2009 மே மாதம் எந்த மண்ணில் யுத்த வெற்றி கொண்டாட்டம் இடம் பெற்றதோ 13 வருடங்கள் கழித்து அதே மாதம் அதே மண்ணில் 2009 இறுதி யுத்தத்தில் இறந்தவர்களுக்கான நினைவுச்சுடரும் ஏற்றப்படிருக்கின்றது.
2009 இறுதியுத்தத்தின்
போது மகிந்தவின் தலமையில் இருந்த சிங்கள இனவெறி அரசு மேற்குலக துணையுடனும்
தடை செயப்பட்ட ஆயுதப் பிரயோகங்களுடனும் அப்பாவி தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்து விட்டு யுத்த வெற்றி எனும் பெயரில் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக
யுத்த வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடியது.
இன்று
எந்த மக்களை கொன்று விட்டு யுத்த வெற்றி கொண்டாட்டம் இடம்பெற்றதோ அதே யுத்தத்தில் இறந்த
மக்களுக்காக யுத்த வெற்றி கொண்டாட்டம் இடம்பெற்ற அதே காலி முகத்திடலில்
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலின் நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டிருக்கின்றது.
இயற்கையின் நீதியும் எம்மை மீறிய சக்தியும் அவை தரும் தீர்ப்பும் காலம் கடந்தும் உண்டென்பது மீண்டும் ஓரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
Post a Comment