கலைஞனே இசைக் கலைஞனே ஈழத்துப் பாடகனே.
போர்க்
காலத்துக் கலைஞனே
புகழ்
கொண்ட கலைஞனே.
சாகாவரம்
பெற்ற சரித்திரத்தில் இடம் பெற்ற கீதத்தின்
குரலே.
போரில்
உரிமைப் போரில் உயிர் நீத்த உத்தமருக்காக பாடிய
உதடுகளே.
உனக்காக
பாடும் நிலை உன் இளம்
வயதில் இது என்ன நிலை
உண்மையா பொய்யா?
கொள்ளை
நோய் கூட்டிப்போக வந்து தொல்லை கொடுத்து கொண்டிருக்க
துயரோடு
போனாயோ.
நீ மீட்டிய இசைக் கருவிகள் சோகமாய் மொனராகம் இசைக்கிறது.
யார்
காதுக்கும் கேட்காமல்.
பாட்டை
தொழிலாக பயிற்றுவித்தலை பணியாக நேற்றுவரை
நிகழச்சி
நிரலிட்டு நீ நடத்தி வந்தாயே.
கூட்டை
விட்டு குடி பெயர்ந்த ஆத்மா
நோட்டம் விட்டு உனது நுண்கலைகளை தானும்
ஜாசிக்கும்.
மீண்டும்
வா இசைக்கலையை இனியும் தொடர பிறப்பெடு இன
உணர்வோடு.
இதுவரை
வாழ்ந்தவனே இன்றுபோல் என்றும் வாழ்வாய் இசையுள்ள வரை மாவீரர்கள் நினைவுள்ளவரை.
நான்
விதியை நோவதில்லை சதியை நொந்து கொள்வேன்
அனீதி
என்பதால்.
மடமை நிறைந்த உலகு மாந்தர் வாழ்வை நிரந்தரம் என்றே நினைக்கிறது விடை பெற்றாகவேண்டும்.
இருக்கும் வரை எதற்கும் உதவாதவராயல்லாமல் படைக்கவல்ல ஒருவனாய் படைத்த உன் பாடல்களாய் வாழ்ந்திரு.
புதுவைதாசன்.
(ம.முல்லைமதி)
Post a Comment