துருக்கி - சிரியா பூகம்பத்தில் தன்னம் தனியாக உயிர் தப்பிய குழந்தை "அயா' பற்றி இன்று உலகம் முழுவதிலும் பேசப்படுகின்றது...
இந்த
குழந்தையும் மருத்துவமனை சூழலும் இற்றைக்கு
24 வருடங்களிற்கு முன்
எம் கையில் தாய் தந்தையை இழந்து
தத்தளித்துக் கொண்டிருந்த
றொசானி என்ற
தமிழ் குழந்தை பற்றிய நினைவுக்குள் மீண்டும் என்னை துரத்தியது........
ஓயாத
அலைகள் யாழ் நோக்கி
நகரத் தொடங்கவே
நாங்களும்
எமது தற்காலிக சத்திரசிகிச்சை கூடத்தை (தற்காலிக மருத்துவமனை) கிளி, சிவநகர் பகுதியில் உள்ள
வீடோன்றில் அமைத்திருந்தோம்.
பூநகரி
கடல் பகுதியால் காயமடைந்தவர்கள் விரைவாக பின் களத்திற்கு அனுப்புவதற்கு
வசதியாக அந்த இடத்தினை தெரிவு
செய்திருந்தனர்.
வழமையாக
காயமடைந்த போராளிகளால் நிறையும் மருத்துவமனை இம் முறை இராணுவத்தின்
எறிகணைத் தாக்குதலால்
காயமடைந்த மக்களின் வேதனை
ஒலிகளால் அதிர்ந்து கொண்டிருந்தது
.....
அவசர
முதலுதவி சிகிச்சை முடித்து கையிலும், வயிற்றிலும் காயத்துடன் களமருத்துவப் போராளிகளால் றொசானி என்ற
குழந்தை சிவநகரில்
அமைந்திருந்த எமது தற்காலிக மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டாள்,
அப்போது
அவளிற்கு இரண்டரை வயது, உடனடியாக வயிற்றிலும் கையிலும் சத்திரசிகிச்சை
செய்யபட வேண்டியிருந்தால் எமது
மருத்துவ அணி வெற்றிகரமாக
அவளுக்கான சிகிச்சைகளை
முடித்தது.
அதன் பின்னாக அவளுடன்
கழிந்த பொழுதுகள் தந்த வலிகள் வார்த்தைகளிற்குள் வரையறுக்க முடியாதவை......
அவளை அதி தீவிர
சிகிச்சை பிரிவுக்கு கொண்டு
செல்கின்றோம்
வழமையாக
காயமடைந்த போராளிகளால் நிறையும் ICU இம்
முறை காயமடைந்த குழந்தைகள், முதியவர்கள், பெண்களாலும் நிறைந்து கிடந்தது.
ரொசானி
மட்டுமல்ல பவிசன், நமிதா, அரவிந், கம்சிகா என்று இன்னும் சிறுவர்கள் பாரிய காயங்களுடன் இருந்தார்கள் ஆனால் அவர்களிற்கு அம்மா அல்லது அப்பா அருகில் இருந்தார்கள் ஒரு ஆறுதலுக்காவது...
ரொசானிக்கு
எல்லாம் நாங்கள் தான்
சில
மணி நேரங்களில் அவள் மயக்கம் தெளிந்தவுடன்
"அம்மா, அம்மா, தண்ணீ தண்ணீ" என்று முணுமுணுத்தாள் இரவு
முழுவதும் இதை
மட்டுமே அவளது உதடுகள் மீண்டும்
மீண்டும் சொல்லி கொண்டிருந்தன.
வேறு எதையும் கேட்கும்
அளவிற்கு அவளது உடல் நிலையில்லை
வலது கையில் கட்டு, இடது கையில் ஊசி
மூலம் நாளத்திரவம் ஏறிக்கொண்டிருந்தது.அம்மா...... என்று அவள் கூப்பிடும் ஒவ்வொரு
சொல்லும் எங்கள் இதயங்களை செயல் இழக்க செய்வதான உணர்வு.
காலை
விடிந்தவுடன் என்ன நடக்குமோ எப்படி சமாளிப்பது,
புராணக்கதையில் படித்ததைப் போல் சிவபெருமான்
பன்றி குட்டிகளின் தாயாக வந்ததைபோல்... ஏதாவது நடந்து விடுமா என்ன
அடுத்த நாள் சூரிய உதயம்
வரக்கூடாது என்று மனம் விரும்பியது இப்போது
மங்கல் வெளிச்சம் விடிந்தால் எங்கள் புதிய முகங்கள்....
எதிர்பார்த்ததைப்
போல் காலை றொசானி கண்விழித்தும்,
விழிக்காமலும் அம்மாவை வரச் சொல்லுங்கள்
என்றாள் அறிமுகமே இல்லாதது எங்கள்
முகங்கள் மட்டுமல்ல எங்கள் உடைகளும் எல்லாம் தான் இராணுவ கட்டுப்பாட்டு
பகுதியில் பிறந்து வளர்ந்தவள் ரொசானி .
அது
எங்கள் தற்காலிக மருத்துவமனை என்பதால் பெரிதாக எந்த கட்டட வசதிகளும்
இருக்கவில்லை தகரத்தால் போடப்பட்ட கொட்டகையே ICU ஆகத் தயார்ப்படுத்தி இருந்தோம்,
மக்கள்
குடியிருப்பு பகுதியாக இருந்தாலும் மக்கள் இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் ஒரு சில குடும்பங்கள்
மட்டும் அவ்வப்போது வந்து தூரத்தில்
இருந்தார்கள்.
ரொசனிக்கு
போடுவதற்கு எங்களிடம் மாற்று உடைகள் இருக்கவில்லை
, அவளுக்கு
சட்டை ஒன்றை வாங்குவதற்காக கிராமத்தில் இருந்த சில வீடுகளிற்கு
ஏறி இறங்கினோம், அங்கு கடைகள் எதுவும் இல்லை கடைக்கு போவதென்றால் தொலைவில் உள்ள
ஸ்கந்தபுரம் போகவேணும்.
அது இப்போ சாத்தியமாகாது தொடர்ந்து காயம் வந்து கொண்டிருந்தது இரவு பகல் நித்திரை
இன்றி பணிதொடர வேண்டியதாகிற்று, கிடைத்த சட்டையை கொண்டு வந்து உலர்த்தி அயன் செய்து போடுவதற்கு
முயற்சித்த போது காயத்தின் வலியை
மீறி
அவளது
மான்விழிகளிலிருந்து பாய்ந்த
கண்ணீர் உச்சிவெயிலில் தகரக்கொட்டிலின்
வெப்பம் தணித்தது.
"எனக்கு
இந்த சட்டை வேண்டாம் என்ர கடையில் போய்
வடிவான சட்டை எடுத்து வாங்க" ( கடையின் பெயர் நான் இப்போ மறந்து
விட்டேன்) அடுக்கு சட்ட வேணும், சிவப்பு
கலர் தான் போடுவன் "
ரொசானி
சாவகச்சேரியிலுள்ள பிரபல வர்த்தகரின் மகள் அவர்களிற்கு ஒரு
புடவைக்கடையும் இருந்ததாக தகவல் அறிந்தோம்.
இராணுவக்
கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இராணுவம்
சாவகச்சேரி யை விட்டு வெளியேறியபின்,
மக்கள் யாழ் நகருக்குள் செல்வதற்கான
வழிகளையும் மறிந்து பின் குடியிருப்புகள்
மீது செல் தாக்குதலை நடத்தினார்கள் அதில்
காயமடைந்தவளில் ரொசானியும்
ஒருத்தி..
ரொசானியின்
அம்மா, அப்பா, அக்கா மூவரும் வீட்டில் விழுந்த எறிகணை தாக்குதலால் இறந்து போக எமது மீட்பு
அணியினரால் அவள்
மட்டும் கட்டிட இடிபாடுகளிற்குள் கிடந்து காயங்களுடன் மீட்கப்பட்டாள்,
இப்படி
காயமடைந்தவர்களை கடல்வழியாக வன்னிக்கு எடுத்து வந்தார்கள்.
ரொசானி
எதைக்கொடுத்தாலும் வாங்க மாட்டாள் சூப்பி போத்தலில் பால் கொடுத்தால்
தூக்கி எறிவாள், "என்ர வள்ளச்சூப்பி எங்கே"
என்று அடம்பிடிப்பாள்,
பாவம்
இந்த குழந்தையின் நிலமையை எண்ணி மனம் துடித்தது, எதைச்
சொல்லி ஆற்ற முடியும் எம்மால்
ஆனாலும்
அவள் உயிர்பெற்று மீண்டும் எழுந்து விட்டாள் என்பது மகிழ்ச்சிதான்.
dr சதாநந்தன் சில
நாட்களில் அவளுக்கு தேவையான பொருட்களை
எல்லாம் வாங்கி
வந்தார் அவர்மட்டும்
இல்லை நிலமை சரியாக இன்னும் பலரும் வெளியில்
சென்று வரும்போதெல்லாம்
அவள் கேட்பதை வாங்கி வந்தனர், ஆனாலும் அவள் கண்கள் பலம்
இழந்தே கிடந்தன. வானவில்லின் நடுவே ஒரு
கரும் கோடுபோல் முகம் பளிச்சென்று அவள் இழந்ததை காட்டிக்கொடுத்தது,
மற்ற நோயாளிகள் எல்லாம்
மேலதிக சிகிச்சைக்காகவும் உறவுகளிடமும் வவுனியாவுக்கு அனுப்பப்பட்டவுடன்...
அந்த
மருத்துவ குழாமின் செல்லப்பிள்ளை யாகி எமது பாதுகாப்பில்
இருந்தாள் ரொசானி
அவளது
பகல் பொழுதுகள் ஒருவாறு கழிந்து விட்டாலும் இருள்வர
அவள் அழுகையும் தொடங்கிவிடும், அம்மா அப்பா, அக்கா
பதில்
சொல்ல முடியாது எம் இதயங்களும் கரையத்தொடங்கும்
இரவுகளின் கொடிய
பொழுது அது...
அவளது
காயம் மாறி உடல்நிலை நன்றாக
வந்த ஒரு நாளில்....
அரசியல்
துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணா வின் மூலம் கிடைத்த
செய்தி மகிழ்வைத் தந்தது எமக்கு.
ரொசாணியின்
தாய் மாமன் இங்கிலாந்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும் சகல சட்ட நடவடிக்கைகளுடன்
ICRC மூலம் ரொசானி இங்கிலாந்திற்கு
பறக்க போகின்றாள்.
பத்திரமாக
இங்கிலாந்து போன செய்தி எமக்கும்
நிறைவாகியது.
ரொசானி
இப்போ வளர்ந்து பெரியவளாகி நல்ல தொரு நிலையில் இங்கிலாந்தில்
வசிப்பாள். ஆனாலும் அவள் சந்தித்த இழப்புக்கள்
ஈடு செய்யப்பட முடியாதவையே.....
நன்றி
மிதயா
கானவி
12.02.23
Post a Comment