எம் இன மக்களின் விடுதலைக்காக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீர் ஆகாரம் இன்றி உண்ணாநோன்பிரிந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 வது நினைவு தினம் சுவிஸ் நாட்டில் இரு நகரங்களில் நடைபெற்றன.சுவிஸ் தலைநகரமான பேரன் (Bern) சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்பு குழுவினராலும் ,
Zürich நகரில் சுவிஸ்சில் பிறந்து வளர்ந்த இளையோரின் அமைப்பான "அக்கினிப்பறவைகள்" அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தன.
இதே
நாளில் ஆழ ஊடுருவும் படையினரின்
கண்ணி வெடித்தாக்குதலில் வீரச் தழுவிக்கொண்ட தமிழீழ விமானப்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் (வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்)அவர்களுக்கும்
இரு நிகழ்வுகளிலும் வீரவணக்கம்செலுத்தப்பட்டது .
அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் நிகழ்வில் அண்மையில் லண்டனில் வெளியீடு செய்யப்பட்ட "நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்" நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
அறிமுக உரையை நூல் ஆசிரியர் நிலா தமிழ் ஆற்றினார்.
Post a Comment