-மட்டுநேசன்உதிரத்தாலும், உயிராலும், உழைப்பாலும், இனத்துக்காக அடுத்த சந்ததிக்கான விடியலுக்காக தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்கள் மாவீரர்கள். தனியே தமிழராகப் பிறந்து விட்டவர்கள்தான் என்றில்லாமல் இலங்கையில் உள்ள நான்கு இனத்தவர்களின் ஈகமும் இந்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுள்ளன.
இந்த
விடயத்தை வாக்குப் பொறுக்கிகளான அரசியல் கட்சிகளுக்குப் பூடகமாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டினாலும் இந்த உன்னதத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திமிர்த்தனமாக நடந்து கொள்கின்றன. மேலும் பிரதேசவாதத்தைக் கிளப்பி அதனால், கிடைக்கும் பலனை சிங்கள பெருந்தேசியவாதத்துக்கு
உரமாக்கும் ஒரு பகுதியினரும் உண்டு.
தம்மைப் புத்திஜீவிகள் என்று கருதிக்கொள்ளும் ஒரு கூட்டமும் மாவீரர்களின் ஈகங்களைப் புரிந்துகொள்ளாத மாதிரி நடிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை இதன் முதல் மாவீரர் லெப். சங்கர் (செல்வச்சந்திரன் சத்தியநாதன்)
ஒட்டுமொத்த மாவீரர்களில் முதலாவதாக உரும்பிராயைச் சேர்ந்த பொன்னுத்துரை சிவகுமாரின் பெயரை வரலாறு பதிந்துகொண்டது. மாவீரர்
பட்டியலில் இவரின் பெயர் உண்டு.
புலிகளைத் தவிர, குட்டிமணி, தங்கத்துரை தலைமையிலான 10 பேரின் பெயர்களும் ஈரோஸை சேர்ந்த 266 போராளிகளின் விவரமும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தவறுதலான
புரிதல் காரணமாக உயிரை இழந்த ரெலி இயக்கத் தலைவரின் (கணேசானந்தன் ஜெகநாதன் - ஜெகன்) பெயரும் இதில் உள்ளடக்கம்.
இனங்கள் என்று நோக்குகையில் பறங்கி இனத்தவர்களில்
வெள்ளை என்ற இயக்கப் பெயரைக் கொண்ட இருதயபுரம், மட்டக்களப்பைச் சேர்ந்த பேனாட் எட்வேட் ஸ்ரக் என்பவரது பெயரையே வரலாறு முதலில் பதிந்து கொண்டது. நல்லூர் கோவில் வீதியில் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாக நாம் இவரை இழக்க நேர்ந்தது.
இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த ஓட்டமாவடியை சேர்ந்த ஜூனைதீன் எமது போராட்டத்தில் தோன்றிய 36 இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை நாகங்களின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார். படையினரின் தேடுதல் காரணமாக புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டோரில் இவரும் ஒருவர். வடக்கில் நடைபெற்ற பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் பங்குபற்றி தமது ஆற்றலை வெளிப்படுத்தியவர். ஓவியம் வரையும் ஆற்றலும் இவருக்குண்டு. அதன்மூலம் தலைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
ஆயித்தமலையில்
ஜோசப் என்ற போராளியுடன் மோட்டார்
சைக்கிளில் பயணிக்கும்போது பாரவூர்தி ஒன்றின் மறைவில் பதுங்கியிருந்த ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தியோபிலஸ் தலைமையிலான குழுவினரால் வீழ்த்தப்பட்டு கைது செய்யப்பட்டவர். கொழும்பில்
விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டபோது தப்பியோடும் முயற்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இவருடன் கைதான ஜோசப்பும் இச்சம்பவத்தில் உயிரிழந்தார் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
சிங்கள
இனத்தைச் சேர்ந்தோரில் தாயோ, தந்தையோ தமிழராக இருந்தோரே மாவீரர்களாகியுள்ளனர். அதிலும் மூன்று மாவீரர்களின் அன்னையாரின் குடும்ப வறுமையையேனும் அறிந்துகொள்ளாதவர்களாக அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இருந்துள்ளனர்.
அதைவிட மோசமானது. அந்த ஈகத்தின் பெறுமதியை
கடந்த மாவீரர் நாள்வரை உணர்ந்துகொள்ளாமலிருந்தது. குறைந்தபட்சம் மாவீரரின் பெற்றோர் அவமானப்படுத்தப்படாமலிருக்க வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு அவர்களுக்குப் புரியும்
மொழியில் யாராவது விளக்கினால் அது மாவீரர்களின் தியாகங்களுக்குச்
செய்யும் பெரும் பங்களிப்பாகும்.
இவ்வாறான கோளாறு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் இரண்டிலுமே உண்டு. எதிர்காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மாவீரர் பெற்றோர் கௌரவிப்புகளை தமது அரசியல் எதிரிகளைச் சாடும் களமாக மாற்ற வேண்டாமென பணிவன்புடன் வேண்டுகிறோம்.
(திலீபன்
நாள் தொடர்பான நிகழ்வுகள் உட்பட) மாவீரர் பெற்றோரை கட்சிகள் வழிநடத்தியது போதும். இன உறவை மேம்படுத்த
முஸ்லிம் தரப்புகள் விடுத்த வேண்டுகோளை புறந்தள்ளியது மட்டுமல்லாது இந்த வேண்டுகோளை தெரியப்படுத்திய
மத்தியகுழு உறுப்பினரையே ஒதுக்கிய கட்சியொன்றும் உண்டு. ஒப்பந்தகாரர்கள், முதலாளிகள் நிதியுதவி செய்தால் மட்டும் போதும். தீர்மானிக்க வேண்டாம்.
இனிமேலாவது மாவீரரின் உறவுகள் நாட்டுப்பற்றாளரின் சொந்தங்கள் காட்டும் வழியில் கட்சிகள் பயணிக்கட்டும். இதுவரை காலமும் தங்கள் கண்களை கட்டிக்கொண்ட கட்சிகளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவர்களை உங்கள் வழியில் கொண்டு செல்ல முயற்சியுங்கள் உறவுகளே! அது மாவீரர் நாளென்றாலும்
சரி; திலீபன் நினைவேந்தல் என்றாலும் சரி.
சிங்கள இன மாவீரர்களில் முதலாமவர் லெப்டின்ட் பழசு (முதுங்கொடுவ உடுகமகே ஹேமசிறி) 13.02.1985 அன்று நடைபெற்ற கொக்குளாய் இராணுவம் முகாம் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். கேணல் கிட்டுவின் அரசியல் இராஜதந்திரத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுதலையான
காமினி (காமினி பேபியன் அன்ஸ்டீன்) பின்னர், மட்டக்களப்பில் தனது விடுதலைப் பணியைத் தொடர்ந்தார். அங்கு 04.05.1987 அன்று வந்தாறு மூலையில் நடைபெற்ற சிறீ லங்கா சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைந்தார்.
சிங்கள இனத்தவர்களில் லெப். கேணல் நிலையில் உள்ள போராளியும் வீரச்சாவடைந்துள்ளார். மாட்டின் சில்வான என்பவரின் மகனான ஜெயச்சந்திரன் என்பவரே 15.09.2007இல் தவறுதலான வெடி விபத்தில் வீரச்சாவடைந்தார்.
சுதுமலையில் உலங்குவானூர்தி மூலம் தரையிறக்கப்பட்ட படையினர் புலிகள் முகாமை சுற்றிவளைக்க முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்த
யாழ்ப்பாணத்திலிருந்த கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) தலைமையிலான புலிகள் அணியினர் கையில் ஆயுதத்துடன் ஓடியே சுதுமலை நோக்கிச் சென்றனர். ஆனால், கிட்டு தலைமையில் இந்த முற்றுகை வெற்றிகரமாக
முறியடிக்கப்பட்டது. இந்த முற்றுகையின்போதே மேஜர்
அல்பேட் வீரச்சாவடைந்தார். இயக்கத்தின் நிதி மற்றும் ஆயுதங்களுக்கு
பொறுப்பானவர் இவர். இறுதிக்கட்டத்தில்
ரெலோ குழுவினரும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் போராளிகளும் சுதுமலையைச் சென்றடைந்தபோது ஏறக்குறைய முற்றுகை முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆயினும்
யாழ்ப்பாணத்திலிருந்து ரைபிள்களுடன் ஓடியே வந்திருக்கிறார்கள் என்ற விடயம் கிட்டுவுக்கு
நெகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது.
முஸ்லிம் மாவீரர்களில் மூவர் லெப். கேணல் நிலையில் விளங்கியவர்களாவர். இவர்களில் ஒருவர் கடற்புலிகள் அணியைச் சேர்ந்தவராவார்.
முல்லைமகள் என்றழைக்கப்படும் இவரது இயற்பெயர் ஜெரினா முகைதீன் ஆகும். 50 வீட்டுத்திட்டம், களப்பாடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இவர் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாளன்று பருத்தித்துறை கடலில் நடந்த மோதலில் வீரச்சாவடைந்தார்.
மாவீரர்
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் களத்தில் காயமடைந்த சந்தர்ப்பங்களில் இவர் எந்த சமயம்,
எந்த இனம் என்றெல்லாம் சிந்திக்காமல்தான்
கூட இருந்தவர்கள் தூக்கிச்சென்று சிகிச்சைபெற வைத்தார்கள். மேலாக சிகிச்சையின்போது இரத்தம் தேவைப்படுமிடத்து காயமடைந்தவர் உயிர் பிழைக்க வேண்டுமென்று நினைத்துத்தான் ஏனையோர் இரத்தம் வழங்கினர். அவர்களுக்கு இருந்த விடுதலை உணர்வுதான் உங்களுக்கும் இருக்கிறது என நாம் உறுதியாக
நம்புகிறோம். எனவே, அரசியல்வாதிகளாலும் அவர்களின் கீழ் செயல்படும் ஒப்பந்தகாரர்களாலும்
மேற்கொள்ளப்படும் வடிகட்டல் செயல்பாடுகளை நிறுத்துமாறு கோரும் கடமை உங்களுக்கும் உண்டு.
இதனை மேற்கொள்வீர்களாயின் உங்களின் பிள்ளைகளின் ஆன்மா நிச்சயம் உங்களை வாழ்த்தும். மூன்று மாவீரர்களின் தாயாரான அந்த சிங்கள அன்னைக்கு
நிகழ்ந்த அவமதிப்புபோல இனி எக்காலத்திலும் நிகழாதவாறு
பார்த்துக் கொள்வது எம் அனைவரின் கடமை.
பெரும்பான்மையினராக
இருப்போரின் முடிவுகள்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என நினைப்போமாக இருந்தால்,
சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறலையும் முடிவுகளையும் நாம் அங்கீகரிப்பதாக அர்த்தப்படும்.
காரணம் எதுவாக இருந்தாலும் கைதிகள் பரிமாற்றத்தின்போது கிட்டு நடந்துகொண்ட முன்மாதிரியான செயல்பாட்டைக் கருத்தில் கொள்வோம்.
தமிழீழ விடுதலை புலிகளின் முஸ்லிம் மாவீரர் பட்டியல்
01. லெப்.
ஜோன்சன் (ஜூனைதீன்)
ஓட்டமாவடி,
மட்டக்களப்பு
பிறப்பு
- 22.08.1963 வீரச்சாவு-
30.11.1985
02. வீரவேங்கை
ரகீம் வீரச்சாவு- 08.05.1986
03. வீரவேங்கை
உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்)
யாழ்ப்பாணம்.
பிறப்பு - 10.05.1966 வீரச்சாவு - 25.08.1986
04. வீரவேங்கை
நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்)
மூதூர்,
திருகோணமலை பிறப்பு - 05.07.1964
வீரச்சாவு-
25.07.1986
05. வீரவேங்கை
லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப்)
காத்தான்குடி,
மட்டக்களப்பு. பிறப்பு - 16.11.1962 வீரச்சாவு - 24.12.1986
06. கப்டன்
பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா)அக்கரைப்பற்று, அம்பாறை. பிறப்பு - 12.06.1959 வீரச்சாவு - 07.01.1987
07. கப்டன்
குட்டி அல்லது தினேஷ் (முகமது அலிபா முகமது ஹசன்)
பேராறு,
கந்தளாய், திருகோணமலை. வீரச்சாவு - 28.04.1987
08. வீரவேங்கை
பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி
காதம்பவா)
அக்கரைப்பற்று,
அம்பாறை. பிறப்பு - 16.10.1963வீரச்சாவு - 07.06.1987
09. வீரவேங்கை
சலீம் வீரச்சாவு - 03.07.1987
10. வீரவேங்கை
மருதீன் அல்லது முகமது (சந்திரயோகு மருத்தீன்)
உயிர்த்தராசன்குளம்,
மன்னார் பிறப்பு - 25.10.1965 வீரச்சாவு - 15.10.1987
11. வீரவேங்கை
நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு.
பிறப்பு
- 15.03.1963 வீரச்சாவு
- 30.12.1987
12. வீரவேங்கை
கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை.வீரச்சாவு -27.04.1988
13. வீரவேங்கை
சாபீர்(சரிபுதீன் முகமது சாபீர்)தியாவெட்டுவான், மட்டக்களப்பு.வீரச்சாவு - 13.05.1988
14. வீரவேங்கை நகுலன்(ஜுனைதீன்)அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. வீரச்சாவு - 26.06.1988
15. வீரவேங்கை
அகஸ்ரின்(சம்சுதீன் அபுல்கசன்)அக்கரைப்பற்று, அம்பாறை.
பிறப்பு
- 15.08.1971வீரச்சாவு-
27.10.1988
16. வீரவேங்கை
குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு-
26.11.1988
17. வீரவேங்கை
நசீர் (சம்சுதீன் நசீர்)ஒலுவில், அம்பாறை.பிறப்பு - 19.02.1960வீரச்சாவு- 17.02.1989
18. வீரவேங்கை
கசாலி (சேகு முகமது சகாப்தீன்)ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலைவீரச்சாவு-
23.05.1989
19. வீரவேங்கை
பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. பிறப்பு - 08.01.1973 வீரச்சாவு- 22.06.1989
20. வீரவேங்கை
ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. பிறப்பு - 28.03.1968வீரச்சாவு - 05.08.1989
21. வீரவேங்கை
ஹசன் (ஆதம்பாவா ஹசன்) மூதூர், திருகோணமலை.
வீரச்சாவு
- 05.11.1989
22) வீரவேங்கை
அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை.
வீரச்சாவு
- 06.12.1989
23) வீரவேங்கை
சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை.
பிறப்பு
- 18.08.1972 வீரச்சாவு - 06.12.1989
24. வீரவேங்கை
ஆதம் எஸ்.எம். ஆதம்பாவா)
சாய்ந்தமருது, அம்பாறை.
பிறப்பு
- 21.12.1967 வீரச்சாவு- 03.01.1990
25. 2ஆம்
லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்)
நிலாவெளி,
திருகோணமலை. பிறப்பு - 17.05.1972வீரச்சாவு - 06.02.1990
26. வீரவேங்கை
அலெக்ஸ் (அகமது றியாஸ்)மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு.பிறப்பு - 23.01.1970 வீரச்சாவு - 04.05.1990
26. வீரவேங்கை சந்தர் அல்லது சுந்தர்(அகமது லெப்பை செப்லாதீன்)
வேப்பானைச்சேனை,
அம்பாறை.பிறப்பு - 25.02.1973வீரச்சாவு- 25.05.1990
27. வீரவேங்கை கமால்மட்டக்களப்பு வீரச்சாவு- 07.06.1990
28. வீரவேங்கை பர்ஸாத்செட்டிக்குளம், வவுனியாவீரச்சாவு- 10.06.1990
29. வீரவேங்கை
கபூர் (முகமது அலியார் முகமது சலீம்)காங்கேயனோடை, மட்டக்களப்பு. வீரச்சாவு - 11.06.1990
30. வீரவேங்கை
தாகீர்(முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலநறுவை.பிறப்பு - 29.04.1972 வீரச்சாவு- 11.06.1990
31. வீரவேங்கை
அன்வர் வீரச்சாவு - 15.06.1990
32. வீரவேங்கை
குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை.வீரச்சாவு-
15.06.1990
33. வீரவேங்கை
தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு - 12.06.1990
34. லெப்.
ஜெமில் (கரீம் முஸ்தபா)ஓட்டமாவடி, மட்டக்களப்பு.வீரச்சாவு -12.06.1990
35. வீரவேங்கை
ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ஆம் வட்டாரம், மீராவோடை,
வாழைச்சேனை, மட்டக்களப்பு.பிறப்பு - 05.03.1974 வீரச்சாவு- 13.06.1990
36. வீரவேங்கை
தர்சன் (அப்துல்காதர்
சம்சி) வீரச்சாவு - 13.06.1990
37. வீரவேங்கை
அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. வீரச்சாவு- 14.06.1990
38. வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. வீரச்சாவு- 14.06.1990
39. வீரவேங்கை
ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு - 15.06.1990
40. வீரவேங்கை
பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா பிறப்பு - 04.05.1969 வீரச்சாவு-
15.06.1990
41. வீரவேங்கை
ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. பிறப்பு - 08.04.1972 வீரச்சாவு- 15.06.1990
42. வீரவேங்கை
இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. வீரச்சாவு- 16.06.1990
43. வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. வீரச்சாவு- 17.06.1990
44. வீரவேங்கை
மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. வீரச்சாவு- 18.06.1990
45. வீரவேங்கை
ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு.
பிறப்பு
- 20.10.1970 வீரச்சாவு-
19.06.1990
46. வீரவேங்கை
டானியல் (ஹனீபா
முகமது ராசீக்)
திருகோணமலை.பிறப்பு - 23.06.1970 வீரச்சாவு
- 22.06.1990
47. வீரவேங்கை
டானியல் (ஹனீபா முகமது ராசீக்) திருகோணமலை. பிறப்பு - 23.06.1970 வீரச்சாவு- 22.06.1990
48. வீரவேங்கை
கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு- 15.07.1990
49. வீரவேங்கை
நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை.
பிறப்பு
- பிறப்பு - 19.01.1972
வீரச்சாவு- 27.07.1990
50. வீரவேங்கை
ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்)ஏறாவூர், மட்டக்களப்பு. வீரச்சாவு - 01.09.1990
51. லெப்.
ராஜிவ் அல்லது ரகீம் அல்லது நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா வீரச்சாவு - 15.09.1990
52. லெப்
அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா பிறப்பு -14.05.1975
வீரச்சாவு
- 05.11.1995
53. கப்டன்
நசீர் சாளம்பைக்குளம், வவுனியா வீரச்சாவு - நவம்பர் 1990
54. லெப்.
ஈழநாதன் அல்லது ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்)
ஒட்டறுத்தகுளம்,
வவுனிக்குளம், முல்லைத்தீவு பிறப்பு- 01.10.1978 வீரச்சாவு
- 07.04.1998
55. வீரவேங்கை
வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம்.பிறப்பு - 06.05.1978 வீரச்சாவு- 26.06.1999
56. வீரவேங்கை
தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு பிறப்பு - 01.01.1983 வீரச்சாவு- 19.10.2000
57. வீரவேங்கை
ரவீஸ் இராமநாதபுரம், கிளிநொச்சி. வீரச்சாவு - 08.08.2006
58. வீரவேங்கை
கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் வீரச்சாவு- 19.03.2007
59. லெப்
கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா)
50 வீட்டுத்திட்டம்,
கள்ளப்பாடு, முல்லைத்தீவு. வீரச்சாவு - 19.06.2007
60. லெப்
கேணல் மாறன் அல்லது குன்றத்தேவன்
(காதர்முகைதீன்
நஜீம்கான்) முல்லைத்தீவு வீரச்சாவு- 29.09.2008 (இவர்
லெப். ஈழநாதன் அல்லது ஈழமாறன் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது)
61. லெப்.
கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு. வீரச்சாவு - 02.04.2009
62. வீரவேங்கை
அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை)
63. வீரவேங்கை
அசீம் அஷாத்
1.லெப்டினன்ட்
பழசு முதுங்கொடுவ உடுகமகே ஹேமசிறி
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம் பிறப்பு - 10.10.1963வீரச்சாவு - 13.02.1985
பிறப்பு
- 18.07.1968 வீரச்சாவு
- 04.05.1987
3.லெப்.
கேணல் பவமாறன் மார்ட்டின் சில்வா ஜெயச்சந்திரன்மட்டக்களப்பு வீரச்சாவு - 15.09.2007
4.
துணைப்படை கப்டன் றட்ணம் குஞ்சுபண்டா றணசிங்கா திருகோணமலை வீரப்பிறப்பு: வீரச்சாவு: 04.10.1999 வீரச்சாவடைந்த மாவட்டம்: திருகோணமலை வீரச்சாவு நிகழ்வு விபரம்: மூதூர் மல்லிகைத்தீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
2ஆம்
லெப்டினன்ட் வெள்ளை பேனாட் எட்வேட்ஸ்ரக் இருதயபுரம மட்டக்களப்பு பிறப்பு - 20.02.1964 வீரச்சாவு - 23.02.1985
2. 2ம்
லெப்டினன்ட் சபேசன் (அன்ரன் குரன்ஸ் ஆரன்ஸ்)
மூதூர்,திருகோணமலை பிறப்பு: 29.09.1966வீரச்சாவு: 26.04.1987
3. லெப்டினன்ட்
கில்பேட் (குவாநாட் கொன்ஸ்ரன் ரைன்ஸ்)
சாம்பல்தீவ திருகோணமலைவீரப்பிறப்பு:19.04.1967 வீரச்சாவு:
06.02.1990
Post a Comment