சிறப்பாக
மட்டக்களப்பிலும் குறிப்பாக இலங்கையிலும் அந்தப் பெயரை அறியாதவர் அன்று யாரும் இல்லை
திருமலை-
மட்டக்களப்பு பிரதேச கத்தோலிக்க மக்களின் பேராயராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்
தார். ஆண்டகை எனவும் அவரை அழைப்பர்
அவர்
கையை முத்தமிட பக்தர்கள் போட்டி போடுவர்
உள்நாட்டு
போர் தீவிரம் பெற்றிருந்த காலம் அது
மரணங்கள்
மலிந்திருந்த காலம் அது
இனங்களுக்கு
இடையே பகையும் முரணும் அவநம்பிக்கையும்
மிகுந்திருந்த காலம் அது
நெருக்கடியான
அந்தக் காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை ஒளியாக
நின்று
தன்னால்
முடிந்தவரை மக்களுக்கு உதவியவர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
அதிகாரபலம்
மிக்க ஆட்சியாளர்களுக்கும் அதிகார பலமற்ற மக்களுக்கும் இடையில் .
நின்று
கொண்டு மக்கள் நல நாட்டத்தோடு செயல்பட்டவர்
அவர்
உதவியும்
ஆதரவும் தேடி தினம் தோறும்
அவரிடம் செல்லும் பலரை நான் நேரடியாகவே
கண்டுள்ளேன்
அவர்களிடையே
கிறிஸ்தவர்களும் இருப்பர் இந்துக்களும் இருப்பர் இஸ்லாமியர்களும் இருப்பர் பௌத்தர்களும் இருப்பர்
செல்வந்தரும்
இருபபர் வறியவரும் இருப்பர்
மட்டக்களப்புக்கு
வரும் பெரும் அதிகாரிகளும் பிற
நாட்டுத்
தூதுவர்களும் அவரின் ஆசி பெற்ற பின்னரே
தம் கடமைகளை இங்கு தொடங்கினர்
அனைத்து
தரப்பினருக்கும் அவர் பெரு நம்பிக்கைக்
குரிய வராக இருந்தார்
அவருக்கும்
எனக்குமான உறவு மிக சுவாரஸ்யமான
து
1983 களில்
நான் யாழ்ப் பாண பல்கலைக் கழகத்தில்
பணியாற்றிக் கொண்டி ருந்தபோது ஒரு ஊர்வலத் தில்
அவரோடு அருகாக நடந்து செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது
என்
கையை பற்றிப்பிடித்த அவர்
"நீங்கள் தானா மௌனகுரு?"
என்று கேட்டார்
நான்
ஆச்சரியத்தோடு
ஆம் என்றேன்
"உங்களைப்
பற்றி வித்துவான் கமலநாதன் என்னிடம் நிறைய கூறியி ருக்கிறார். கரம்பனிலிருந்து
மட்டக்களப்பு சென்று. நான் அங்கு பணியாற்றுகிறேன் மட்டக்களப்பினராக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். அங்கு வாருங்களேன் "
என்று
அவர் கூறியமை இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது
1991 இல்
கிழக்கு பல்கலைக் கழகத்தில் இணைந்தேன்.
பின்னர் அவரை அடிக்கடி சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது
சென்
மைக்கல் கல்லூரியில்
எனது
சிறுவர் நாடகங்களை மேடை இட உதவினார்
முன்னால்
இருந்து பார்த்து ரசித்தார்
நான்
பல்கலைக் கழகக் கலைப் பீடாதிதிபதியாக இருந்த காலத்தில் இங்கு நான் எதிர்கொண்ட
பல சவால்களைச் சந்தித்து வெற்றி கொள்ள
அவர் ஆலோசனைகளும் ஆதரவும் உதவிகளும் வெகுவாகத் துணை புரிந்தன.
என்
மனைவி சித்திரலே
காவுக்கும் நெருக்கமானார்
பிரஜைகள்
குழு
பெண்கள் உரிமை
இன நல்லிணக்கச்
செயற்பாடுகள்
என அவை விரிந்தன
கலைப்புலத்தில்
வேலை செய்ய எனக்கும்
சமூக தளத்தில் வேலை
செய்ய என் மனைவிக்கும் பெரும்
துணையானார். பெரும் பலமும் ஆனார்
மட்/ சென்
மைக்கல் கல்லூரியில் அப்போது வித்வான் கமலநாதனின் மனைவி கமலா
அக்கா அதிபராக இருந்தார்.
ஆண்கள் கல்லூரியில் ஒரு பெண் தலைமைத்துவம்
அதற்கும்
பக்கபலமாக இருந்தவர் சுவாம் பிள்ளை அவர்கள்
சுவாம்
பிள்ளை. அவர்களின் வெள்ளி விழா கொண் டாட்டத்தின்
போதுஅவரைப் பற்றி பேசவும் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக் கவுமான ஒரு பெரும் கௌரவத்தை
மட்டக்களப்பு கத்தோலிக்க மக்கள் எனக்கு அளித்தனர்
ஓய்வு
பெற்ற. அவர் இப்போது திருமலையில்
அவர்களுக்கான ஓய்வு விடுதியில் அமைதியாக ஓய்வெடுக்கிறார்
இம்முறை
பயணத்தில் திருமலை சென்று அவரை சந்தித்து வருவதும்
எனது திட்டமாக இருந்தது
யாழ்ப்பாண
பல்கலைக்கழக நூலகர் தீசன்ஜெயராஜாவும் பிதா
நவாஜியும் இதற்கு உத வியாக இருந்தார்கள்
உப்பு
வெளியில் அவரது ஓய்விடம் அமைந்திருந்தது
அதைத்
தேடிக் கண்டு பிடித்தது ஒரு கதை
நாங்கள்
வருவது அவருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது
எங்களை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்
மிக
மிக நீண்ட நாட்களுக்குப் பின் அவரை காணுகின்
றேன்
மேல்
ஏறிச் சென்றபோது
ஒரு சாய்மான கதிரையில்
சாய்ந்து கொண்டு நீண்ட அந்த உள்ளை உடுப்பை
அணிந்து கொண்டு ஒரு பேப்பர் வாசித்துக்
கொண்டிருந்தார்
அந்தக்
கோலத்தில் தான் அவரை நான்
எப்போதும் கண்டிருக்கிறேன்
இப்போது
முகம் சற்று மாறி இருந்தது
உடல் சற்று தளர்ந்திருந்தது
குரல் மெல்ல மெல்லவே ஒலித்தது
வாரம்
தோறும் கத்தோலிக்க மக்களை விழித்து கிறிஸ்தவ ஆலயங்களில் ஒலித்து கம்பீரக் குரல் அது
எங்களைக்
கண்டதும் எழுந்து வந்து இரு கரங்களையும் பற்றிக்
கொண்டார்.
அதே
அன்பு அதே வாத்சல்யம்
சாப்பிட்டீர்களா?
என்று கேட்டார்
வரும்
வழியில் கடையில் சாப்பிட்டோம் என்றேன்
மத்தியான
உணவுக்கு இங்கு வந்திருக்கலாமே என்றார்
அடுத்த
முறை வரும்போது இங்கு தான் உணவு என்று
சிரித்தார்
அங்கே
ஒரு ஆயரின் அன்பை அல்ல எனது தந்தையின்
பாசத்தை உணர்ந்தேன்
கூடவே
என்னுடன் அற்புதனும் மங்களேஸ்வரியும்
வந்திருந்தனர்
அவர்களை
அறிமுகம் செய்தேன்.
சில
மணி நேர உரையாடலில் பழைய
பல விஷயங்களை ஞாபகமூட்டினேன். அவர் பழைய ஞாபகங்களில்
மூழ்கிக் கிடந்தார்
அவருக்கு
88 வயதுக்கு மேல் ஆகிவிட்டது
பலவற்றை
மறந்திருந்தார்
நான்
ஞாபகம் ஊட்ட ஊட்ட அவை
அவருக்கு ஞாபகம் வந்தன
ஓம்
ஓம். எனக் குழந்தை போல
சிரித்தார்
யாருடன்
வந்தீர்கள்? என்பதை இரண்டு மூன்று தடவை கேட்டு விட்டார்
நான்
உயிரோடு இருப்பின் இவரைப் போல 88 வயதில் எப்படி இருப்பேன் என எண்ணிக் கொண்டேன்
அவரது
உதவியாளராக 27 வருடங்களாக பணியாற்றி ஒருவர் மிகச் சுவையான தேநீர் தயாரித்து பரிமாறினார்
நாங்கள்
விடை பெற்று எழுந்தோம்
. படம்
எடுப்போம் என்றேன் தனது அடையாளமான சிவப்பு
ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்தார்
மாடியில்
இருந்து ஒரு இளைஞரை போல
படபடவென்று இறங்கினார்.
எங்களோடு கார் இருக்கும். இடம்
வரை நடந்து வந்து விடை தந்தார்
அவரைப்
பிரிந்து வரும்போது ஏனோ தெரியாது
மனதை ஒரு பெரும்
சோகம் கௌவி இருந்தது
மகாராஜா
போல அவரை அன்று கண்டிருக்கிறேன்.
இப்போது சாதாரண மனிதராக ஓய்வெடுக்கிறார்
இதுவே
மனித யதார்த்தம்
வரும்போதும்
மங்களேஸ்வரி என்னிடம் கூறினார்
"நன்றி சேர்
மிகப் பெரியதொரு மனிதரை தரிசித்தேன்"
Post a Comment