முதன்முறை சந்தித்தேன். இந்தத் துடிப்பான இளைஞர் பற்றிய எனது பார்வையை, அவர் எழுச்சியில் ஆர்வம் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
ஏழு தசாப்தங்களுக்கு மேலான தமிழ் அரசுக் கட்சியுடன் பின்னிப்பிணைந்த எனது நீண்ட வரலாற்றில், குறுகிய காலத்தில் எழுச்சி கண்ட வரலாற்றுக் கதாநாயகனாக திரு. சாணக்கியனைப் பார்க்கின்றேன். 90ஆம் ஆண்டுபிறந்த இந்த இளைஞர் சாணக்கியன் வருகையின் பின்னர்தான், மட்டக்களப்பு மாவட்டத்தில் சோர்ந்திருந்த தமிழ் அரசுக் கட்சி துள்ளி எழுந்து செயற்படுவதைக் காண்கின்றேன்.சாணக்கியனின் தாத்தா அமரர் எஸ்.எம். இராசமாணிக்கம் அவர்களின் பின்னரான காலகட்டத்தில், ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லாது, வித்துவ வரட்சியில் கண்ணீர் சொரிந்த மட்டக்களப்பு மாவட்டம், சாணக்கியனின் வருகையின் பின்னர் மறுமலர்ச்சி பெற்று, புதுத்தென்பு பெற்று ஏறுநடைபோடுவதைப் பார்க்கின்றேன்.கிலிதென் இலங்கைப் பெரும்பான்மைச் சமூகம் சாணக்கியனின் அதிரடியான செயற்பாடுகளைப் பார்த்துக் கிலி பிடித்து உளறுவதைக் கேளுங்கள். “வெள்ளவாயாவில் கொல்லப்பட்ட நீர்கொழும்பு அமைச்சர் பெர்னான்டோபுள்ளே போல, மும்மொழிகளிலும் சரளமாய் உரை நிகழ்த்துகின்றான். செயல் திறனில், “மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்” என்று உரைத்த சேகுவேரா போல வேகமாய் செயற்படுகின்றான். பயங்கர புரட்சிக்காரனாய் தொழிற்பட்டு மிரட்டுகின்றான். சோ் பொன் இராமநாதனின் இணக்க அரசியல், அமிர்தலிங்கத்தின் சாத்வீகம், பிரபாகரனின் ஆயுதம் தவிர்ந்த புதிய பாதையில் பிரயாணித்து, பிராந்திய இந்திய வல்லரசு, மேற்குலக வல்லரசுகளின் உதவியுடன் வென்றிடுவான்” என்று கிலேசம் பிடித்து ஆவேசம் கொள்கின்றது.சாதனைகள் தமிழர் நலனுக்குக் கேடு என்றால், மின்னல் வேகத்தில் சாணக்கியன் புரட்சி வீரனைப்போல களத்தில் நிற்பதைக் காண்கின்றேன். சாணக்கியன் ஒரு குரல்கொடுத்தால், மட்டக்களப்பில் மட்டுமல்ல வடக்கில் யாழ்ப்பாணம் வன்னியிலும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பாய்ந்து பாய்ந்து வந்து களத்தில் நிற்பதைக் காண்கின்றேன். தன்னம்தனியனாக தமிழர்நலம் சார்ந்த பல அரசு எதிர்ப்பு நிகழ்வுகளை, மட்டக்களப்பில் மட்டுமல்லாது, மட்டக்களப்புக்கு வெளியேயும் முன்னெடுத்து வருகின்றார்.சாணக்கியனின் தனித்துவமான பிரமிக்கவைக்கும் சாதனைகள் எனக்குப் பெரு மகிழ்ச்சி தருகின்றன. அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம். அவற்றில் மாதிரிக்கு இரண்டு சாதனைகளை வெகு சுருக்கமாய் தருகின்றேன் படகுப் படையெடுப்பு மீனவ சமூகத்தின் நன்மைக்காக, றோலர் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி முன்னெடுத்த போராட்டம். கிழமைக்கு 1500 இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள்வரை, இலங்கை வடகடலோர கடலுக்குள் புகுந்து, மீன் வளத்தைக் கொள்ளை அடித்தன. அதற்கு எதிராகச் சாணக்கியன் முன்னெடுத்த, பல நூற்றுக்கணக்கான படகுகளின் படையெடுப்பு பயனளித்துள்ளது .பொத்துவில்-பொலிகண்டி பேரணி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபயணம் - தடைவிதித்த பல நீதிமன்றக் கட்டளைகளையும் மீறி, பல இராணுவ முகாம்களின் அச்சுறுத்தும் தடைகளையும் தாண்டி - வெற்றியுடன் நிறைவேறிய நடைபயணம். அது முழு இலங்கையும் திகைப்புடன் சாணக்கியனை ஆவென்று வாய்பிளந்து நின்று பார்க்க வைத்தது.ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட நடைபவனியில் பல்வேறு மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், முஸ்லீம்கள், சமூக தாபனங்கள் பங்குபற்றின. இந்த ஐந்து நாள் பேரெழுச்சி, ஐக்கிய நாடுகள் சபைக்கு 10 முறைப்பாடுகள் சமர்ப்பித்தது. தமிழ் பிரதேசங்களை அபகரித்தல், தமிழ் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் போன்றன இவற்றுள் அடங்கும். இந்த நடைபவனி முடிந்ததையடுத்து 5 பொலிஸ் நிலயங்களைச் சேர்ந்த 5 அதிகாரிகள், சாணக்கியனை விசாரணைக்கு உட்படுத்தினர். ஆக்கிரமிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தைக் காரிருள் மேகங்கள் சூழ்ந்து நின்று அச்சுறுத்துகின்றன. பௌத்த குருமார்கள் கோயில்குளம் என்று சொல்லி, நில அபகரிப்பில் ஈடுபடுகின்றனர் . மறுபுறத்தில் அரசாங்கம் மேற்கு எல்லைப்புற மேய்ச்சல் நிலங்களையும் விளைநிலங்களையும் அபகரித்து, சிங்கள குடியேற்றப் பிரதேசமாக்க முயல்கின்றது. மட்டக்களப்பு அபயக்குரல் எழுப்பும் இந்த அபாய கரமான சூழ்நிலையில் --- கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் மூவரும், அரசுக்கு வாசனையூட்டிய சுகந்தம் வீசும் பன்னீர் தெளித்து ஆலவட்டம் வீசி, நாடாளுமன்றில் கண்ணாடிப் பேழையுள் வைத்த களிமண் பொம்மைகளாய், கடுவன் பூனை கண்ட சுண்டெலிகளாய் முழிச --- சாணக்கியன் நில அபகரிப்பு முயற்சியைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் சிங்கமாய் கர்ச்சிப்பதைப் பார்க்கின்றேன். அரசியல் புயலொன்று வருகிறதா? ‘‘ தமிழர்களும் முஸ்லீம்களும் இணைந்து, சிங்கள அரசு கிழக்கில் நடாத்தும் அடாத்தான அபகரிப்புகளுக்கு முடிவு காணாவிட்டால், இரு சமூகங்களும் கிழக்கில் இல்லாமல் போய்விடும்‘‘ எனும் சாணக்கியன் பிரசாரம், முஸ்லீம் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமாய் பேசப்படுகின்றது. அந்தச் சூடான பரப்புரையின் விளைவுதான், தந்தை செல்வாவின் ஆசிகள் பெற்ற கல்முனை மசூர் மௌலானாவின் பின்னர், தமிழ் அரசுக் கட்சிப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்த முஸ்லீம் சமூகம், சாணக்கியனை பெரும் ஆவலுடன் அரவணைத்துப் பார்க்கின்றதே?கனடா தேச புலம்பெயர் முஸ்லீம் சகோதரர்கள், சாணக்கியனை உரை நிகழ்த்த அழைத்தமை சிந்தனைப் போக்கில் ஏதோ பேசுகின்றதே? சென்றவிடம் எல்லாம் ஈழத் தமிழர் நலனுக்காய் ஓயாது ஓடியோடி உழைக்கும், பெருமைகள் பலவும் பேரலையாய் எழுந்து நின்று, தேன் இனிய கீதம் இசைக்கும், தமிழ் அரசுக் கட்சியின் துடிப்பான சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களே
வாழ்க!
வையகம்
வாழ்த்த வாழ்க!
வானவர்கள்
வாயார வாழ்த்தி அருள் பொழிய நலமே வாழ்க!
முனிவர்கள்
முன்நின்று நறுமலர் தூவி வாழ்த்த நலமே
வாழ்க!
நோய்நொடியின்றி
என்றென்றும் சுகதேகியாய் நலமே வாழ்க!
செய்
தொழிலில் சிறப்பாய் ஜெயம் பெற்று நிறைவாய் வாழ்க!
மக்கள்
வெள்ளம் தினம் சூழ்ந்துநின்று வாழ்த்த நலமே வாழ்க!
இறைவனருள்
இதயம் நிறைந்து பொலிய என்றும் நலமே வாழ்க!
கதிர்
பாலசுந்தரம்,
தமிழ்
அரசுக் கட்சி உதய கால உறுப்பினர்
ஆசிரியர்
1 அமிர்தலிங்கம்
சகாப்தம்
2 சத்தியங்களின்
சாட்சியம் (அமிர்தலிங்கம்
பற்றியது)
3 கோப்பாய் கோமான் கு.வன்னியசிங்கம்
கதிர்
பாலசுப்பிரமணியம் அவர்களின் முகப்புத்தகத்தில் இருந்து
(இலங்கைத்
தமிழ் அரசுக் கட்சி ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர்)
#துஷி
தகவல்
சோமசூரியம் திருமாறன் (facebook)
Post a Comment