பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கான கூட்டம் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தலைமையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
அநுராதபுர
சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியற்
கைதிகளை முழந்தாலிட வைத்து தலையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து சுட போவதாக அச்சுறுத்திய இந்த
லொகான் ரத்வத்தை அவர் வகித்த இராஜாங்க
அமைச்சர் பதவியினையும் இராஜினாமா செய்திருந்தார்.
லொகான் ரத்வத்தை
மேற்கொண்ட அடாவடிகள்
தொடர்பாக பாராளுமன்றத்தில் நீதியமைச்சர்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் . எனினும் அச் சம்பவத்தை நியாயப்படுத்தும்
விதமாகவே இதுவரை லோகன் ரத்வத்தை கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்.
தமிழ்
கைதிகளை சுட ச் சென்ற
ஒருவரை மட்டக்களப்பிற்கு அழைத்து முதல் மரியாதை வழங்கியவர்கள் யார்?
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் அமைப்பாளர் சந்திரகுமார் அத்துடன் த.ம.வி.பு கட்சி பிரமுகர்கள் இந்த நிகழ்விற்கு காரணம். தங்கள் உயிர்களை துச்சமென நினைத்து எமக்காக இழக்க சென்றவர்களின் நெற்றியில் துப்பாக்கி வைத்தவரை மட்டக்களப்பில் கொண்டுவந்து செங்கம்பள வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
Post a Comment