குலம் எழுதிய புலிகளின் ஆரம்பம் `நினைவழியா நாட்கள் நூல் கனடாவில் வெளியீடு!

புலிகளின் ஆரம்பகால செயற் பாட்டாளரான அவ்ரோ குலம் /குலமண்ணா என்றும் அழைக்கப்படும் செல்லையா ராஜகுலசேகரம் அவர்கள்  இளமாறன் என்ற பெயரில் `நினைவழியா நாட்கள்` எனும் இந்த நூலை எழுதியுள்ளார்.   இந்  நூல் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்  08 நாள்  சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் (zürich) நகரில் வெளியீடு செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து லண்டன் நகரிலும்  மற்றும்  பாரிஸ் நகரிலும் அறிமுக வெளியீடுகள்  செய்யப்பட்டன. 

இந்த வரிசையில் அறிமுக வெளியீடு கனடாவிலும் ஈழமுரசு பத்திரிகையின் அனுசரணையுடன் நேற்று (28.07.2023) நடைபெற்றது.

மாதகல் கண்ணன் தலைமையில் கோதை அமுதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் .


கனடியத்தேசியக்கொடி;  மருத்துவர் குமுதினி மகஜெயம் (தமிழீழ பொதுஜன வாக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்),   அவர்களாலும்,


தமிழீழ தேசியக்கொடி: சிவபாலன் பாலசுந்தரம் (லெப்.கேணல் குமரப்பாவின் சகோதரர்) அவர்களாலும் ஏற்றப்பட்டன.


மங்கள விளக்கேற்றல் முன்னாள் புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் ரி.கமலநாதன், சச்சிதானந்தன் பார்த்திபன் (மாவீரர் தமிழேந்தி அவர்களின்  பெறா மகன்)

ஆய்வுரை  பேராசிரியர் சந்திரகாந்தன்


மதிப்பீட்டு உரை : சுப்பிரமணியம் இராசரட்ணம்


நன்றி உரை: விஜிதரன் வரதராஜா 


வெளியீட்டு உரை : நடராஜா அரியரத்தினம் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டன.

கனேடிய தேசிய கீதம் தமிழ் பூங்கா பள்ளி  மாணவர்கள் பாடினார்கள்.

நூல் வெளியீடு; முதல் பிரதியை ஈழவேந்தன் (தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னநாள் ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர்)  வழங்க, மாவீரர் தமிழேந்தி அப்பாவின்  சகோதரி கமலரஞ்சிதம் பெற்றுக்கொண்டார்.




இறுதியாக  ஏற்புரை zoom ஊடக குலம் வழங்கினார்.

பல நூற்றுக்கணக்கானஇன உணர்வாளர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




















0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post