திரு.அன்ரன் பிலிப் சின்னராசா அவர்கள் காலமானார் ! இவர் 1983 யூலை 25, 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற வெலிக்கடை சிறைப் படுகொலைகளிலிருந்து தப்பிய அரசியல் கைதிகளுடன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருந்தார்.1983 september 23 அன்று சிறையிலிருந்து தப்பிய அரசியல் கைதிகளில் இவரும் ஒருவர். இறுதிப் போரின்போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் மன்ற விசாரணைகளுக்குத் தேவையான ஆவணத் தொகுப்பு விடயங்களில் திரு.பிலிப் சின்னராசா அவர்கள் அண்மைக்காலங்களில் செயற்பட்டு வந்துள்ளார். திரு. அன்ரன் பிலிப் சின்னராசா ஒரு தமிழர் விடுதலைச் செயற்பாட்டாளர் ! ஒரு மனிதாபிமானி! சலிப்படையாத தொண்டர்! தன்னலமற்ற சேவை மற்றும் எண்ணற்ற தன்னார்வப் பணிகளுக்காகப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுபவர். ரொறொன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகத்தோடு நீண்ட காலமாக இணைந்து இயங்கி வந்தவர். என்பது குறிப்பிடத்தக்கது .
Murali canada (facebook)
Post a Comment