முள்ளிவாய்க்கால் மண் எம்மை வாஞ்சையோடு அழைத்தது
வங்கக்
கடலும் மறுபக்கம் நந்திக் கடலும்
காப்பரணாய் எம்மைக் காத்து நின்றது.
எத்தனை
வருடங்கள் சென்றாலும்
இதயத்தில்
இருந்து மாறாத ரணகள நினைவுகள் அழியாது.
தாயக
பூமியில் நல்ல தண்ணீர் வளம்
இருந்தது
."மணிநீரும்
மண்ணும்" எனும் வள்ளுவன் குறளமுதம்
வாழ்வு தந்தது.
தலை
சாய்ந்து வாழ்வதற்கும்
தடம் பதித்து போரிடவும்
பதுங்கு
குழி அமைத்து
பக்குவமாய்
வாழ்வதற்கும்
கட்டிய
ஆடையுடன்
கையிலே ஏதுமின்றி
சொந்தங்கள்
சிதறிவிட
சொத்தெல்லாம்
இழந்தநிலையில்
எட்டுத் திசையிலிருந்தும்
இங்கு வந்த மக்களே
அன்னை
அணைப்பது போல் அனைத்து நின்ற
மண்.
ராமன்
காடேக தாமும் உடன் கூடி
தாரணி
யெலாம் வந்தது போல்
தலைவன் பதித்த தடம்
தாமும்
பின் பற்றி
தமிழினமே
வந்த இடம்
பகைவனின்
நெஞ்சம்
பதறி
துடித்ததனால்
எல்லை
யிலா ஆத்திரத்தில் எம்மை இனத்தை அழிக்கின்றனர்
போதி
தர்மனின் பிள்ளைகள் அவர்கள்.
ஏதும்
அறியா எம் இனம் மீது
கருணை
ஏதும் இன்றி காடையர்கள் ஆகி
வேட்டை
நாய்களாக வெறிகொண்டு தாக்கினர்.
கிழிந்த
உடலுக்கு மருந்தைத் தடுத்தனர்.
ஒட்டிய
வயிற்றுக்கு உணவைத் தடுத்தனர்.
பட்டினி
கிடந்த மக்கள் மீது
பகவானின்
இனத்தினர் பாதகம் செய்தனர்.
தலைவனின்
பிள்ளைகள் சண்டை செய்தனர்.
தவிப்பவர்
வயிற்றுக்கு கஞ்சி கொடுத்தனர்.
இருந்த
மருந்தை எல்லோருக்கும் கொடுத்தனர்.
ஏங்கிய
மக்களை அணைத்து நின்றனர்.
சிதைந்த
உறவுகளைக் தேடி அலைந்தவர்களுக்கு
ஆறுதலாக அவர்கள்
கரம் கொடுத்தனர்.
வான்படை
கொண்டு எம்மை அழித்தீர்
எறிகணை
வீச்சால் இதயம் கிழித்தீர்
எரி
குண்டு வீசி ஊரை கொளுத்தினர்.
அக்கினி
பிளம்பாய் மண்ணை ஆக்கினர்.
எத்தனை
கொடுமைகள் எமக்குச் செய்தீர்
அத்தனை
அத்தனை கொடுமைகள் உமக்கே
சேரும் .
அனுமனின்
வால் தீ ஆயுளை கொல்லும்
Post a Comment