போதி_தர்மரை #சீனர்கள் கொலை செய்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

சமீபத்தில் போதி தர்மர் பற்றிய தமிழ் புத்தகம் ஒன்றைப் படித்தேன். அதன் கருத்துக்களின் எதிரொலிப்பே இந்த பதில்.

1.போதிதர்மர் 28 வது புத்தர் தலைவர் ( புத்தம் என்பது சுயமற்ற நிலை, நபர் அல்ல).

2.அவர் மகாயான புத்தத்தை சீனாவில் பரப்புவதற்காக, அவரது குருவான பெண்துறவி 'பிரஞ்யதாரா' (27 ம் புத்த தலைவர்) என்பவரால், தமது மத்திய வயதைக் கடந்த பிறகேசீனா அனுப்பப்பட்டார்.

3.உழைப்பதும், சுறுசுறுப்பாக இருப்பதுமே வாழ்க்கை என்று போதித்த புரட்சியாளர். அதனாலேயே கொரியா, ஜப்பான் உள்பட தென் கிழக்கு ஆசிய நாட்டவர்கள் கடின உழைப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

4.தியானம் என்கிற வார்த்தையே மருவி த்யான்-> சான்-> ஜென் என வழங்கப்பட்டது. கம்போடியா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இவரை வணங்குகின்றனர். ஷாவோலின் கோவிலில் இருந்த துறவிகள் நோஞ்சானாக இருந்ததால், பகைவர்களால் அடிக்கடித் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதனால் அவர்களுக்கு தற்காப்புக்கலை பயிற்றுவித்தார் ஆகவே மாஸ்டர் தாமோ, தருமதாய்ஷி போன்ற பெயர்களில் வணங்கப்பட்டார்.

5. எதற்கும் அஞ்சாதவர். சீனப் பேரரசர்களிடம் துணிச்சலாக எதிர்ப்புரை கூறியவர். முரடன் என்றும், கிறுக்கன் என்றும் அழைக்கப்பட்டார். சித்துவித்தைகள் அனைத்தும் அறிந்தவர். நீரில் நடப்பது, ஆகாயத்தில் பறப்பது உள்பட.

6. புதைக்கப்பட்டப் பிறகு, மீண்டும் எழுந்து ஒரு கால் செருப்பை மட்டும் தோளில் மாட்டிக் கொண்டு, இமயமலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். மறு செருப்பை தன்னைப் புதைத்த இடத்திலேயே விட்டுச் சென்றார்.

7. மகான்கள் தனது உடலை உகுக்க வேண்டிய காலம் வந்ததும் ஏதாவது சாக்கைக் காரணமாக வைத்து, உடலைத் துறக்கின்றனர். அவர்களைக் கொல்வது யாராலும் இயலாது. ஒளிநிலை அடைந்தவர்கள், மற்றவர்கள் மனதில் நினைப்பதையும் அறிவார்கள்.

8. புருவ மத்தியில் உள்ள சக்கரம் திறக்கப்பட்டு, நெற்றிக்கண் கொண்டு இருந்தார். அவரால் பார்வை மூலமாகவேத் தன்னை உணர வைக்க இயலும். ஆகவே யாரையும் பார்க்காமல், சுவரைப் பார்த்து 9 ஆண்டுகள் தியானம் செய்தார். தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததால் சுவரில் துளை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

9. புத்தர் வாழ்ந்து 1000 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்ந்தவர். மிகவும் கொண்டாடப்பட வேண்டிய தமிழ் மகான். சித்தார்த்த புத்தர், காளான் விசமானதால் மரணமடைந்தார். அது போலவே, இவரும் உணவு

10. மரணத்திற்கு முன்பே, தனது பொறுப்புக்களைத் தொடர 'ஹ்யூகே' என்பவரைத் தேர்ந்தெடுத்தார். சீடர்களிடம் தனது போதனைகள் என்ன? என்று கேட்டபோது, ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். மவுனமாக நின்றவரே போதிதர்மரால்தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில் அவரது போதனைகளை 'உணர மட்டுமே முடியும்; உரைக்க முடியாது' என்பதே அதன் பொருள்.

11. புண்ணியம் பெறுவதற்காக நல்ல காரியங்கள் செய்பவர்கள், கனவில் வாழ்பவர்கள் என்று சாடினார். ஆலயங்கள், விகாரைகள் கட்டுவதால் பலனேதும் விளையாது. இயற்கையாக வாழ்வதே வாழ்க்கை என்றார்.

போதி தருமன்:

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவினா்.புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர்தான் இந்த போதி தர்மர்.

நன்றி:அரங்கன்.

Mathavan Venugopal  (facebook)





0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post