மீண்டும் ஒரு பிறப்பெடுத்து வாருங்கள் அப்பா!

ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் வீரகாவியமானமாவீரர்களில் ஒருவரான கேணல். நாகேஷ் (அமலதாஸ்) மட்டக்களப்பு அவர்களின்16 வது ஆண்டு நினைவாக அவருடைய  பிள்ளைகள் எழுதிய மடல்.

05.04.2009 காலங்கள் இன்று கருகியே போகிறது

ஆண்டுகள் பதினாறு    கடந்தும்,

ஆறாத்  துயரோடு நாம் இங்கு வாழ்கிறோம்.

அப்பா என்று அழைக்க யாரும் இல்லாமல் உங்கள்

ஆசைமகள்கள்

தவிக்கிறோம்.

சிறுவயதில் நீங்கள்

செய்தவற்றை

அம்மா சொல்லக் கேட்கும் போது

ஆசையாக உள்ளதப்பா!

யாருக்காக உங்கள்

வாழ்வை அர்ப்பணித்தீர்களோ,

களங்கமறியா தலைவர்

மாமாவின் வழியில்

சென்றீர்களோ - இன்று

எல்லாம் துரோகத்தின்

உச்சத்தில்

துவண்டு போய் உள்ளதப்பா!

எமக்காக வாழாமல்

தமிழீழ மண்ணுக்காய்

சரித்திரமான

உங்கள் கனவுகளை

சுமந்து

இருட்டான பாதையில்

ஒளியேற்ற

தலைவர் மாமாவோடும்

உங்கள் சக  நண்பர்களுடனும்

மீண்டும் ஒரு பிறப்பெடுத்து வாருங்கள் அப்பா!

உதயமாகும் தமிழீழ

மண்ணில் உங்கள் கரங்கள் பற்றி

ஓடியாடி விளையாடி

உங்கள் அன்பை பாசத்தை மீண்டும்

மீண்டும் அனுபவிக்க

ஏங்குதப்பா எம் உள்ளங்கள் .

அம்மா சொல்லும் உங்கள் கதைகளை

கண்களில் வியப்பு  மின்ன கேட்டு

வளர்ந்தவர்கள் நாங்கள்.

உயரிய இலட்சிய  கனவுக்காய்

வீரமரணமடைந்த

உங்கள் வீரவரலாறு

எங்கள் வழிகாட்டி அப்பா!

காலங்கள் மாறலாம்

நேரங்கள் மாறலாம்

அழியாத சரித்திர

நாயகர்களாய்

உங்கள் வீர வரலாறுகள்

மீண்டும் மீண்டும்

பிறப்பெடுக்கும்

வரலாற்றின் சாட்சிகளாய்!

வாழ்கின்ற  நாங்கள்

உங்கள் கனவுகள்

சுமந்தபடி தடம் மாறாமல்

பயணிப்போம்

என்றோ ஒருநாள்

எமக்காக விடியும்

என்ற நம்பிக்கையில்.

 

நன்றி   உங்கள்  பிள்ளைகள் தேனுஜா, துவா


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post