடத்தில் பதியப்பட்டார். இவ்வாறான வரலாற்று பெருமை கொண்ட கோட்டைக்கல்லாறு பிரதேசத்தில்இருந்து மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஆரியரத்தின ரஞ்சனி கனகராசா வவுனியா தமிழரசுக் கட்சி கூட்டத்தில் பொது வேட்பாளருக்கு பாதகமான பல கருத்துக்களை  முன்வைத்துள்ளார்.இது இவர் பிறப்பின் மரபணுவில் ஏற்பட்டகோளாறேயின்றி வேறுஏதுமில்லை.

 மாவீரர் தொடர்பான பதிவுகளின் பிரகாரம் அம்பாரை மாவட்டத்தில் 823 பேர்தமிழீழப்போராட்டத்தில்தமதுஇன்னுயிர்களைதியாகம்செய்துள்ளனர்.

இப்பிரதேசத்தின்மூன்றாவது  மாவீரன் பொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலம்சென்ற கனகரெட்ணம் அவர்களின் புதல்வர் ரஞ்சன் ஆவார்.தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம் 1977 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கனகரெட்ணம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.தந்தை தமிழனத்திற்கு செய்த துரோகத்திற்காக தனயன் ரஞ்சன் தமிழீழ போராட்டத்தில்தன்னை இணைத்துக்கொண்டார்.

கிழக்கில் துடிப்புடன் இருந்த பரமதேவாவுடன் இணைந்து இயக்க செயல்பாட்டிற்காக நிதிதேவைப்பட்டதால் 1978இல் செங்கலடிவங்கி கொள்ளையில் ஈடுபட்டனர்.இந்த முயற்சி தோல்விஅடைந்ததால் கைது செய்யப்பட்டரஞ்சன் ஐந்து வருட சிறை அனுபவத்தை அனுபவிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. தொடர்ந்தும் போராட்டத்தில் முனைப்பு கொண்டு உரிய பயிற்சி பெற்று இராணுவ முகாம் மீதான முதலாவது தாக்குதலை1985இல்கொக்கிளாயில்நடாத்தினர்.

இத்தாக்குதலில்16புலிப்போராளிகள்வீரமரணத்தைதழுவிக்கொண்டனர்.இவர்களில் மூவர் மட்டு அம்பாறை மாவட்ட த்தை  சேர்ந்தவர்கள்.அம்பாரை மாவட்டத்தைச் சேரந்த ரஞ்சன்,கல்லடியைச் சேர்ந்தபொன்னையா காந்தரூபன்,கிரானைச்சேர்ந்த கெனடி ஆகியோர் ஆவர். இவர்கள் மூவரும் பயிற்சியின் பின்னர் சொந்த மண்ணில் கால்  தடம்பதிக்காமலே வீரமரணத்தை தழுவிக்கொண்டது பெரும் சோகமே!

இத்தனைக்கும் உரித்தான அம்பாரைமாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 76பேர் தமிழீழப்போரட்டத்தில் தமதுஇன்னுயிர்களை இழந்து உள்ளனர்.

அம்பாரை மாவட்டதேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கலையரசன் இவற்றை தெரிந்து கொண்டவரா என்பது தெரியவில்லை

.இவர் நாவிதன் வெளியை வசிப்பிடமாககொண்டாலும்இவரின் பூர்வீகம் துறைநீலாவனையே  துறைநீலாவனை என்பது   1958இல் ஏற்பட்ட குழப்பத்தில் சிங்கள காடையர்களின் கொட்டத்தை அடக்கி ஓடவிரட்டிய மண்.இவ்வாறானசிறப்பும் ,வீரமும்மிக்க மண்ணில் பிறந்து தமிழ்தேசியவிரோத போக்கை கையாள்வதுஏன் கலையரசரே ?

2010க்கு பின் தமிழரசுக்கட்சிக்குள்புகுந்த பலர் இனத்திற்காக தமது உயிர்களை துறந்த பல ஆயிரம் மாவீர ர்களின் பெயரால் தமிழ் மக்களின்வாக்குகளைப் பெற்றபின் தமிழ் இனத்திற்கும் ,மறைந்தமாவீரர்களுக்கும் செய்யும் பெரும் துரோகமே!

நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமின்றி

வஞ்சனை செய்வாரடிகிளியே

வாய்சொல்லில் வீரரடி!   பாரதி

-வள்ளுவன்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post