“கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியா இருந்தால் போதும்”!


கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியா இருந்தால் போதும்!



 யாழ் .மாநகரசபை முதல்வராக திருமதி மதிவதனி விவேகானந்தராஜாவையும் ,


 மட்டக்களப்பில் சிவம் பாக்கியநாதனையும் 


தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது.

இதற்கு யாழ்ப்பாணத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தவிடமும், கிழக்கில் ஹிஸ்புல்லாவிடமும் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை.

.ஏனெனில் காரைதீவு பிரதேசசபைத் தலைவராக ஏற்கெனவே இருந்த ஜெயசிறிலை ஏற்க  முஸ்லீம் காங்கிரஸ் தலைமை அனுமதி மறுக்கிறது என்று. தற்போது உள்ள பதில் நியமனங்களில் எதோ ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

ஒருவரது வீட்டுக்கு நாம் செல்வதென்றால் வீட்டுக்காரர்தான் சம்மதிக்க வேண்டும். பதிலாக வாசலில் நிற்கும்

ஏதோ ஒன்றுக்கு உங்களது மணம் பிடிக்கவில்லையாம் என்று சொல்வதைப் போலுள்ளது ஜெய சிறிலை நிராகரிப்பதற்கான காரணம்.

 இலங்கை ஒரு தீவுதான். ஆனால் வடக்கிலுள்ள தீவுகளுக்கு தனக்கு உடன்பாடில்லாத எவரும் செல்லமுடியாது என்பது பெரிய தோழர் டக்ளசின் தீர்மானம். அது போராளிகளாக இருந்தால் என்ன? நீதிபதியாக இருந்தால்

என்ன? இதேபோல மட்டக்களப்பில் தனக்கு உடன்பாடில்லாத நீதிபதியை தான் மாற்றி விட்டதாக ஹிஸ்புல்லா பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றினார். என்ன முன்னர் நீதிபதியை இடமாற்றினார். தற்போது காரைதீவுக்கு யார் தலைவராக வரவேண்டும் என்று தமிழரசின் பதில் பதவியினருக்கும் உத்தரவு இடுகிறார்.

ஹிஸ்புல்லா பெரிதா? ஜெயசிறில்  பெரிதா ? வாழ்க தமிழ்த்தேசியம்!

 அரசுக்கும்  புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அரசியல் பணிகளுக்காக சென்ற இரு போராளிகள் மிக மோசமாக .பி டி பி யினரால் தாக்கப்பட்டனர். "இந்த மண் எங்களின் சொந்த மண்; இதன் எல்லையை மீறியார் வந்தவன்?" என்று பாடாத குறை ஒன்றுதான். இது அப்பாத்தோழர் உத்தரவிடாமல் நடைபெற்றதா ?

 பதில் நீதிபதியாக இருந்த பொ.பூலோகசிங்கம் (அமரர்) தெரிவித்த தகவல் ஒன்றை தெரியப்படுத்துகிறோம். ஊர்காவற்துறையில் இரு இளைஞர்கள் .பி டி பி யினரால் பிடிக்கப்பட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். மிக மிகக் கிட்டிய தூரத்தில் (தலைக்கு நெருக்கமாக) இவர்கள் சுடப்பட்டதாகவைத்திய சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை ஏகநாதன் என்ற நீதிபதி விசாரித்து வந்தார். ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்ற இந்த விசாரணை தங்களுக்குப் பிடிக்காதமுறையில்  நடப்பதாக சினம் கொண்டனர் குட்டித் தோழர்கள். திரு ஏகநாதன் நீதிவானுக்கு உரிய அறையில் இருந்த போது அங்கு சென்று மிரட்டினர்.அங்கங்கே பொலீசார் நின்றனர்தான். ஆனால் நடைமுறையில் .பி.டி.பி தோழர்களுக்குரிய அதிகாரம் அவர்களுக்கில்லையே. சில தினங்களில் நீதிபதி ஏகநாதன் வடகிழக்குக்கு வெளியே உள்ள நீதிமன்றுக்கு மாற்றப்பட்டார்.

 தமது நிலைப்பாட்டுக்கு ஒத்துழைக்காத நீதிபதிகளையே மாற்றும் அதிகாரம் கொண்டவர்களாக விளங்கிய ஹிஸ்புல்லா, டக்ளஸ் ஆகியோர்தான் தற்போது தமிழரசுக் கட்சியின் முடிவை மாற்றும் வல்லமை உள்ளவர்களாகத் திகழ்கின்றனர். தாம் கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சியமைக்க உதவுங்கள்

என்று  கோரிக்கை விடுத்தது தமிழரசு. தற்போது 17 சபைகளிலும் ஆட்சி அமைப்போம் என தனது சொந்த வட்டாரமான குடத்தனையில் கட்சியை வெல்லவைக்க முடியாத சுமந்திரன் வீராவேசமாகச் சொல்கிறார்

என்றால் "சூளைமேடு புகழ்" டக்ளஸ் தன்னோடு இருக்கிறார் என்ற கர்வம் தான். ஸ்ரீதர் தியேட்டரை நோக்கி பதில் தலைவர் செல்ல முடியுமென்றால் சாணக்கியனின் முன்னாள் சகா அருண் தம்பிமுத்துவின் வீட்டில் இயங்கும் பிள்ளையான் கட்சியின் தலைமையகத்துக்கு செல்ல ஏன்  தயக்கம் ? என்ற குரல்கள் கிழக்கிலிருந்து எழுகின்றன. இரண்டுமே பிறரின் சொத்தில் இயங்கும் தலைமைப் பணிமனைகள்தானே? இரு கட்சிகளும் பலரைக் காணாமல் போகச் செய்தவைதானே?

இப்போது பிள்ளையான் கட்சியை நிராகரிக்கக் காரணம் கூறமுடியாது. அப்படியாகின் வடக்குக்கு ஒரு சட்டம் - கிழக்குக்கு ஒரு சட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எழுதப்படாத மரபாக தலைவர் ஒரு மாகாணத்தவராக இருந்தால் செயலர் மறு மாகாணத்தவராக இருப்பார் என்ற மரபை உடைத்தவர்களுக்கு, இதுவரை காலமும் தமிழரசு கட்சிக்குள் தேர்தலே நடந்ததில்லை,

கட்சியை நீதிமன்றில் நிறுத்தியதில்லை என்ற வரலாற்றை மாற்றியவர்களுக்கு கருணாவின் அழைப்புக்கு ஒரு பதிலை கண்டு பிடிக்க முடியாதா? எப்படியோ கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின் நிமிர்ந்து நின்ற கிழக்கு வாக்காளர்கள் முகநூல்கள் மூலம் வெளிப்படுத்தும் குறிப்புகள் இரண்டைத் தருகிறோம்.

 (01) “அண்ணன்!” உங்கள் நேர்காணல் நிகழ்வைப் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. ஆனால் நான் பிரதேசவாதம் பேசவும் இல்லை. எழுதவும் இல்லை. யாழ் மண்ணில் உள்ள கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் சந்தர்ப்பத்துக்கு ஒன்றுபடுவார்கள்.  ஒரு குடையின் கீழ் நிற்பார்கள்.பி.டி.பி உடன் ஒன்று பட்டது போல் வாவிக்கரை கட்சி யாழ் மண்ணில் இருந்திருந்தால் பேசி ஒன்றுபட்டிருப்பார்கள். இதில் சந்தேகமில்லை. அவர்களின் கட்சி நடவடிக்கைகள் வேறு. மட்டு மண்ணில் தான் தமிழ்த் தேசியக் கட்சி என்று பார்ப்பதும் மாற்று கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் என்று ஒதுங்கி நிற்பதும் வழக்கமாக உள்ளது. இதைத் தலைமைகள் தான் கவனிக்க வேண்டும்.

 (02) “கிழக்கில் ஒரு அரசியல் கட்சி தலைமை உருவாகுவதை அவர்கள் அன்று முதல் இன்று வரை விரும்புகிறார்கள் இல்லை என்பதே கசப்பான உண்மை. வடக்கில் பல கட்சிகள் பல பிரிவுகள். அதனை

இங்கு திணிப்பதே அவர்களின் நோக்கம்.

                                                                     *** 

இறுதிப்போரில் நிகழ்ந்தது இனப் படுகொலையே என வடக்கு மாகாண சபையில் தீர்மானம்

நிறைவேற்றப்பட்டது. இது ஏகமனதாக நிறைவேற அவைத் தலைவர் பங்களித்தார் என்பதையும்

சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இதனால் சீற்றமடைந்த  சுமந்திரன் வடக்கு முதல்வருக்கு எதிராக

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஏற்பாடு செய்தார். பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறிய

இத் தீர்மானத்தை ஆளுனரிடம் அவைத்தலைவர் கையளித்தார்.  இம் முடிவு கட்சியின் பெருந் தலைவர் சம்பந்தன் ஐயாவின் ஒப்புதல் இல்லாமலேயே எடுக்கப்பட்டது. சம்பந்தன் ஐயாவின் முடிவின் பிரகாரம் அவைத்தலைவரை அழைத்த ஆளுநர்முதலமைச்சருக்கான நியமனம்"எனக் கிண்டலாகக் கூறிவிட்டு இவர்

கையளித்த ஆவணத்தை இவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் எனப் பரவலாக செய்திகள் உலாவின.இத் தீர்மானத்தை ஆளுனரிடம் இவர் ஏற்கனவே கையளித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பியபோதுஎனது

கையில் இதனைத் திணித்து விட்டார்கள்" என்று தான் ஒரு அப்பாவி என நிரூபிக்க முயன்று தோற்றுப்

போனார். ன்றும் அவைத்தலைவராக நடுநிலையாக இருக்கத் தவறி ஒரு தபால் சேவகர் போல நடந்தவருக்கு

பில் கேட்ஸின் கூற்றைச் சுட்டிக் காட்டுகிறோம்.

இக் கூற்றை சி. வி .கே இதுவரை படிக்க வில்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சுமந்திரனோ கவுண்டமணி பாணியில்கோழி குருடா இருந்தால் என்ன? குழம்பு ருசியாக இருந்தால்

போதும்" என ஸ்ரீதர் தியேட்டருக்கு அனுப்பி வைக்கிறார். டக்ளஸ் தரும் குழம்பு அவருக்கு சுவையாகத்தான் இருக்கும். மாகாணசபைத் தீர்மானம், தலைவர் தேர்தல்  என்பனவற்றில் தனது தகுதி நிலையை யோசிக்காமல் குருட்டுக் கோழியாக இருந்தவர் நிலைதான் கவலைக்கிடம்.

எப்போதோ தேர்தலில் தோற்று அரசியலை விட்டுப் போக இருந்த சுமந்திரனைபாலா அண்ணாருக்கு

நிகரானவர்" எனப் புகழ்ந்து தூக்கி விட்டவரை அவர் என்ன பாடு படுத்தினார் என்ற வரலாற்றை திரும்பிப்பார்த்திருந்தால் அல்லது பில்கேட்ஸின் வார்த்தைகளை படித்திருந்தால் இப்படிக் குழம்புக்குப் போகும்


கோழியின் நிலை வந்திருக்காது.

வடக்கில் ஒரு முச்சக்கரவண்டியின் பின்னால் எழுதியிருந்த குறிப்பு எனது கவனத்தை ஈர்த்தது

-சங்கர்

 



0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post